- Monday
- February 24th, 2025

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெக்மோகன் டால்மியா காலமானார். கடந்த செப்டம்பர் 17ம் திகதி கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த இவருக்கு வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இலங்கைக்கு இடையே, சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான பேச்சு, அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கவுள்ளது. இந்திய மத்திய, சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் இது குறித்து கூறியதாவது, அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து வசதி மிகவும் முக்கியம் என, மத்திய அரசு கருதுகிறது. பங்களாதேஷ், பூடான், நேபாளம் ஆகிய...

சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டிருக்கிறது. இதுவரை கொல்கத்தா காவல்துறை வசமிருந்த இந்த ஆவணங்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இருந்தபோதும், அந்த ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றி தனியாக ராணுவமொன்றை நிறுவிய சுபாஷ் சந்திரபோஸை நேச நாட்டுப் படைகள் தேடிவந்தன. அவரது...

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. 22 கி.மீ...

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகி, தீர்வு காண்பது என தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இலங்கை பிரதமராக நான்காவது முறையாக ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, தனது முதலாவது வெளிநாட்டுப்...

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில்...

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மேலும் முன்னதாக அவர் டெல்லியில் இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக...

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம் சிறைகளில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முகாம் சிறையில் உள்ள யுகப்பிரியன்...

தமிழகத்தின் நாகை மாவட்டம் - வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழப் படகு ஒன்று கரை ஒதுங்கியது இன்று காலை தெரியவந்தது. பதிவு எண் போன்ற விபரங்கள் இல்லாத இந்த படகு இலங்கையைச் சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் இஞ்சின் பொறுத்தப்பட்ட நிலையில் ஒதுங்கிய இந்த படகை, கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய பொலிசார்...

தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். பின்னர் திருச்சி மத்திய...

இலங்கையின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பாரிய தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார...

பொலிஸ் காவலில் இருந்த இலங்கை அகதி மோகன் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை இயக்குனருக்கும், நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியை...

தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது, மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு...

போலி பாஸ்போர்ட் வழக்கு விசாரணைக்காக இலங்கை தமிழர் மோகன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடத்த வேண்டும் என்று ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து...

சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று வியாழக்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் அனைத்துலக இந்து - பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்திரிக்கா மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த மாநாடு, நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாகர்கோவில் - விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறையை வெட்டி கடத்திய குற்றச்சாட்டில் குமரியை சேர்ந்த நான்கு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறை வெட்டிக்கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அம்மாநில கியூ பிரிவு பொலிஸார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு...

இனப்படுகொலை குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தும் என்ற அமெரிக்க அரசின் முடிவு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து, விசாரணை நடத்தும் பொறுப்பினை, அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இலங்கை அரசிடமே ஒப்படைக்கப்போவதாக அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறதே?. பதில்:- இதுகுறித்து,...

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை ஆடைகளைக் களைந்து கொடூரமாக இலங்கை கடற்படை தாக்கிய சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 600 க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு (திங்கள்கிழமை) மீன்பிடித்துக்...

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் மத்திய சிறையை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட 1,252 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை...

All posts loaded
No more posts