- Monday
- February 24th, 2025

ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இவ்வாறு முன்வைக்கப்படும் அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழிப்பதை...

சயிடம் நிறுவனம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, சயிடம் நிறுவனத்தால் வைத்திய பீட மாணவர்கள் எவருக்கும் அநீதி இழைக்கப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அக்கரபத்தணை - ஊட்டுவில் பெங்கட்டன் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

சமய நிறுவனங்கள், கோயில்கள் போன்றவை தமது கட்டடங்களைப் புதுப்பித்து சுத்தமாக, சுகாதாரத்துடன் அவற்றைப் பராமரிக்கும் அதே வேளையில், மக்கள் பணியில் ஈடுபடவும் முன்வர வேண்டும். பணமானது மக்களிடையே புழங்க இடமளிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச வைத்தியசாலைில் குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நடைபெற்றது. இதன்போதெ...

வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்...

இலங்கை அரசாங்கம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதற்கு, முதற்கட்டமாக நிலையான அபிவிருத்திச் சட்டமூலமொன்றைத் தயாரித்து மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இது மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும், அரசியல் ரீதியாகத் தமிழ்மக்களைப் பாதிப்பதாகவும் உள்ளது. இதனாலேயே, இந்தப் புதிய அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளது என்று...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். முக்கியமான இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்னெடுக்காமல் தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரா.சம்பந்தன்...

ஸ்ரீலங்கா இராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டுமென மேல்மாகாண அபிவிருத்தி, மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். போர்க் குற்றம் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச...

வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாகப் புதிய செயற்திட்டமொன்று, அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென, ஜனாதிபதி தெரிவித்தார். உயிர்க்கொல்லி டெங்கு நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயற்றிட்டம் வெற்றிபெறுவதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய பல் மருத்துவமனையின் (போதனா) முதற்...

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே, அரச படைகளும் குண்டர்களும், அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளன. இரக்கமின்றிச் சுட்டுக்கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்றுள்ளனர். அதனால்தான், எமது வடமாகாண சபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இயற்ற வேண்டி வந்தது’...

இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம்...

“தென்னாபிரிக்காவில் அரசியல் ரீதியான ஒரு தீர்வு பெற்ற பின்னரே, உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் அதைச் செய்து விட்டு, மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைத் தராது விட்டு விடுமோ என்ற ஓர் ஐயம், எம்மைப் பீடித்தே இருக்கிறது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மயூரபதி ஆலய நலன்புரிச் சங்கத்தால், கல்விசார்...

வடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது...

வடமாகாணத்தின் நீர்வளத்தை மீட்டெடுக்க மாகாணம் சார்ந்த கொள்கை திட்டமிடல் ஒன்றை வகுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து...

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளிற்கு அமைக்கப்படவுள்ள போர்க் குழாய்க் கிணறுகளினால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண நீரியல்வள அபிவிருத்தி ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

கனடா உட்பட வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பைப் பெறவேண்டுமெனில், புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், “கனடா...

எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என காணாமல் போனோர் குறித்த தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் பிராந்திய கிளை காரியாலயம் யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...

‘தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் 2017 ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்படவேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பெரும்பான்மையான சிங்கள...

இலங்கை மத்திய வங்கி அறிக்கை தொடர்பிலான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உரையாற்றுகையில் ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் இதனால், ஊழலை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்...

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சிக்குப் பலரும் இயற்கையையே குற்றம் சாட்டிவருகிறார்கள். இயற்கை வஞ்சித்துவிட்டது என்றும் இயற்கையின் கொடூரம் என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள். உண்மையில் வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் வறட்சி என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும்...

இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது என வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில்...

All posts loaded
No more posts