- Monday
- November 25th, 2024
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். 2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதற்கட்டமாக 56 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி...
ஈழ அகதி குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய நான்கு ஈழ அகதிகள் கைதுசெய்யப்பபட்டுள்னர். பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள கோட்டூர் அகதிகள் முகாமில் உள்ள அகதிகள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நான்கு சந்தேகநபர்களும் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, இதுவொரு சிறிய குழு மோதல் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். என்.பிரதீபன், பி.பார்தீபன்,...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அரசியல் ரீதியான பயணமாக கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அந்த வேலைகளை முடித்துக்கொண்டு தனிப்பட்ட பயணமாக தமிழ்நாட்டிற்கு சென்றபோதே இச்சம்பவம் நாடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புத் தகவல் தெரிவிக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் இந்தியா டிவியும், சி-வோட்டர்ஸ் அமைப்பும் இணைந்து மார்ச் மாதம் 4ஆவது வாரத்தில் கருத்துக்...
“விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது! இதுவரை விடுதலைப்புலிகள் மீது, ‘பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்’ என்றோ சிங்கள பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை. ஆனால், பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள்...
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதனை தமிழ் நாட்டில் இயங்கும் பல அமைப்புக்கள் எதிப்பு தெரிவிக்கின்றனர். அந்த வகையில் முருகசேனை என்னும் அமைப்பு விடுத்துள்ள கண்டண அறிக்கை... தனது இசை வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் சூளைமேட்டைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம்...
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகேந்திரன் என்ற இலங்கைத் தமிழர், தன்னை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி 2...
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 1960-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 6 மொழிகளில் 17,695 பாடல்களை அவர் பாடியுள்ளார். இதன் மூலம் அதிக பாடல்களை பாடியவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கின்னஸ் புத்தக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் திருமணமான ஒரே மாதத்தில் மாடல் அழகி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்திய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியை சேர்ந்தவர் பிரியங்கா கபூர் (25). மாடல் அழகி. அவருக்கும் தொழில் அதிபர் நிதின் சாவ்லாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. நிதின் தனது முதல்...
திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நபர் ஒருவர், கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவமொன்று சனிக்கிழமை(26) தமிழகத்தின் சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இடம்பெற்றுள்ளது. திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் சசிகுமார் (வயது 31) என்பவரே இவ்வாறு கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் படுகாயங்களுக்குள்ளான நபர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர்...
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். சென்னையில் அவரை கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சுதந்திரம் பெற்றது முதல் பல...
இலங்கை அகதிகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியும் இங்கிருந்து கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது என, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அரசியல் களம் தெளிவாகவில்லை. தற்போது அமைந்துள்ள கூட்டணிகள் தேர்தல் நேரத்தில்...
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆனந்த் அரவிந்தாக்ஷன் குறித்த சர்ச்சைக்கு விஜய் டிவி தரப்பு பதில் அளித்துள்ளது. சென்ற வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும்...
பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை 20 ஓவர் லீக் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பாட பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். அதேபோல்,பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர். தொடர்ந்து போட்டி...
விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை வென்றார். விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'சுப்பர் சிங்கர்'. இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது. சுப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி என ஐந்து பேர் போட்டியிட்டனர். இவர்களில் பரீதாவும், ராஜகணபதியும்...
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் சுபேந்திரன் என்னும் ஈழத்தமிழ் அகதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறை ஆய்வாளரும் உடன் இருந்த காவலர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தை நம்பி தஞ்சம்...
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், என்.ஐ.ஐ.டி. டிவியும் இணைந்து தொலைக்காட்சியில் இணையவழி மூலமாக இலவசப் படிப்புகளை வழங்குகின்றன. இதுகுறித்து பல்கலைக்கழக முதன்மையர் (ஆய்வுத் துறை) எஸ். சுவாமிநாதன் தெரிவித்தது: உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் என்.ஐ.ஐ.டி. டிவியும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த உடன்படிக்கை பி.டெக்.,...
‘‘போலீசார் அடித்து இழுத்து சென்ற விவசாயி பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன்’’ என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலன்(வயது 50). விவசாயி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு சொந்தமாக டிராக்டர் வாகனம் வாங்க தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனம்...
தமிழக அகதியின் மரணத்தை அடுத்து, மின்சாரம் கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த கோபுரங்களில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை, தமிழ்நாடு மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மின் கோபுரங்கள் சராசரியாக, 60 அடி உயரத்தில் நிறுவப்படுகின்றன. மதுரை மாவட்டம், உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்த ரவீந்திரன் என்பவர், நேற்று முன்தினம், உயர் அழுத்த மின்...
Loading posts...
All posts loaded
No more posts