- Sunday
- November 24th, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறீலங்காவும் நேற்று கையெழுத்திட்டன. சிறீலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன்...
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து படகொன்றில் தமிழகத்தின் தனுஷ்கோடியை அடைந்த இலங்கை இளைஞனை கைதுசெய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்டம், பேசாலைப் பகுதியைச் சேரந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர்,...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4...
புத்தாண்டு பின்னிரவில் வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பெங்களுர் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கர்நாடகா மாநிலம் பெங்களுர் நகரில் உள்ள கம்மனஹல்லி பகுதியில், புத்தாண்டு இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணொருவரை வாகனத்தில் பின் தொடர்ந்த இளைஞர்கள், அவரை தடுத்து நிறுத்தி...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளரருமான ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக காலமானார். அதனைத்தொடர்ந்து, புதிய தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.கவின் பொதுக்குழு...
போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவண சோதனையின் போது, போல கடவுச்சீட்டு...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை தெற்கு இலங்கை பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற இடங்களிலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலையே நிலவும் என்றனர். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர்...
அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா, பொது செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவை கட்சியின்...
அ.தி.மு.க பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம்,"கழக...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்டம்பர் 22ம் திகதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5ம் திகதி இரவு, 11:30க்கு மரணமடைந்தார். அவர்...
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நடிகர் அஜித் நேற்று இரவு போயஸ் இல்லத்தில் சந்தித்து பேசியதாக வெளியான தகவல்களில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் ஒதுங்கியே இருப்பவர் நடிகர் அஜித். சிறுத்தை சிவாவின் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் அஜித், பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நிலையில், ஜெயலலிதா மறைந்ததும், சென்னை திரும்பி அவரது...
இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்ற போது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி திருச்சி விசேட முகாமில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டுவந்த உணவுதவிர்ப்பு போராட்டம் தற்காலிகாக கைவிடப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த ஈழத் தமிழர்களுடன் மாவட்ட தனித்துணை ஆட்சியாளர் நடராயன் மற்றும் திருச்சி மாநகர...
திருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் ஈழத் தமிழர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ஈழத் தமிழர்கள் 4 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மேலும் 2 ஈழத் தமிழர்ள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்ற...
இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்றபோது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக திருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிற்கு கோவில் தரிசனத்திற்காகச் சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தவேளை தம்மை கியூ பிரிவுக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தம்மீது விசாரணையொன்று...
தி.மு.க தலைவர் கருணாநிதி 9 நாள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ந்தேதி திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டு...
சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை அம்மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்துடன், மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவருக்குத் தரப்பட வேண்டிய 'ஆண்டிபயோடிக்' மருந்துகள் தரப்பட்டு முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் சிறப்பாக குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சியால் வர்தா புயல உருவாகி சென்னையில் கரையை கடந்த நிலையில் மீண்டும் அந்தமானுக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அந்தமானுக்கு கிழக்கே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மூச்சுத்திணறலை சீர்செய்ய டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுவதாக காவிரி மருத்துவமனை புதிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை இன்று மதியம் வெளியிட்ட புதிய செய்திக் குறிப்பில், "தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி 15-ம்...
கச்சதீவு திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழகத் தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் எழுதியமையால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் அதிக...
Loading posts...
All posts loaded
No more posts