- Tuesday
- February 25th, 2025

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கும் கடந்த மே 16 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த 68 மையங்களில் வைத்து வாக்குப்பதிவு எண்ணும் நடைபெற்று வருகிறது. இதில், அண்மை நிலவரப்படி அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக...

முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், பெரியசாமி, பொன்முடி, வீரமணி ஆகியோர் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றனர். இதேவேளை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளனர். திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும் ஆர்கேநகர் தொகுதியில்...

தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகித்துள்ளது. திமுக 29.8 சதவீதம், பா.ம.க. 6.2 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 6.8 சதவீதமும் மதிமுக 0.6 சதவீதமும் தேமுதிக 2.1 பா.ஜ.க 2.1 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை...

தமிழகத்தின் முதல்வராக 6-ஆம் முறையாக பதவியேற்கப் போவது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவா, திமுக தலைவர் கருணாநிதியா என்ற எதிர்பார்ப்புக்கு இன்று விடை தெரிந்துவிடும். 15-ஆவது சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான களம் என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி துவங்க உள்ளது. காலை...

ஈழ அகதி குழந்தை ஒன்றின் புகைகப்படத்தை மோசடியான முறையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் போசாக்கு குறைபாடு காணப்படுவதாகவும், அதற்கு உதாரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு அவுட்லுக் சஞ்சிகையில் வெளியான புகைப்படம் ஒன்றையும் பாரதீய ஜனதாவின் கட்சியின் தலைவர் அமித் ஷா பொதுக் கூட்டம் ஒன்றின்போது...

15 வது சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக காலை 8 மணிக்குள்ளாகவே பெரும்பாலான விஐபி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்திவிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காலை 7.10 க்கெல்லாம் செலுத்திவிட்டார். அவரிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்க முயன்றபோது, தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நடிகர்...

தமிழகம், புதுவையில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 07.00 மணிக்குத் தொடங்கி மாலை 06.00 மணிவரை இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 5.77 கோடி வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் 3,728 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர்....

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ...

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த...

தமிழ்நாடு பரமாத்தி திருச்செங்கோட்டை அகதிமுகாமில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இந்த முகாமில் வசிக்கின்ற 2000க்கும் அதிகமான ஈழ அகதிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அகதி நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கொடுப்பனவை வழங்கக்கோரி போராட்டம் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. மேலும், தமிழ் நாட்டு அரசாங்கத்தால் குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாவும்,...

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம் அமைய பாடுபடவேண்டும் என்று தமிழக திரைநட்சத்திரம் சத்யராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற இருக்கின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி நிகழ்வுக்கு வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்...

இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணம் திமுக என, தமிழக முதல்வர் ஜெயலலிதாக தெரிவித்துள்ளார். நெல்லையில் அதிமுக, வேட்பாளர்களை ஆதரித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கை தமிழர்களின் இனப் படுகொலைக்குக் காரணம் தி.மு.க, அந்த இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தத் தூண்டியது அ.தி.மு.க. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட...

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் ஏழுபேரின் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவினால் எதிர்வரும் 13ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த...

தமிழ்நாட்டில் திருச்சி புத்தூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி டெல்லி மேல்-சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘மேற்கண்டவற்றில், உத்தரபிரதேசத்தில் 9, டெல்லியில் 5, மேற்கு வங்காளத்தில் 2, பீகார், கர்நாடகா, கேரளா, மராட்டியம், தமிழ்நாடு,...

டெல்லியில் பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றதாக அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டு வைத்த குறித்த தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது....

தங்கச் சட்டை மனிதர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழில் அதிபரும் அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் (Pankaj Parakh ) கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சுமார் 98,35,099 ரூபா செலவில் (Dh542,721) உலகின் மிக விலையுயர்ந்த தங்கச் சட்டை அணிந்தவர் என்று அவருக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகம் (Guinness World...

சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 21 இந்திய மீனவர்கள் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற் பிரதேசத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அலவி அக்ரம் தெரிவித்தார். மேற்படி இந்திய மீனவர்கள் பயணம் செய்த மூன்று மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ம.தி.மு.க தலைவர் வைகோ திடீரென்று அறிவித்துள்ளார். மதிமுக தலைவர் வைகோ இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் கோவில் பட்டித் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மதிமுக சார்பில் கோவில்பட்டித் தொகுதியில்...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா கடந்த 9-ம் திகதி முதல் மண்டலம் வாரியாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சி...

All posts loaded
No more posts