Ad Widget

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழ் கூட்டமைப்பும் இணக்கம்

அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். புதிய அரசியல் யாப்பிலும் பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....

விடுதலைப் புலிகள் காலத்தில் இருந்த ஒழுக்கம் மரணித்துவிட்டது

வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ்ப் பிரதேசங்களில் மதுபானப் பாவனை அதிகரித்துள்ளது. கலாசார சீர்கேடுகளும், இளைஞர்கள் மத்தியில் பழிவாங்கும் மனோநிலையும் அதிகரித்துள்ளமை கவலையளிக்கிறது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு தொகுதித் தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு எங்கும் இருந்த...
Ad Widget

வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்கும்: பிரதமர்

வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை முன்னெக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்த வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறினார். விக்னேஷ்வரன் என்ன அறிவிப்புச் செய்திருந்தாலும் நாம் எமக்குத் தேவையான பிரகாரம் அரசியல் யாப்பை...

வடக்குக் கிழக்கை இணைக்க அனுமதியேன், முஸ்லிம்கள் மத்தியில் மகிந்த!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சிமுறை தொடர்பான கருத்துக்களை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் அரசியல் தரப்புடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து...

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை : வடமாகாண முதலமைச்சர்

சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினை மனிதாபிமான ரீதியில் அணுகுமாறு அரசாங்கத்தையும் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆயிரம் ரூபாசம்பள உயர்வும் 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் 06 நாட்கள் தொழிலும் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்துமாறு கோரி தொடர்ந்தும் 12 நாட்களாக மலையக தோட்ட தொழிலாளர்கள்...

விக்னேஸ்வரனுக்கு சபையில் நியாயம் கேட்டார் சம்பந்தன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக வெளியாகியிருந்த பல விடயங்களை அவர் குறிப்பிடவே இல்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென நாடாளுமன்றில் தெரிவித்தார். எழுக தமிழ் நிகழ்வின் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு, அதற்கு அரசாங்கத்திடம் பதிலை கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச்...

தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிக்க தென்னிலங்கையில் சதி : செல்வம் அடைக்கலநாதன்

விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை பிரித்து போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஒரே நாட்டிற்குள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு...

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பொது மொழியான விளையாட்டுத் துறையை முன்னேற்றி நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றிளார். விளையாட்டு மைதானம் என்பது இன, மத, குல, பிரதேச பேதங்களின்றி...

தெற்கில் சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முயற்சி!

தெற்கில் சிலர், எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். என்னைப் பேயாகவும், பூதமாகவும், தகாத...

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள்

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள்-மத்திய மின்சக்தி அமைச்சரிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய...

எமது இளைஞர்களை தொழில்சார் நிபுணர்களாக மாற்றுவதற்கு கல்விமுறையை மாற்றியமைக்கவேண்டும்!

கட்டிட நிர்மாணப் பணிகளில் மோசடிகளைத் தடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாண நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கட்டிட நிர்மாணப் பணிகளில் மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அதனை தடுப்பதற்கோ அல்லது தண்டனை வழங்குவதற்கோ...

எமக்கான அபிவிருத்திகள் தொடர்பில் எம்மிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்

யுத்தத்திற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமக்கான எந்த உதவிகளையும் செய்யவில்லை. மாறாக இங்கு மேற்கொள்ளப்பட்ட சில அபிவிருத்திகளை கூட எம்மோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகவும் மத்தியில் உள்ளவர்களை கொண்டு வடக்கை சேர்ந்தவர்களை புறக்கணித்து மேற்கொண்டு வந்துள்ளது. என சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அரசாங்க நிர்மாண...

எழுக தமிழ் : அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும்

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும் என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். ரத்டெம்பேயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,...

‘கேலி செய்தவர்களுக்கு ஒன்று திரண்ட மக்களே பதில் ஆகினர்’

தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணிக்கு குறைந்தது 500 பேராவது வருவார்களா? என்ற பலரது கேள்விக்கு ஒன்று திரண்ட மக்களே இன்று பதிலாவார்கள். இது ஒரு மாபெரும் பேரணி. மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒருங்கிணைத்த பேரணி என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று...

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா : கஜேந்திரகுமார்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் 65வருட கோரிக்கைகளையும், அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான தீர்வு கிடைக்குமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பொதுக்கூட்டம் நேற்று...

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசம் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? முதலமைச்சர் சவால்

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் அவர்களுக்கு சமஷ்டியை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு-கிழக்கு மக்களை வந்தேறுகுடிகள் என்று கூறுபவர்கள் சரித்திரபூர்வமாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பார்களானால் வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கையினை இப்போதே கைவிட்டு விடுகின்றோம் என்றும்...

விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் : அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள் அமர்வதற்கேற்ற வகையில், அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று...

வடக்கில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது

வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கி...

சிறீலங்கா தொடர்பாக உரையாற்றிய பான்கிமூன்!

நியுயோர்க்கில் நேற்று நடைபெற்ற 71ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஐநா செயலார் பான்கிமூன் சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் உரையாற்றியுள்ளார். ஐநா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா அதிபர் உட்பட 193 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். எதிர்வரும் டிசம்பர் மாதம் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஐநா செயலர் பான்கிமூன் ஆரம்ப உரையாற்றி கூட்டத்தொடரைத்...
Loading posts...

All posts loaded

No more posts