- Tuesday
- November 26th, 2024
நடந்து முடிந்த போரானது தமிழ் மக்களுக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போரினால் தேடி வைத்த சொத்துக்கள், காணி, பூமி, வீடு, வாசல், நகை நட்டுக்கள், பொருள், பண்டங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் கல்வி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாண 10 ஆவது...
மாணவர்கள் பல்வேறு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். இது மக்களிடையே கருத்துக்களை வெளியிடவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ். இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு...
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு நேற்று (திங்கட்கிழமை) யாழ்....
'முன்னைய அரசியல் தலைமைகள், தமது அரசியல் சுயலாபங்களுக்கும் தமது நாடாளுமன்ற இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப்படுத்தி, அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும் இனவாதத்தைத் தூண்டக்கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டமையால் தான், இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின' என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றுத் திங்கட்கிழமை (19) கூறினார். 'இந்த...
இனவாதம் இல்லாத இலங்கையினை உருவாக்க வேண்டுமென்பதே எமது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தினை நேற்று (17) திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பது அடுத்த...
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவாவில் அரசாங்கம் உறுதி மொழிகளை வழங்கிய போதிலும் சர்வதேச விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குதல் உள்ளிட்ட விடயங்களில் பின்வாங்கியுள்ளதாக...
அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய...
தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பாரம்பரியங்கள், தமிழ் வாழ்க்கை முறை, சமூக ஒருமைப்பாடு ஆகியன வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கலை, கலாச்சார...
புதிய அரசியல் சாசனமானது பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், அதற்கு மாறாக எவரும் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த நாட்டில் உருவாக்கும் புதிய அரசியல் யாப்பானது சகல மக்களுக்கு ஏற்புடையதாகவும் நாடு பிளவுபடாத வகையிலும் ஒருமித்த நாட்டினுள் சகலரும் சம...
எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையென்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். வவுனியாவில் கால்நடை உற்பத்தி...
நாட்டிலுள்ள பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரெட் பாவனை குறைவடைந்துள்ளதாகவும், எனினும் போதைப் பொருள் கொண்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே...
சாரணர்களின் பாசறை நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஏராளமான விடயங்களை இளவயதிலேயே கற்றுத்தருகின்றன. பாடசாலையை விட்டு வெளியே இயற்கைச் சூழலில் நடாத்தப்படும் பாசறைகள் மாணவர்களிடையே இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தி, இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறது என்று வடக்கு சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் இந்துக்கல்லூரியின் சாரணர் நூற்றாண்டு விழாவையொட்டி யாழ் இந்துக்கல்லூரியின் திரிசாரணர்களால் வவுனிக்குளம்...
தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
2020ம் அண்டாகும் போது இந்த நாட்டின் கடன் சுமையை குறைப்போம். ராஜபக்ஷ குடும்பம் பெற்ற கடன்களை நாங்கள் அடைப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று (10) பொரளை கெம்பல் மைதானத்தில், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...
அன்று 70 ஆண்டுகளுக்கு முன்னர் 1946ம் ஆண்டு சிங்கள, முஸ்லிம், தமிழ், பேர்கர் என அனைத்து இன மக்களும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்று டீ.எஸ். சேனாநாயக்க கூறியதை இன்று நாமும் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில்...
'தமிழ் மக்கள், சிங்கள மொழியைப் படித்து, தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படுகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவு கொண்டாட்டம், கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற...
'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் அரசாங்கம் தயாரில்லை என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் வைத்து உறுதியளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் போர் குற்ற விசாரணைக்காக நீதிமன்ற பொறிமுறையொன்றை அமைப்பது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்....
விவசாயப் போதனாசிரியர்கள் தங்களைப் பயிர் மருத்துவர்களாகத் தரம் உயர்த்த வேண்டும். அதன்மூலம் விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 விவசாயப் போதனாசிரியர்களுக்கு மின்- பயிர்ச்சிகிச்சைப் பயிற்சியை வழங்கும் செயலமர்வு இன்று திங்கட்கிழமை (05.09.2016) திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்தில்...
தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு வன்முறைகளை விரும்பவில்லையென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உரிமைகளை பெறுவதற்கு இனியும் காலம் கடத்த முடியாதென தெரிவித்துள்ளார். யாழ்.தாவடியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அமிர்தலிங்கத்தின் 31ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
Loading posts...
All posts loaded
No more posts