- Tuesday
- February 25th, 2025

நெடுந்தாரகை கப்பலின்முதல்ப் பயணம் குறிக்கட்டுவான் – நெடுந்தீவு 20.01.2016 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………………………… கௌரவ ஆளுநர் அவர்களே, அமைச்சர் கௌரவ பை(க)சர் முஸ்தபா அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய Bryce Hutchesson அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான முதன்மைச் செயலாளர் அவர்களே, உலக வங்கியின்...

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பொது மக்களிடம் நேற்று கையளித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக நிலைபேறான மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்பேம் என்ற தொனிப்பொருளிலான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு...

குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகிறது. இதுதொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான அவூஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்திளால் இந்த நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 150...

எழுவைதீவு இறங்குதுறைக்கான சுமார் மூன்று கிலோ மீற்றர் வீதி நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. வடக்கிற்கான விசேட கருத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த வீதி நீண்ட காலமாக திருத்தப்படாது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரதேச செயலகம்...

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் என...

யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறீலங்காவும் நேற்று கையெழுத்திட்டன. சிறீலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன்...

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு 7,724 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன்...

வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயன், தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“ சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு ஆலய பங்குத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இத் துறைமுகம்...

மருத்துவ பீட கற்கைநெறி கட்டடத் தொகுதி போதனா வைத்தியசாலை (Professorial Department Complex Teaching Hospital Jaffna) மேற்படி கட்டிடத் தொகுதி ஆனது யாழ் போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவப் பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத் தொகுதி உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட உள்ளது....

இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதான கூட்டு தொழில் முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் பயணப்படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்க தயாரென MMBL-Pathfinder Group குழுமம் பயணப்படகு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணப்படகு சேவையில் முன் நிலை வகிக்கும் MMBL-Pathfinder Group குழுமம இத்துறையில் முன் நிலை...

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. தலா 10 வாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் குறித்த காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் இந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தார். இதற்கு அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்டதையடுத்து சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கான...

எலும்பு தேய்வடையும் நோயானது (ஒஸ்ரியோபொரோசிஸ் – DEXA SCAN) வயது முதிர்ந்தவர்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட ஹோர்மோன் குறைபாடுகள், நீண்ட கால சத்துக் குறைபாடுகள், பலவிதமான உடல் நோய்கள் மற்றும் சில வகையான மருந்துவகைகளை நீண்டகாலமாக உள்ளெடுத்தல் என்பன காரணமாக அமையலாம். இவ்வாறு எலும்பு...

கிளிநொச்சி பொது வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதியில் தீயினால் பாதிப்புக்குள்ளான கடைத்தொகுதிகள் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத்தொகுதியினை மீள நிர்மாணித்து 150 மில்லியன் ரூபா செலவில் நிலையான பொது சந்தை கட்டட தொகுதியொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார...

யாழ் மாவட்டக் கரையோர பகுதிகளில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதியின்றி எந்த வகையான அபிவிருத்தி செயற்பாடுகளும் மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான அறிவிப்பை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகளவான கட்டுமான நடவடிக்கைகள் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும்...

இன்று கீரிமலையில் மைத்திரி ”நல்லிணக்கபுரம்” வீடுகள் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் மாணவர்கள் இழப்பு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை ஏற்றுக்கொள்கின்றேன். தென்னிலங்கையில் இவ்வாறு மாணவர் கொலை செய்யப்பட்டால் இதை விட மோசமாக வெகுண்டெழுந்திருப்பார்கள். அந்தவகையில் பக்குவமாக நடந்து கொண்டதற்காக வடக்கு மக்களுக்கு நன்றி கூறுகின்றேன். பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட்டு நீதிவழங்கப்படும். மாவை சொன்னதுபோல...

நாட்டின் பாரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறைக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் வடக்கு மீனவர்களுக்கு 150 மீன்பிடிப் படகுகளை இலவசமாக வழங்குவதுடன், 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில், கடற்றொழில் உபகரணங்கள் வழங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சரை மேற்கோள் காட்டி தகவல் திணைக்களம் செய்தி...

யாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் நடாத்தும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படையினரின் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலிற்கமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் யாழ்ப்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டிடங்களை...

வடக்கில் புதிதாக நான்கு பூங்காக்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எஸ்.கே.பத்திரண தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணிகளை தெரிவுசெய்வதற்கான வர்த்தகமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக வனவிலங்கு பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். இன்று நாட்டில் 22 தேசிய பூங்காங்கள் இருக்கின்றன. புதிய இந்த நான்கு பூங்காக்களுடன் மொத்தமாக 26 பூங்காக்களை...

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான களஞ்சியசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் ஆய்வு நிலையத்துடனான அலுவலகக்கட்டிக தொகுதி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கட்டடதொகுதியில் தங்குமிட வசதி நீர்த் தாங்கி ரானஸ்போமர் கூடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன . 33சதுர சுற்றளவைக் கொண்ட களஞ்சியசாலைக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட...

வடமாகாணத்தின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசனகுளமான வவுனிக்குளம் 2350 வருடங்கள் பழமையானது. எல்லாள மன்னனினால் கட்டப்பட்டதுதாக கூறப்படுகிறது. யுத்தம் காரணமாக கால்வாய்கள் உடைபெடுத்தநிலையில் காணப்பட்டதனால் இராணுவத்தின் 65 வது பிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் 1000 இராணுவம் வீரர்களைக் கொண்டும் பொதுமக்களின் ஒத்துழைப்புக் கொண்டும் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட வலதுகரை நீர்ப்பாசனக்கால்வாய் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தின் கனரகவாகனங்களின்...

All posts loaded
No more posts