- Saturday
- February 22nd, 2025

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டையும் இலங்கைக்கான சுற்றுலா விசாவையும்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 9 ஆம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி ஓரிரு நாள்களில் வலுவிழந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிகக் கனமழையும் கொட்டித் தீர்த்தது. இந்நிலையில்...

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து...

நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் பண மோசடி முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். குறித்த பெண்ணிடம் நடிகர் பிரசாந்த் ரூ.10 இலட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி பாண்டிபஜார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக...

இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு முதல் மரணம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கேரள மாநில சுகாதாரத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு...

தமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ விரும்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த 24 ஆம் திகதியன்று கமல்ஹாசன், சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு சென்றுள்ளார். இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால், பெற்ற தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சாதனா. இவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர்களது 16 வயது மகன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் பப்ஜி விளையாடுவதை தாய் சாதனா...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரைக் குறிவைத்துக் கடந்த சில நாட்களாகப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று வங்கி மேலாளராக பணிபுரிந்த விஜய் குமார் என்பவரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த பரபரப்பு முடிவதற்கு தற்போது மற்றொரு...

கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே உறவு முறையில் பழகி வந்துள்ளனர். அவர்களது நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்ததும், பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல் ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கி...

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம், மனபதி ஹிமல் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. நான்கு இந்திய பயணிகள் உள்ளிட்டோருடன் பொக்காராவில் இருந்து கோம்சோம் நகருக்கு காலை 9.55 மணிக்கு புறப்பட்ட தாரா ஏர் நிறுவனத்தின் விமானம், 15 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்....

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வௌி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரவழைத்து, இலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில்...

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறதென்றும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தாா். இலங்கை தற்போது...

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்....

தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி:- அ.தி.மு.க. விரைவில் ஒன்றிணையும், ஆட்சிக்கு வரும் என்று கூறி இருந்தீர்கள்? ஆனால்...

பேரறிவாளன் விடுதலை தொடர்பில் காங்கிரஸ் கட்சிக்கு நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய போது, ராஜீவ் காந்தி என்ன தியாகியா? அவர் தானே ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். ஒரு...

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள் ரூ.30 லட்சம் நிதியை புதன்கிழமை அளித்தனா். பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதி அளிக்குமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திமுக மக்களவை,...

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டார். ஆளுநர்...

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடி குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நெருக்கடி காரணமாக...

இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரூம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் 4 நபர்கள், தனி நபர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின்...

பட்டுக்கோட்டை கடல் பகுதியில், உரிய அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்த கியூ பிரிவு பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் கடல் பகுதியில், இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்றும், அதில் இரண்டு இளைஞர்கள் இருப்பதையும் அந்தப்...

All posts loaded
No more posts