Ad Widget

இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் பொதுமக்களிடம் வழங்கவேண்டும்: பான்கீ மூன்

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் காணிகளை விடுவித்தால் மாத்திரமே, மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியும் எனவும் ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக அமைப்புக்களுடைனான சந்திப்பில் உரையாற்றுகையில்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க சர்வதேச பொறிமுறை அவசியம்!

காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றும், உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச பங்களிப்புடன் கூடிய பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு அவசியம் எனவும் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மன்ற...
Ad Widget

நாட்டை பிளவுபடுத்த இடமளிக்கப் போவதில்லை; மாத்தறையில் இரா.சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எத்ர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை...

காணிகள் விடுப்பது சாத்தியமற்றது. கட்டளை தளபதி சேனாநாயக்க

'பலாலி மற்றும் வசாவிளான் விமான நிலைய சந்தியை அண்மித்த பகுதிகள், விமான நிலைய விரிவாக்கலுக்காக மூன்றாம் கட்டமாக மதிப்பீடு செய்யுப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள் விடுவிப்பது சாத்தியமற்றது' என்று யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். கீரிமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான உறுதி செய்யப்பட்ட கடிதம்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையை அரசாங்கம் கைவிடாது!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான விசாரணைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் தெரிவித்தார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஏற்கனவே கட்டாயப்படுத்தி வழங்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான மரண சான்றிதழ் மீளப்பெறப்பட்டு அதற்குப் பதிலாக 'காணமல் ஆக்கப்பட்டோர்' சான்றிதழை வழங்குவதற்கான திருத்தத்தை...

வடக்கும் தெற்கும் இணையவே ‘நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கான பாலங்களை அமைத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கத்தினால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான மனரீதியான பாலத்தினை அமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

பொருட்களின் விலையை குறைத்து சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

சம்பளத்தை அதிகரித்து, பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதிக சேவக சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் முதலீடுகள், உற்பத்திகள், வர்த்தகங்கள் போன்றவற்றை மேலும் மேம்படுத்தி அவற்றின் நன்மைகள், மக்களுக்கு வழங்கப்படும்....

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனவாதம் பேசுகின்றனர்; அன்ரனி ஜெகநாதன்

இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்குமென கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்றார். அதை நாங்களும் நம்புகின்றோம். தீர்வு கிடைக்காவிடினும், இனவாதம் பேசமால் எமது தீர்வுக்கான திட்டங்களை வடமாகாண சபை நடைமுறைப்படுத்த வேண்டுமென என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் 60 வது அமர்வு இன்றுநேற்று வியாழக்கிழமை நடைபெற்றது போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே...

எமது போராட்டம் நிறுத்தப்படவில்லை-முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

ஆயுதம் ஏந்தினோம் அது மௌனிக்கப்பட்டு விட்டது. ஆனால், எமது போராட்டங்கள் நிறுத்தப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். நல்லைக்குமரனின் 24வது மலர் வெளியீட்டு விழா நிகழ்வு யாழ்.நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,...

தெற்கின் எடுபிடிகளாக எம்மை மாற்ற முயற்சிக்க வேண்டாம் :முதலமைச்சர் சி.வி

வட மாகாணத்தின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விடயங்களில் தன்னிச்சையாக செயற்படாமல், வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவற்றை செயற்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதனை விடுத்து தெற்கின் எடுபிடிகளாக தம்மை மாற்ற நினைப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை : சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம்...

எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், போதைப்பொருட்கள் பெருமளவில் கடத்தப்படும் ஒரு தளமாக வடக்கு மாகாணம் தற்போது...

புலம்பெயர்ந்தோர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்

முதலீடுகள் அரசியல் தீர்விற்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டு, பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும்...

வைத்திய பரிசோதனைக்கு வருமாறு முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு

முன்னாள் போராளிகள் மனம் தளராது மன தைரியத்துடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளை எதிர்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ப.சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்....

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை-ஜனாதிபதி

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை...

பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் தமிழ் மொழி கொலை செய்யப்படுகின்றது

முச்சக்கர வண்டியின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகங்களின் மூலம் தமிழ் மொழி வாழ்கின்ற அதேவேளையில் பஸ் வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் தமிழ் மொழி வீழ்கின்றது என கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு புறக்கோட்டை புடைவை வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் இன்று கலந்து கொண்டு...

போர்குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா உறுதி

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான போர்குற்றங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் மழை நீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு...

இந்தியா, இலங்கைக்கு இடையில் பாலம் என்பது பொய்ப் பிரச்சாரமாகும்

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நேற்று முந்தினம் (10) பிற்பகல் இடம்பெற்ற ஒரு...

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற சந்திரிக்கா உதவ வேண்டும்!

யாழ் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு முதல்வர், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்...

அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? டக்ளஸ் கேள்வி!

அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை கோட்டை மன்னன் வித்தியா பண்டாரனும், யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியனும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடினர். அதே போன்று, வன்னி சிற்றரசின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனும், கண்டி மன்னனும் இறுதிவரை ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கெதிராகப் போரடினர்....
Loading posts...

All posts loaded

No more posts