- Monday
- February 24th, 2025

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லி சென்றிருந்த போது, அவர் தங்கியிருந்த தாஜ் விடுதியில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா...

சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில், கடலுக்கடியால் மின்சாரப் பரிமாற்றம் ஒன்றைச் செய்யும் திட்டம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக இந்தியாவின் எரிசக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா தனது உள்நாட்டு மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு இந்தியாவிடம் 500மெகா வாட் மின்சாரத்தைக் கோரியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த...

சீன பல்புகள் வெடித்துச் சிதறியதில் 400 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தன்கானில் நடைபெற்ற கலாச்சாரத் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவின் போது அங்கு ஒளி அலங்காரத்துக்காக சீன பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென ஆறு சீன பல்புகள் வெடித்துச் சிதறியுள்ளது. சீன பல்புகள் வெடித்து சிதறிய விபத்தில்...

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று நேரில் வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தில்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி, காலை 11.45 மணியளவில் க்ரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகைதந்தார். அவரது வருகையை...

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் படிப்படியாக மேம்பட்டுவருவதாகவும், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை வியாழக்கிழமையன்று மாலையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து, படிப்படியாக மேம்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுவரும்...

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர்....

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கைதுசெய்யப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை, ஐதராபாத் இல்லத்தில் வைத்து சந்தித்த ரணில், இலங்கையின் தற்போதைய...

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனையினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம், 22 ஆம் திகதி முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் நுரையீரல் பாதிப்புக் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதேவேளை முதலவர் ஜெயாவுக்கு சிறப்பு...

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) போலி அட்டைகளைப் பயன்படுத்தி பல நாடுகளில் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் காரைக்குடி பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 26 இலட்சம் இந்திய ரூபாய்கள், 25 பவுன் நகை, 48 தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அட்டைகள், போதை பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த...

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுருவி உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் அமைப்பினர், பல்வேறு உலக...

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே,...

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ரண்பிர் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளங்களில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகள் முகாமில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இந்த திடீர் தாக்குதலில் முகாமில் பயிற்சியில்...

கடலில் பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் பொலிசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கேன்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. விசாரணையில், அவர்கள்...

முதல் அமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக...

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான சக்தி மகன் மனோஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்ற குறித்த ஈழ அகதி ஏலச்சீட்டு நடத்தி...

இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரி திடீரென்று இராமேஸ்வரம் அருகே கடல் ஆய்வு நடத்தியது, குளச்சல் துறைமுகத்திற்கு சாதகமாக அமையும் வகையில் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா, அல்லது தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. பாலம் அமைக்கும் திட்ட ஆய்வா என்பது மர்மமாக உள்ளது. இராமேஸ்வரம் தீவு அருகே கடந்த வாரம் கடற்கரை...

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ், சிறை போலீஸ்காரருடன் பேசிய பேச்சில் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று அந்த போலீஸ்காரர் கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத் தரப்பு எதையாவது மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது. நேற்று நாலரை மணியளவில் ராம்குமார்...

விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக...

தண்ணீர் குடிக்கப் போவதாக கூறிவிட்டு போன ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தன்னுடைய உடம்பில் மின்சாரத்தைப் பாய்ச்சிக்கொண்டு உயிரிழந்து விட்டதாக சம்பவம் நடந்த போது உடனிருந்த சிறைக்காவலர் கூறியதாக புழல் சிறை வார்டன் கூறியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் ராம்குமார் தூக்கி வீசப்பட்டதால் உடனிருந்த கைதிகள் யாரும் ராம்குமாரை காப்பற்றவில்லை என்றும் அவர் சிறைவார்டன் தெரிவித்துள்ளார். சுவாதி...

தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடலை நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்ல காவல்துறை அனுமதி வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை முடிந்ததும் விக்னேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னார்குடி கொண்டு செல்வதற்காக...

All posts loaded
No more posts