- Monday
- November 25th, 2024
வடக்கில் மழை நீரை சேமிக்கும் நீர்த்தாங்கிகள் அமைக்கும் நடவடிக்கைகள் முடியும் தறுவாயினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சு, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக பூநகரி, நாவற்குழி, கட்டுடை, வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைதீவு பிரதேசங்களுக்கான நீர்த்தாங்கி அமைக்கும் நடவடிக்கை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நீர்த்தாங்கிகளின் கட்டுமானப்...
யாழ்ப்பாணத்தில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையின் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக இரண்டு நீர் சுத்திகரிப்பு கருவிகள் Reverse osmosis plant பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதற்கு 14 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளாந்தம் ஆயிரம்...
இந்திய அரசாங்கத்தின் 1.7 பில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்க தீர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றது. இதனால், புல்லுக்குளத்துக்கு அருகிலுள்ள வீதி மூடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர் இந்த வீதியானது தனியாக நடைபாதை வீதியாக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. 600...
யாழ்ப்பாணத்தில் வீட்டுத் தேவையைக் கொண்டுள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகளுடனான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பவுள்ளன. உலக வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூலோபாய வழிமுறையிலான நகரஅபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதற்பான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உத்தேச புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான வீட்டுப் பயனாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கை யாழ் மாவட்ட செயலகத்தின் செயலாளரின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர்கள் காணி...
கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (06.09.2016) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள்...
யாழ் குடாநாட்டில் உள்ள தீவுப் பகுதிகளுக்கு படகு போக்குவரத்தை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு புதிய படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த புதியத் திட்டத்திற்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். படகு பயணத்தில் ஈடுபடும் பயணிகள்...
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தின் உப்பு அறுவடை, கடந்த 26 வருடங்களுக்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கண்டாவளை பிரதேச செயலர் ரீ.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்துள்ளனர். இவ் வருடம் 800 மெற்றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, பலருக்கு வேலை வாய்ப்பினையும்...
இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும் விரிவாக்கப்பட்டு இன்னும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில்...
யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பதற்குரிய நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் நேற்று திங்கட்கிழமை (22.08.2016) நாட்டப்பட்டுள்ளது. ரூபா 18.5 மில்லியன் செலவில் அமையவுள்ள இக்கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்துள்ளார். யாழ் மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில்...
ந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பளை அம்பனைப் பிரதேசத்தில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை திறந்துவைத்துள்ளது. இந்நிகழ்வானது, பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த நிறுவனத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்வுக்கு, சிறுவர் மற்றும்...
நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார்....
கிளிநொச்சி பூநகரி மக்களிற்கான மழைநீர் சேமிப்பு திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விசேட வானூர்தியில் வந்திறங்கிய முன்னாள் ஜனாதிபதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா...
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசினால் அமைக்கப்படவுள்ள நீரியல் வளப் பண்ணைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் காரணமாக அப்பண்ணை வட மாகாணத்திற்கு மாற்றப்படலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இப்பண்ணைக்கு மாவட்ட தமிழ் அரசியல் தலைமைகளும் உள்ளுர் மக்களும் வெளியிட்டுள்ள எதிர்ப்புகள் காரணமாகவே...
சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் உற்சவத்தின்போது வடக்கிற்குப் பயணம் செய்யும் புலம்பெயர் சமூகத்துடன் இது குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அத்துடன், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் நேற்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்துள்ளனர். போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும்...
பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்துவது தொடர்பில் களஆய்வை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமானத்தளம் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வதற்கான களஆய்வுகளை இந்திய விமான நிலைய அதிகார சபை மேற்கொண்டு வருவதாக இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் எம்.எம்.சி.நிமல்ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். விமான...
யாழ்ப்பாணம் தொழில் அலுவலகத்தின் புதிய அலுவலக அங்குரார்பண நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (08), யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர்...
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காணியை தேர்வு செய்யும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்து...
இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம், குமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது. யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை...
Loading posts...
All posts loaded
No more posts