- Thursday
- January 23rd, 2025
2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது...
தனது தந்தை கொல்லப்பட்ட பின்னர், பாதுகாப்புச் சூழலே மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புதல்வருமான ராகுல் காந்தி, 2009ஆம் ஆண்டில் பிரபாகரன் இறந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், அதன்போது தனக்கு இரண்டு விதமான உணர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அவரை ஏன் இப்படி அவமானப் படுத்துகிறார்களென்றும் அவரது...
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற வாகனத்தை காவலர் ஒருவர் தாக்கியதில் அந்த வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்திக் கலைத்தது. திருவெறும்பூர் பகுதியில் கணேச ரவுண்டானா என்ற இடத்தில் நேற்று மாலை...
இலங்கையில் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை கவலையளிப்பதாகவும் விரைவில் இந்நிலை மாற்றமடைய வேண்டுமெனவும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கிறது. பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த அழகிய நாட்டில்...
கடலில் புயலில் சிக்கி உயிர் பிழைத்த மன்னார் மீனவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இராமநாதபுரம் ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து முகாமில் வசித்து வந்த அவரை மீண்டும் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். மன்னார் – பேசாலை முருகன் கோவில் பகுதியை...
மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு மூலம் பயணித்த கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை தனுஷ்கோடி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நால்வரும் இன்று (வியாழக்கிழமை) தகுஷ்கோடியை சென்றடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் பகுதியை சேர்ந்த...
இந்திய வரவு-செலவுத் திட்டத்தில், இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள உதவித் திட்டங்களுக்காக கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 75 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்ட இலங்கைக்கு, இம்முறை 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைக்கவுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத்...
தமிழகத்தில் மன அழுத்தங்களுடன் வாழும் இலங்கை அகதிகளின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஈழ அகதிகள் மறுவாழ்வு மையத்தின் பிரதான வைத்திய அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 61,845 பேர் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில் தங்கியுள்ளதாகவும், இவர்களில் அதிகளவானோர் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான தற்கொலைகளைத் தடுப்பதற்காக முகாம்களிலுள்ள மக்களுக்கு ஆரம்ப ஆற்றுப்படுத்தல்...
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் (ரூபா 6.9 பில்லியன்) அமெரிக்க டொலர் நிதியினை இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை புதுடில்லியில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா (David Rasquinha) மற்றும் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்எச்எஸ் சமரதுங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய...
இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள். கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது.இந்த நிலையில் நேற்று திருமணம் முடிந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்...
நடுக்கடலில் இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்த, இலங்கை கடற்படையினர், வலைகளை அறுத்து வீசி, அவர்களை விரட்டியடித்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அவ்வப்போது, இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுகின்றனர். இதுவரை 55 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். 130 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில்,...
விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தததால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வைப் பெறுவது கடினம் எனவும், யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கொண்டு செயற்படுமாறும் டெல்லிக்குப் பயணம்மேற்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இக்கருத்தரங்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் புதுடெல்லியில் கருத்தரங்கொன்று...
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாகவும், அச் சந்தர்ப்பத்தில் இலங்கை போர் தொடர்பில் ஒரு படத்தை இயக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனை...
இந்தியாவின் கோவை மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறித்த அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள், தமிழக பொலிஸார் தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையும் காட்சியப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிகள், சீருடைகள் என்பவை...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை கடற்கரையில் கொல்லப்பட்டு கிடந்த காட்சியைக் கண்டு குற்ற உணர்வு ஏற்பட்டதென காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து, அம்மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமது தந்தையை...
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக குறித்த நிகழ்வுக்கு அனுமதித்துவந்த தமிழக அரசு திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்தது. நிகழ்வில் பங்கேற்றவர்களை பொலிஸார் கைதுசெய்தனர். மே...
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையிலும் முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் சிறை...
இந்திய மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் பெங்களூர் நகரில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாகவும், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 144 போலியான கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் மூவரும் இந்தியாவின் பல இடங்களில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் இவர்கள்...
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது உள்பட பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில்...
இந்தியாவின் பவானிசாகர் அருகே, தகராறில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பவானிசாகர் பூங்கா அருகே, மதுக்கடை ஒன்று உள்ளது. பவானிசாகர் அடுத்த காராச்சிக்கொரை பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சந்திரமோகன் என்பவர், அந்த மதுக்கடை அருகேயுள்ள பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, அங்கு குடி போதையில் இருந்த இரு இளைஞர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts