- Sunday
- February 23rd, 2025

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த விற்பனை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, பல வாரங்களுக்கு முன்பிருந்தே, இந்த விற்பனை நிறுத்தம் தொடர்பாக, தனது சங்க உறுப்பினர்களுக்கு...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் 8ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி பன்னீர்செல்வம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு எடுத்துரைத்துள்ளார். மேலும், தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள 23 முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடிய...

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகின.

தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்தியாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில் 30 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். நேற்று மாலை 4.37 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சத்த்தியப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து...

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக, சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆட்சியமைக்க வருமாறு, ஆளுநரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் பதவியேற்கவுள்ளார். ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சற்று முன்னர் சந்தித்த பழனிசாமிக்கு, இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு வைபவம், இன்று மாலை 4.30க்கு இடம்பெறவுள்ளது. பதவியேற்றாலும், தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு, எடப்பாடி பழனிசாமிக்கு, 15...

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் நேற்று மாலை சரண் அடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று...

சரணடைய கால அவகாசம் கேட்டு சசிகலா நடராஜன் சமர்ப்பித்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய, சசிகலா இன்று காலை புறப்பட்டார். முன்னதாக பெங்களூரு புறப்படுமுன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அங்கு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்....

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்.15)சரணடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன்...

அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைகிறேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ஆம் தேதியன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்த அவர் இப்போது திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதைத்...

சிறையில் இருந்து எண்ணி இரண்டே மாதத்தில் வந்துவிடுவேன் என சசிகலா அவரது ஆதரவு எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கான வழிகளை ஜெயலலிதா தனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரையும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால் நேற்று...

சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி உன தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது. இதுவரை போயஸ்கார்டனில் தங்கியிருந்த சசிகலா தீர்ப்பு அறிவிப்புக்கு முந்தைய...

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் 4 வாரத்துக்குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து...

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை என்றும் கூறினார். இதுதவிர தற்போதைய தலைமை...

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவினரும், சசிகலா தலைமையில் மற்றொரு பிரிவினரும் அணி சேர்ந்துள்ள நிலையில், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்து என்ன நடக்க கூடும் என்பது குறித்து ஒரு விளக்கம் இதோ: ஓ.பி.எஸ் ராஜினாமாவை வாபஸ் பெற இயலுமா? வற்புறுத்தலால்தான் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக ஓ.பி.எஸ் கவர்னரிடம் கூறலாம். ஆட்சியில்...

ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர், எந்தப்பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, ஓபிஎஸின் அதிரடி பேட்டிக்கு பின்னர் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்முறையாக அவர் இன்று செய்தியாளர்களை...

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியது, வர்தா புயல் நிவாரணம் போன்றவற்றின்போது எனக்கு நல்ல பெயர்...

தமிழக ஆளுநர் மும்பைக்கு சென்றதால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய்தார். இந்த இராஜினாமாவும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. தற்போது அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரையில், தமிழக முதல்வராக...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள் ஜெயலலிதா, `செப்சிஸ்' என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது மிக விரைவாகத் தாக்கும் ஆற்றல் கொண்டது. அதனால், இதயம் பாதிக்கப்பட்டு, சிறுநீர் தொற்றும் ஏற்பட்டு. உடல் உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கின. மாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு...

டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் இரவு 10.33 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. 30 விநாடிகள் நீடித்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பதற்றமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிக்கு வந்தனர் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

All posts loaded
No more posts