- Monday
- February 24th, 2025

காவிரி பிரச்சனையில் போர்க்களமாக காட்சியளிக்கும் பெங்களூரு நகரம் இன்று இயல்பு நிலைமைக்கு திரும்பியது. பெங்களூருவில் அரசு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இயங்குகின்றன. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அவ்வளவுதான் பெங்களூரு நகரம் பற்றி எரிந்தது. ஒரே நாளில் தமிழக பேருந்துகள், லாரிகள் 100க்கும்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை சக கைதி ஒருவர் தாக்கியுள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை, செவ்வாய்க்கிழமையன்று காலையில் சக கைதியான ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு பைப் ஒன்றினால் தாக்கியதாக கூறப்படுகிறது. கொலை மற்றும் கடத்தில்...

வேலூர் சிறையில் பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதால் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை இன்று சக கைதி ராஜேஷ் என்பவர் இரும்புக் கம்பியால்...

புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை ஈழத்து தமிழர் அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகாமில் மர்ம நபர்கள் அரிவாளுடன் உள்ளே நுழைந்து முகாம் தலைவர் கமலநாதன் உள்ளிட்ட 5 பேரை தாக்கியுள்ளனர். இதில் 5 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், தானும், தன்னுடைய 14 வயது உறவுக்கார சிறுமியும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தன்னுடைய இரு உறவினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்ணும் இஸ்லாமியர்கள் என குற்றஞ்சாட்டி தாக்குதல்தாரர்கள் இந்த வன்முறையை தொடுத்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் மேவத்தில், இருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்த குற்றச்சாட்டை கூறியுள்ள...

காவிரிப் பிரச்சனை காரணமாக கர்நாடக மாநிலத் தலைநகரில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து அங்கே வன்முறைகள் உருவாகியதையடுத்து, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், போராட்டக் காரர்கள் தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்டதால்...

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்பாணம் - குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது 27). இவருக்கும், இலங்கையை சேர்ந்த டாக்டர் நவனீதராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். சரோன்...

இந்தியாவின் வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு வசிப்பவர் ஜெகதீஸ்வரன். இவரது வயது 45.இவர் மனைவி துஷாத்தினி வயது 26. கடந்த ஆகஸ்ட், 8ம் திகதி துஷாந்தினி வீட்டில் இருந்தார். அப்போது, அதே முகாமில் வசிக்கும் அவரது மைத்துனர் தயாபரன்,...

போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி வௌிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த விழக்கிழமை குறித்த நபர் போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போது பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த...

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 103 படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (01) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கச்சத்தீவு பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமை பெறுவது குறித்து நேற்று ராமேசுவரத்தில் மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலை நிறுத்தத்தில்...

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரின் 33 வீட்டுமனைப் பட்டா இரத்தானது. இதனையடுத்து வீட்டுமனைப் பட்டாவை மீண்டும் வழங்கக்கோரி தாயகம் திரும்பியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவின் காலாப்பட்டில் கட்டுமான பணியின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி உயிரிழந்துள்ளார். புதுவை காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சங்கர் (வயது 51), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயசீலி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலாப்பட்டில் ஒரு கட்டிடம் கட்டும் பணியில் சங்கர் மற்றும் தொழிலாளர்கள்...

தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இரண்டு இலங்கை பெண்கள் நேற்று வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 832 கிராம் எடையுடைய தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் இவர்கள் விமான நிலைய சுங்க புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தமது பயணப்...

கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 300 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வீடுகள், விவசாய நிலங்கள், பாதைகள் என பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்தும் உள்ளன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் பெய்த...

இந்தியாவில்,புனேயில் வங்கி ஊழியரொருவர் வெளியிட்ட புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சுவாதி சிதால்கர் என்ற குறித்த பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், தனது கதிரைக்கு பின்னால், கீழே தரையில் அவரது மகன் படுத்து பால் போத்தலில் வாயில் வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். குறித்த...

இலங்கையில் இருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் வாழும் 15 தமிழ் மாணவர்கள் அச்சிறுபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறி படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பள்ளியில் இருந்து திடீரென்று நீக்கியுள்ளது தனியார் பள்ளி நிர்வாகம். தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஒரு வாடகை வீட்டில்...

‘அறிவாயுதம்’ குழுவினரால் வரும் ஓகஸ்ட் 28 ம் நாள் சென்னை உமாபதி அரங்கில் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் மாபெரும் கரத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்களால் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் தலைவர்கள், மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், இனஅழிப்பு வல்லுனர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரையும்...

உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 2–ந் திகதி வாரணாசியில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் முடிவின் போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை...

செல்ஃபி' புகைப்படம் எடுக்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் இரண்டு நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த அந்த 17 வயது சிறுவனின் பெயர் ஹரிஷ் என்றும், சில நண்பர்களுடன் 'செல்ஃபி' புகைப்படம் எடுக்க முயன்ற போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதியதன்று (திங்கள்கிழமை)...

நமக்கு நாமே பயணம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெளியிட்ட விமர்சனத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்த சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சட்டசபையில் நேற்று திருப்பூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ஸ்டாலினின் “நமக்கு நாமே”...

All posts loaded
No more posts