- Thursday
- January 23rd, 2025
வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென...
யுத்த நிறைவின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் நடத்திய மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கு மக்களின் எவ்வித பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள...
தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்...
“இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். “தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, வடக்கு, கிழக்கு...
தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார். அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின்...
நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி - கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சுதேசவாத சிந்தைனையுடன்,...
விடுதலைப்புலிகள் யுத்தத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை. கல்வி வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டினார்கள். இதனாலேயே பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய கட்டுமானங்களை உருவாக்கும் நோக்கில் அறிவியல் நகரை உருவாக்கி கட்டிட நிர்மாணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள். இப்போது அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் இயங்கி வருகிறது. நாங்களும் பண்ணையாளர்களுக்கும், எமது கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் நோக்கில் பிராந்திய கால்நடை...
இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில் பாதுகாப்புப் படையில் இணைந்து பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நாங்கள் வேலை கொடுப்போம் என்ற உத்தரவாதம் வழங்கினாலே பண்ணையை விட்டு வெளியேறலாம் என்று இராணுவம் நிபந்தனை விதித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல்...
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் இதுவரை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு,...
நேற்று , 24/04/17 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை.. தமிழர்களின் வரலாற்றுரீதியான தாயக நிலத்தின் தலைமை நகரமானதும், இந்த இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியற் போட்டியின் ஒரு கேந்திரமுக்கியத்துவம் உடைய ஒரு மையப்புள்ளியாகவும் அமைந்ததுமான இந்த...
“சிலர் தாம் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய அதீத பற்றுக் காரணமாகவோ அல்லது ஏனைய மதங்கள் பற்றிய போதிய அறிவு இன்மையாலோ ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய், ஸ்ரீ சத்ய சாயி பாடசாலையில் இடம்பெற்ற, “மதங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும்...
காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா நேற்று...
சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவக்கல்லூரியான சைட்டம் (South Asian Institute of Technology and Medicine ) தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக நிர்வாக சபையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தனிநபர் உரிமையிலிருந்து இதனை விடுவிப்பது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார். ஜனாதிபதி...
நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினது ‘போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு’ எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத் தந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) கண்டி தெல்தெனியவில் மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து...
தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும் இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினரால் வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இரசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில்...
தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளுராட்சி சபைகளுக்கானத் தேர்தலை இவ்வாண்டுக்குள் நடத்த முடியும் என தாம் உறுதியாக நம்புவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொகுதிகளுக்கான எல்லைகள் உரிய முறையில் நிர்ணயிக்கப்படாமலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தாமதமாவதற்கு காரணம் எனவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார். புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையுடன்...
இலங்கையில் படுகொலைக் கலாசாரம், 1954ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் சிறிதரன், “தமிழீழத்தைக் கண்களால் காண்பதே தங்களின் கடைசி ஆசையாகும் என்று நீதிமன்றத்தில் கூறியமையால், சிறைக்குள்ளேயே கண்கள் பிடுங்கியெடுக்கப்பட்ட நிலை அன்று காணப்பட்டது” என்றும் கூறினார். “கடந்த காலத்தில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட...
“பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “பேஸ்புக் மட்டுமே சமூக ஊடகமாகும் எனத் தவறாக புரிந்துகொண்டமையால், தங்களுடைய பெறுமதியான இளமை காலத்தை, இலங்கை இளைஞர்கள் இழந்துவிடுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசிகளை, சரியானமுறையில்...
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் யாழ் மாவட்டத்திலேயே கூடுதலான அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பால் நுகர்வு மிகக் குறைவாக உள்ளது. பால்மாவே மிக அதிகஅளவில் நுகரப்படுகிறது. இதற்குப் பால்மா நிறுவனங்களே அடிப்படைக் காரணம் என்று வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தென்மராட்சி சரசாலையில் நேற்று கிராமிய அமைச்சின் கீழ் உள்ள மில்கோ...
Loading posts...
All posts loaded
No more posts