- Wednesday
- January 22nd, 2025
சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி சீனாவின் வடக்கு மாகாணங்களில் குறித்த வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் Human...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது...
இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. “ஊபா” சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள்...
சாந்தன் என்கிற தில்லையம்பலம் சுதேந்திரராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் வழங்கியுள்ளன. இதனால், தனது முதுமைக் காலத்தில் மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்கின்ற சாந்தனின் தாயாரின் கனவும் நனவாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக...
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை (28) காலை காலமாகியுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும்,...
இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்ததால் அவைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று (டிசம்பர் 13) நாடாளுமன்றம் தாக்குதல் தினமாகும். 2001ஆம் ஆண்டு டிசம்பர்...
தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதேவேளை, கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திலும், இன்று...
விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்றுமதிமுக செயலாளர் வைகோ கூறி உள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு...
தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்ட சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில்...
தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் - ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டும். ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம்...
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும் இவர்களுக்கு பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த பரமேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை...
சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டர் கலன் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதையும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவளைதள பதிவில், சந்திரயான் -3 திட்டத்தின் லேண்டர் கலனுக்கும் பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு...
தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன்...
இலங்கையில் இருந்து வந்ததாக நம்பப்படும் புறா ஒன்று தமிழகம் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரை சேர்ந்தவர் அரச குமார். இவர் கடந்த 16ஆம் திகதி தனுஷ்கோடியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். தனுஷ்கோடியில் இருந்து ஏழு கடல்மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காலில் பிளாஸ்டிக் கட்டிய...
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளை. இதில் பெங்களூரைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா...
கோவிட் போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் புதுவிதக்காய்ச்சலொன்று பரவி வருகிறது. இவ்வைரஸ் காய்ச்சல் தொடர்பில் இலங்கை மருத்துவர்களும் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது H3N2 எனப்படும் வைரஸினால் ஏற்படுத்தப்படும் காய்ச்சல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும்...
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை...
புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு சேவை அடுத்தமாதம் தொடங்காது. சோதனை நிலையப் பணிகள் நடப்பதால் இரு மாதங்களாகும். மூன்றரை முதல் நான்கு மணி நேர பயணத்துக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்படவுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்தில் இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்தியாவின் யூனியன் பிரதேசமான...
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து கைது செய்துள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர்...
Loading posts...
All posts loaded
No more posts