- Thursday
- January 23rd, 2025
எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே கடன் வழங்கும் நிறுவனங்கள் எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக வடக்கு மாகாணசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிபிள்ளை தெரிவித்தார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொதுச் சந்தை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்...
நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் அனைவரும் தூர இடங்களில் சென்று பணியாற்றவேண்டும். இல்லையேல் அவர்களது நிரந்தர நியமனம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கணித, விஞ்ஞான, தொழிநுட்ப பட்டதாரிகள் 212 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்.மத்திய கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய வட...
மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்படவில்லை. அந்தவகையில்,மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது என்று சொல்லப்படுகிறது. எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்கமுடியாது என்று...
“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், வட. மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் பொன். சிவகுமாரனின் 43ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று...
பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா என்றும் பலர் கேட்கிறார்கள். பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக் கைவிட வேண்டும் என்று நாம் மனதளவில் உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று...
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பண்பாட்டு அழிப்பு முதல் அதன் பின்னரான இன அழிப்பு வரை, அவற்றை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளேனும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ். பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ். பொது நூலக முன்றலில்...
வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மத்தியில் பெண்கள் படும் அவலத்தை அறிந்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் இருந்து ஆடை தொழிற்சாலைக்கு உங்களுடைய பெண் பிள்ளைகளை அனுப்புமாறு கேட்ட போதும் தாம்...
நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்டிருந்த அடக்குமுறை ஆட்சியானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; ’நாட்டில் கடந்த கால யுத்தத்தின் காரணமாக இன்றும் கூட...
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள்...
பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அந்த சாதனைகளே இனத்திற்கும் மொழிக்கும் பெருமை தேடித் தரும் என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு...
”வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் வடக்கு மாகாணத்தை மாற்றியமைக்க முன்வர வேண்டும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மூன்று தசாப்தகாலமாக அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் பேராசிரியர் கலாநிதி குணசிங்கத்தின் உதவியில் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட இறந்தோரை நினைவுகூரும் நினைவு கட்டிமொன்றை திறந்து வைத்து, முதியோர் இல்லத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்து உரையாற்றிய முதலமைச்சர்...
நாட்டின் ஆட்சி முறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நிரந்தரமான, சமத்துவம் மிக்க சமாதானம் ஏற்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் யுத்தத்திற்கான காரணம் என்ன? அந்த யுத்தத்தின்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், உயிர் நீத்தோருக்கான எமது பிரார்த்தனை நிகழ்வு தற்போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே நான் காண்கின்றேன் என்றார். தொடர்ந்து உரையாற்றிய...
வடமாகாண வலசைப் பறவைகள் தினம் அடுத்த ஆண்டில் இருந்து பெப்ரவரி மாதத்தின் இடண்டாவது வார இறுதி நாட்களில் கொண்டாடப்படவுள்ளதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடக்கு சுற்றாடல் அமைச்சால் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை...
“வடக்கின் முக்கிய பதவிகளை வகிக்கும் இரு விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவரின் கைகளில்தான் உள்ளன” என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 8ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.விக்னேஸ்வரனுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்...
எதிர்வரும் இரண்டு வருடங்களில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார் 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் அம்மக்களது வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வு நேற்று (12)...
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990”அம்புயூலன்ஸ்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரம் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு...
வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக நாட்டுக்காக இரத்தம் சிந்திய படைவீரர்கள் இன்று, வடக்கு மக்களை வாழ வைப்பதற்காக இரத்தத்தை தானமாக வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற படைவீரர் நிகழ்வு ஒன்றில் அவர்...
நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு பிளவுபடாத நாட்டில் சுயநிர்ணயத்துடனான சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில், நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை...
வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல இயற்கைச் சுற்றுலா மையங்கள் அமைந்துள்ள போதும் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரைப் பகுதியில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ யினை நேறறு (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்....
Loading posts...
All posts loaded
No more posts