Ad Widget

நளினியின் புத்தகம் இன்று வெளியாகின்றது

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நளினி, ராஜீவ் காந்தியின் கொலை குறித்து எழுதிய புத்தகம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும்...

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெயலலிதா

மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும்...
Ad Widget

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் காலமானார்

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 86. பால முரளியின் இயர் பெயர் முரளி கிருஷ்ணா. எட்டு வயதில் இவர் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் பாடிய விதத்தை கண்டு 'பால' என்ற அடைமொழி வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மங்களப்பள்ளி என்ற இடத்தில்...

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததற்கு இலங்கை தமிழ் பா.உ ஒருவரே காரணமாம்!

தமிழக மீனவர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு ஏற்படாததற்கு, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே முழுக் காரணம் என்று, இந்திய தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ குற்றம்சாட்டினார். இராமநாதபுரத்தில் தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவ பெண்களின் முதலாம் மாநில மாநாடு தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ...

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்.

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி. இவர்தான் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் சென்ற சிறுவன். இது வரலாற்றில் பதிவான புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. கனுபாய் காந்தி, அமெரிக்கா சென்று படித்தார். பின்னர் அங்கேயே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். இவரது மனைவின் பெயர் சிவலட்சுமி. அமெரிக்க வாழ்க்கையிலிருந்து விடுபட்டு;...

நோயிலிருந்து மீண்டார் ஜெயலலிதா- அப்போலோ மருத்துவமனை தலைவர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்ததாக அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி, “தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார். தன்னைச் சுற்றி நடப்பதை...

இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தி: தமிழக மீனவர் சங்கம்

டெல்லியில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கை மீனவர்களுடன் ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களையும்...

இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட்டதா?

யாழ்ப்பாணம் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெருந் தொகை கஞ்சா இராமேசுவரம் கடல்வழியாக கடத்தப்பட்டதா என, இந்திய மத்திய, மாநில பொலிஸார் மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். யாழ் கடல் பகுதியில் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பிளாஸ்டிக் படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர். இதன்படி அதில்...

சிறீலங்கா சென்ற என் மகள் எங்கே? தாய் ஒருவர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு!!

சிறீலங்காவில் கணவருடன் வசித்து வந்த மகள், ஒருவருடம் கடந்த நிலையிலும் தன்னுடன் பேசவே இல்லை என இந்தியாவிலுள்ள தாய் ஒருவர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் வீரபுத்திரன். இவருக்கு கனகம்மாள் என்ற மனைவி உள்ளார். அவர் இன்று தூத்துக்குடி ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்துள்ளார். அந்த...

ஜெயலலிதா நலம்பெற பால்குடம் எடுத்த பெண் மயங்கி விழுந்து பலி

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி சேலத்தில் பால்குடம் எடுத்த பெண் கூட்டநெரிசலில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்,...

மகிந்தா ஆண்டாலும், மைத்திரிபால ஆண்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் நிலை இதுதான்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சிங்களக்காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம்...

மர்ம படகில் வந்த மூவர் கைது

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்த படகிலிருந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. அவர்களிடமிருந்து, படகு மற்றும் அதிவேக படகுக்கான இன்ஜின் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீனவர்கள் இல்லை என்ற சந்தேகம் வந்ததையடுத்து அவர்களிடம் பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு...

கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் காதலி யார்? பள்ளி தேர்வு தாளில் இடம் பெற்ற கேள்வி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வருகின்றனர்.இடையில் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டாலும் தொடர்ந்து இருவரும் அதனை மறந்து தற்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வருகின்றனர். இந்த நிலையில் மராட்டியத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றில் இவர்கள் பற்றிய கேள்வி ஒன்று...

ஸ்டாலின் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பெரம்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக. பொருளாளர் முக. ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், இது தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது....

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழில் தமிழில் வரவேற்ற மோடி!

இந்தியாவின் கோவாவில் இடம்பெறும் பிறிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதையிட்டு, தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார். “ஒரு நண்பரின் வருகை... பிறிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டுக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு வருகை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி” என, மும்மொழிகளிலும்...

ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த தொண்டர்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என கோஷமிட்டபடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர் தீக்குளித்துள்ளார். தமிழகத்தின் தாம்பரம் - கடப்பேரி பகுதியைச் சேர்ந்த சற்குணம் (31), அதிமுக தொண்டர். இவருக்கு ஷீலா என்ற மனைவியும், காயத்திரி (4) என்ற மகளும் உள்ளனர். நேற்று...

ஜெயாவின் பொறுப்புகள் யாவும் பன்னீர்செல்வத்திடம்!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ´´முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின்படி...

19 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் ஓரிரு வார்த்தைகள் பேசிய ஜெயா

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் விரைவாக குணமடைந்து வருவதாகவும், நேற்று அவர் ஒருசில வார்த்தை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ம் திகதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை...

வடக்கின் வீதி வலையமைப்புக்களை உருவாக்க இந்தியா உதவி!

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லி சென்றிருந்த போது, அவர் தங்கியிருந்த தாஜ் விடுதியில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா...

இந்தியாவிலிருந்து கடலுக்கடியால் இலங்கைக்கு மின்சாரம்!

சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில், கடலுக்கடியால் மின்சாரப் பரிமாற்றம் ஒன்றைச் செய்யும் திட்டம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக இந்தியாவின் எரிசக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா தனது உள்நாட்டு மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு இந்தியாவிடம் 500மெகா வாட் மின்சாரத்தைக் கோரியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த...
Loading posts...

All posts loaded

No more posts