- Friday
- January 24th, 2025
பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறைக்கப்படவில்லை என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்று சமர்க்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்ட அவர் நாடெங்கும் 30,000 தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வடக்கில் 10 வருட காலமாக சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக இவர்கள் பாடுபட்டு...
கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். போராட்ட காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி இன்று கேரள கஞ்சா வர்த்தகத்தின் வர்த்தக மையமாக உருவாகியிருப்பது கவலையைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கில் 1 இலட்சத்து 50...
வடபகுதி மக்களின் ஒற்றுமை சகல மக்களுக்கும் முன்மாதிரியாக அமையவேண்டுமென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒற்றுமையே தற்போது அவசியமான ஒன்றென சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கடைத்தொகுதியை, அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கிளி.வர்த்தகர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”யாவரதும் ஒத்துழைப்பே இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தின் தேவையாக...
“எனது உயிருக்கு, பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேலதிக பாதுகாப்பை அரசாங்கத்திடம் கோரவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன், இவற்றுக்கெல்லாம் சில ஊடகவியலாளர்கள் தவறாகவும் மற்றும் திரிவு படுத்தியும், செய்திகளை வெளியிட்டமையே காரணமாகும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளரான நடேஷபிள்ளை வித்தியாதரனினால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகையின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்...
தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றை, ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாழ் நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் எதனையும் தர அரசாங்கம் தயாராக இருக்கவில்லை....
மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேம் எமக்கு தேவையான சட்ட ரீதியான உள்ளடக்கங்கள் ஒரு தீர்வில் காணப்பட்டால் அதனை தமிழர்கள் இழக்க கூ்டாது எனவும் குறிப்பிட்டார். காலைக்கதிர் நாளிதழின் பிரசுரமும் ஆரம்ப விழாவும் நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்...
நாட்டில் சகல காவல்துறை நிலையங்களிலும் தமிழ் மொழியில் விசாரணை செய்வதற்கும் தமிழ் மொழியில் முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை காவல்துறைத் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நினைவுதின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று...
மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது. அந்தவகையில், மண்ணுக்காக மரணித்த எமது உறவுகள் அத்தனைபேரையும் நாம் கூட்டாக நினைவு கொள்ளும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை என்று...
புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டை தடுப்பதில் இலங்கை பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாடுகளில் இருந்து விடுபட்ட வாழ்கை ஒன்றை அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி, மஹவலி ரிஷ் ஹோட்டலில் இடம்பெற்ற மது,...
யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாட்டின் தேசியப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மஹிந்த, இதனால் தென்பகுதியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு சுதந்திரமாக செல்வதற்கு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி...
யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதனைக் கண்ணால் கண்ட மாணவன் கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரீ.வி பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளிவந்தவண்ணமுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களை...
உலகத் தமிழ் பேசும் மக்கள், கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய கட்டம் தற்போது உருவாகிக் கொண்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். லண்டனில் சொறஸ்ரிறியன் மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள்...
வடக்கை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு நிகராக எமது பாரம்பரிய உணவுகளும் பங்களிக்க முடியும். வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (22.10.2016)...
நாங்கள் எவ்வாறு இந்த மண்ணின் சொந்தக்காரர்களோ, அதேபோன்று இந்த மண்ணுக்கே உரித்தான கால்நடைகளும் உள்ளன. கலப்பு இனங்களின் வருகையோடு நாட்டுப் பசுக்கள், நாட்டு ஆடுகள், நாட்டு நாய்கள் மீதான அக்கறை குறைந்துபோக, அவை இன்று கவனிப்பார் இல்லாமல் தெருவோர விலங்குகளாக அலைந்து கொண்டிருக்கின்றன. கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை எமது மண்ணின் இயற்கைச் சொத்தான இவற்றின்...
பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ்(Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தனதுரையில் வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான முக்கிய தேவைகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் வடக்கில் தற்போதுவரை இராணுவத்தினரின் கைவசம் ஏராளமான காணிகள்...
புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என எதிர்கட்சித் தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இளம் தொழில் முயற்சியாளர்கள் சபையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். விவசாயம், மீன்பிடி மற்றும் வாழ்வாதார துறைகள்...
கடந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மிக கூடுதலான நிதியினை ஒதுக்குகின்றார்கள் அதனை போன்றுதான் இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியம் கொடுக்காது எதிர்வரும் ஆண்டுகளில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் கூடுதலான நிதியினை ஒதுக்கவேண்டும் என்று பணிவான வேண்டுகோளை விடுக்கின்றேன் என, சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ் தெல்லிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...
வடமாகாணத்திலிருந்து 26 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மூடுமாறு வடமாகாண சபை நிர்வாகம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் வடமாகாண முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதில்...
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையானதைச் செய்து வருகின்றது. இதன்போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகின்றது. இருப்பினும், அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களைக் கைவிடாது என மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் வங்கி ஆவணங்களைத் தொலைத்த 54பேருக்கு புதிய வங்கி ஆவணங்களை வழங்கி...
Loading posts...
All posts loaded
No more posts