- Monday
- January 27th, 2025
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பகிடியாலாவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.பட்டப்படிப்பை பாதியில் முடித்த இவர் ஒரு டாக்டரிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பின்னர் தானே ஒரு கிளினிக் தொடங்கி டாக்டராக செயல்பட தொடங்கினார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்ணிடம் அன்பாக பேசி வசியப்படுத்தினார். பின்னர் தனது வலையில் வீழ்த்தி கற்பழித்து வந்தார். இதையடுத்து அவர்...
பெங்களூர் ஹேசரகாடாவில் தான்சானிய நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து இலங்கை மாணவர்கள் மத்தியிலும் தாக்குதல் அச்சம் தோன்றியுள்ளது. இந்த செய்தியை த ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஏனைய வெளிநாட்டு மாணவர்களும் ஹேசரகாடாவில் தங்கி கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தன்சானியா நாட்டு மாணவர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டமையை...
கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது. ஆனால்...
கொலை வழக்கை காணொளிக்காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் விசாரணை நடத்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா 1986-ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்தார். அப்போது, தீபாவளிக்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் சிலர் சுட்டனர். இதில்...
இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி இடம்பெறும் சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுடன் புலிகள் இயக்கத்தினருக்கோ, அல்லது புலி ஆதரவு அரசியல்வாதிகளுக்கோ தொடர்பிருக்கலாம் என, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் சந்தேகம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், கள்ளத் தோணி இயக்கும் கடத்தல்காரர்கள் பிடிபடும் போது, படகை விட்டு தப்பி விடுகின்றதுடன் நடுக்கடலில் தத்தளிப்போர், தங்கள்...
சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சர்ச்சைக்குரிய மரணம் குறித்த, புதிய தகவல்களை வெளியிட்டு வரும், பிரித்தானிய இணையதளம், அவரது உடல் எரியூட்டப்பட்டதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் தொடர்பான விஷயத்தில்,...
கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா வரும் பெப்ரவரி மாதம் 20-ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகி விட்டதால் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கை தூதரகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில்...
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்திற்குச் செல்ல முற்பட்ட இலங்கை அகதிகள் குழுவொன்று இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் நியூஸிலாந்துக்கு செல்ல முற்பட்ட 06 இலங்கை அகதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அகதிகள் முகாமில் தங்கியுள்ள குறித்த அகதிகள் நியூஸிலாந்திற்குச் செல்ல தயாரான வேளை இந்திய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி' தலைவர் ஜி.சிவா...
உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடையை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கும்...
திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளனுக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா இராஜீவ் காந்தி இதை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்...
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கைக்குள் நுழைவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும், அவர்களது படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மீன்வளத்துறை மந்திரி...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமான வர முற்பட்ட ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) எனும் இவர், கடந்த 2011ல் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தநிலையில்...
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த ஆண்டு ‘கிஸ் ஆப் லவ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. முகநூல் மூலம் இதற்கு ஆதரவாளர்கள் பெருகினர். அவர்கள் பொது இடத்தில் சந்தித்து இந்த அமைப்பினை விரிவுபடுத்த முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து ‘கிஸ் ஆப் லவ்’ அமைப்பு பற்றிய தகவல்கள் நாடு முழுவதும்...
பொங்கலுக்கு முன்னதாக தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தமிழக முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத்...
இன்று சர்வதேச வேண்டி தினம் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி ஆண்கள் வேட்டியணிந்த தங்களது புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ‘ஆள் பாதி ஆடை பாதி' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறப்படுவதுண்டு. ஒருவர் அணிந்துள்ள ஆடையைக் கொண்டே அவரது குணம், ரசனை, பொருளாதார...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் எட்டுப் பேரையும், ஜெகதாபட்டணம் அருகே நான்கு பேரையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதன்படி தலைமன்னார் கடற்கரை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 651 விசைப்படகுகளில் 2,700-க்கும்...
தமிழகத்தின் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் பெண் ஒருவர் தீக்குளித்துள்ளார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி ரோகினி (31). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரோகினி தனது...
இன்று காலை இந்திய - மியன்மர் எல்லை அருகே, வடக்கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்...
பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்திற்குள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவதால் ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்டவர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts