- Friday
- January 24th, 2025
யேமனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகத்துக்கு அழைத்துவரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய கடல் மற்றும் வான் படைகளின் விமானங்களும் கப்பல்களும், மேலதிகமாக ஏர் இந்தியா விமானங்களும் மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். முதற்கட்டமாக யேமனின் கடற்கரை நகரான ஏதனிலிருந்து 400 இந்தியர்களை...
உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்வி பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எல்லா சமூக ஊடகங்களிலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் வேளையில், என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில்...
கடந்த சில தினங்களாக இந்தியாவின் ஊடகங்கள் அனைத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது, நிர்பயாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான். காரணம் இந்த ஆவணப்படத்தில் பேட்டி அளித்த குற்றவாளியின் திமிர்த்தனமான பேச்சு. பிபிசி சார்பாக பெண் இயக்குநர் லெஸ்லி உட்வின் என்பவர் ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்திற்காக...
மனைவி தாமரையையும்,அவரது மகனையும் கணவர் தியாகு நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் கடந்த 8 நாட்களாக தாமரை நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்தது. திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரைக்கும், அவருடைய கணவரும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தலைவருமான தியாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...
இந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் எங்கும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்த இந்திய அரசு, அந்த காணொளியை யூடியூபிலும் நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், அதன் விலைவாக அந்த காணொளி யூடியூபில் இருந்து நீக்கப்ப்படுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணப்படத்துக்கு எதிரான இந்திய அரசின் இந்த...
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தால் அவர்களுக்கு 50 ஆயிரம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த மீனவர்கள் ஒரு மாதம் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பது என காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்கள் உள்ளன....
பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ´சுப்ரமணியபுரம்´ படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆனார். ´உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்´ படத்தில் எழுதிய மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா, ´தெனாலி´ படத்தில்...
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல் நோயின் காரணமாக கடந்த டிசம்பர் மாத மத்தியிலிருந்து 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த வாரத்திற்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது இந்நோயால் பதினோராயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கான மருந்துகளை விநியோகிப்பதற்கு...
விஜய் டி.வி, சூப்பர் சிங்கர் ஜூனியர்-4, பாட்டு போட்டிகள் பல கட்டங்களாக நடைபெற்றன. அதன் இறுதிச்சுற்று நேற்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல குழந்தைகள் கலந்து கொண்டாலும் முதல் ஆறு இடத்தை பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா, ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு ஒன்றரை கோடி...
ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். தனக்கு அடுத்ததாக வந்த தி.மு.க. வேட்பாளர் என். ஆனந்தைவிட 96,516 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த் 55,045 வாக்குகளையும் பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எம். சுப்ரமணியம் 5,015 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
இலங்கை வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளாக இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நம்பிக்கை வெளிச்சமாக இலங்கையின் வடக்கு மாகாண சபையில் ஒரு மகத்தான தீர்மானம் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால்...
இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட விருக்கின்ற சர்வதேச விசாரணை அறிக்கைக்கு ஆதரவு வழங்காது என்று இந்தியா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற பேரவையிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருகின்றது. இலங்கையில் புதிய அரசாங்கம் பதிவியேற்று குறுகிய காலமே சென்றுள்ளது.இந் நிலையில், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட...
இலங்கை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச இன அழிப்பு விசாரணை சவாலுக்கு உட்படுத்துமானால் அது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கக்கூடியதாக அமையும் என்றும் அந்த பாதிப்பு...
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியானது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது. டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள். இதில் உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட தொகுதிகள் 10 உள்ளன. அதேபோல நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள தொகுதிகள் 28 ஆகும். ஏழைகள்,...
இலங்கையில் தங்களுடைய நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டால், தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று புதன்கிழமை ராமேஸ்வரம், மண்டபம்...
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு புதுப்பிக்கப்படுவதற்கு அணுசக்தி ஒப்பந்தம் முக்கிய காரணமாக விளங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கூட்டாக கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது நரேந்தி்ர மோடி இவ்வாறு கூறினார். இருநாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....
இந்தியாவின் வட மாநிலமான பிகாரில் மூன்று முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறைந்தது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராமம் ஒன்றில் காணாமல்போன இந்து ஒருவரின் உடல் ஒருவாரத்துக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இதிலேயே முஸ்லிம்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அந்த இந்து இளைஞருக்கு 19 வயது...
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்திருப்பதால் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: இன்னொரு நாட்டில் நடைபெற்ற தேர்தலில் ஒருவர் தோல்வி அடைந்தது கண்டு மகிழ்ச்சி கொள்வது நாம் பின்பற்றி வரும்...
இலங்கையில் ராஜபக்சே அரசு போய், அவருடைய முன்னாள் நண்பர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது. இந்த தேர்தல் முடிவு, இந்தியாவுக்கு எந்த அளவுக்கு முக்கியமானது, எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்? உண்மையில் இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு மிக மிக முக்கியமானது. ராஜபக்சேவின் வீழ்ச்சியை தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கொண்டாடி வருகின்றன....
பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு மீன்பிடிப் படகை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மடக்கிப் பிடிக்க முயன்றதை அடுத்து, அப்படகு கடலில் வெடித்துச் சிதறியது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. அந்தப் படகில் பயணித்தவர்கள் படகுக்கு தீ மூட்டினர் என்றும் அதன் காரணமாக படகு வெடித்தது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த மீன்பிடிப்...
Loading posts...
All posts loaded
No more posts