- Sunday
- November 24th, 2024
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக, இந்தியாவின் இரண்டு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மற்றும் மனந்தவாடி துணை கலெக்டர்களினால், மனந்தவாடிக்கு அருகில் உள்ள கம்பமால கொலனிக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'குறித்த அகதிகள், அங்குள்ள தேயிலைத் தோட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்....
இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம். இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித்...
அரிய வகை இனமாக கருதப்படும் ஆசிய சிங்கத்தின் முன் புடைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய கிரிக்கெட் வீர்ர் ரவீந்திர ஜடேஜாவிற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா மற்றும் அவரின் மனைவி, குஜராத் மாநிலத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் கிர் தேசிய பூங்காவில், தரையில் அமர்ந்துள்ளது போல் தோன்றும் அந்த புகைப்படம்...
சட்டவிரோத தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெங்கலூர் விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் வசமிருந்து இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இவற்றின் பெறுமதி 65 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிகம் எனவும், பெங்களூர் விமான நிலைய சுங்கப்...
தமிழ்நாட்டை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவருடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1996ஆம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைக்கு ஆளானார் ராமர்பிள்ளை. சரியான கல்வி அறிவு இல்லாத அவரால், இந்த...
இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 இளம் பெண்கள் உட்பட 21 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்கள் இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளுக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த...
தமிழகம், திருப்பூரில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அனுதாபி இலங்கையில் உள்ள சிலருடன்தொடர்புகளை கொண்டிருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக தமிழகபொலிஸார் கூறியுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மொரிசுதீன் என்ற இவர் மேற்கு வங்காளத்தில் இருந்து தமது குடும்பத்துடன் வந்து திருப்பூரில் தங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இவர், ஜூலை மாதம் முதல் வாரத்தில் திருப்பூரில்...
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், பின்னால் வந்த கார் மோதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் சென்னை மாநகரின் கிண்டி எனும் பிரதேசத்தில் இடம்பெற்றது. கார் மோதியதில் லேசான காயங்களுடன் பழ. நெடுமாறன் உயிர்தப்பியுள்ளார். குறித்த விபத்துத் தொடர்பாக தமிழ் நாட்டுக் காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 77 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மீனவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய இலங்கை அரசை வலியுறுத்த...
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்று புகழப்படுபவர் அர்ஜுன். ஏராளமான தேசப்பற்று படங்களில் நடித்திருக்கும் அர்ஜுன் தற்போது தனது வயதுக்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது டி.எஸ்.பி.யாக அர்ஜுன் நடித்து வரும் படம் 'நிபுணன்'. அருண் வைத்தியநாதன் இயக்கும் இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து பிரசன்னா, சுஹாசினி மணிரத்னம், வரலட்சுமி சரத்குமார், வைபவ் முக்கிய...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலை தொடர்பில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் புதிய மனு ஒன்று நேற்றயதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாந்தன், ரொபர்ட் பயாஸ்,...
சிறீலங்கா சிறையில் கொடுமைகள் அனுபவித்தோம் என்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 77 பேரை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, மத்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று முன்தினம் 49...
தமிழகத்தின் - தாரமங்கலத்தில் நடக்கும் தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவங்களில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகத்தில், அவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை, தாரமங்கலம் பொலிசார் நேற்று ஆய்வு செய்தனர். தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களில், பத்துக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. எனினும் இது...
தமிழகத்தின் தாரமங்கலத்தில், தலைக்கு பூசும் சாயம் குடித்த இலங்கை தமிழ் பெண் உயிரிழந்துள்ளார். தாரமங்கலம் அடுத்த, பவளத்தானூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் பவித்ரா (17). பிளஸ் 2 முடித்துள்ளார். அவரது குடும்பத்தில் உள்ள பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த, 14ம் திகதி, தலைக்கு பூசும் சாயத்தை குடித்துவிட்டார். உயிருக்கு...
சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு ஏ.என்.32 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து...
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே...
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடல் படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். கோட்டைபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து சுமார் 250 விசைப்படகுகள் மூலம் சுமார் ஆயிரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கைகடல் படையினரின் அத்துமீறல்களைக்...
3 நாள் போலீஸ் விசாரணையின்போது நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு போலீஸார் ராம்குமாரை அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து தான் சுவாதியைக் கொலை செய்தது எப்படி என்று ராம்குமார் நடித்துக் காட்டியதாகவும் போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை...
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ராம்குமாரை போலீஸ் காவலில் வைத்து 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட்டு அனுமதி கொடுத்தது. கடந்த...
Loading posts...
All posts loaded
No more posts