- Tuesday
- February 25th, 2025

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், திடீர் விபத்து மற்றும் அவசர...

வளலாய் வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.மறைமாவட்ட குருக்களுக்கான ஓய்வு விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் கடற்படைத் தளபதி ரவீஸ் சின்னையா ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்படி விடுதியினைத் திறந்து வைத்துள்ளனர். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வடக்கு கடற்படைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த ஆயர் இல்லம் கடற்படை வீரர்களின் பொறியில்...

யாழ்.மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டங்களைத் தொடர்ந்தும் நோர்வே அரசாங்கம் முன்னெடுக்குமென நோர்வே உறுதியளித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து...

வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் 50 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி கேள்வி மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். குறித்த வீடமைப்பு திட்டம் தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொண்டு, திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும் எனவும், இந்த வீடமைப்பு திட்டத்திற்காக...

யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக நீரை சேகரிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடமராட்சி களப்புக்கு அருகில் 78 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மழை நீரை சேகரித்து பாதுகாப்பாக பயன்படுத்துவதே அந்த திட்டம் எனவும் பிரதமரின் அலுவலகம் கூறியுள்ளது. பிரதமர் நியமித்துள்ள வடக்கு மாகாண அபிவிருத்திக்குழு மற்றும் கொள்கை...

பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில், அபிவிருத்தி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலி பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்கள், இருக்கும் நிதியினை கொண்டு வானூர்தி நிலையத்தை முழு அளவிலான சிவில் வானூர்தி நிலையமாக மாற்ற வேண்டும் என வானூர்தி அதிகார சபையின் இயக்குநர் நாயகம் எச் எம்...

வடக்கு மாகாணத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வடமாகாணத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் பொதுமக்கள் மீள குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் சுகாதார அடிப்படை வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியாசாலைகளை அபிவிருத்திசெய்வதற்கான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக நெதர்லாந்து அரசாங்கத்தின்...

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு நடவடிகை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பு – தூத்துக்குடிக்கு இடையில் இருந்து வந்த கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ்...

குப்பையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் நாட்டினது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், கூட்டு உரம் தயாரிக்கவும் நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்தவொரு அரசாங்கமும் தீர்வு காணாத குப்பை பிரச்சினைக்கு இந்த அரசாங்கம்...

குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத்...

இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார். எதிர்காலத்தில் வடமாகாணத்திலும் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஜேர்மன் எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார். ஜேர்மன் இலங்கையில் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிள்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வர்த்தக சமூகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் ஒன்றில் ஜேர்மன்...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கை அரசாங்கமும், சீன மேர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனமும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்காளர்களாக மாறியுள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு எதிர்க் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு அமைப்புக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. இவ்வுடன்படிக்கை குறித்து கருத்துத்...

வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கான நிதிவழங்கலை 91 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனூடாக நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தலை நீக்கி, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீள ஆரம்பிக்க வழிசெய்ய ஜப்பான் எதிர்பார்த்துள்ளது....

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மருதங்கேணியில் இருந்த தாழையடி பெரும் கடல்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 05 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள கடல் நீரை...

வடக்கு மாகாண விவசாய அபிவிருத்திக்கு “மாகாணத்துக்கான குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிமூலம் 135 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த நிதி யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் பகிரப்படும். அந்த நிதியில் 18 வகையான விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருமாவட்டத்திலும் 18 வகையான...

1982 ஆம் ஆண்டு எரிக்கபட்ட யாழ் .நகர சந்தைக் கட்டடம், மீள அமைக்கப்படுவதை வரவேற்பதோடு, அதனை விரைவாக அமைத்துத் தர வேண்டும் என யாழ் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 1982ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட தினத்தில், மிகப் பழமை வாய்ந்ததும் யாழ்ப்பாண சரித்திரத்தில் அடையாளச் சின்னமாக இடம்பெற்ற நகர மத்தியில் அமைந்திருந்த...

யாழ்.வடமராட்சி கடலேரி நீர் வளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். தேசிய...

வடக்கு முதல்வர் சி.வி.விக்ணேஸ்வரன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர், தண்நீரூற்று உள்ளிட்ட பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார். இதற்கிணங்க குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்ட நூல் நிலையம், பொதுச்சந்தைகள், குடி நீர்விநியோக திட்டம் உள்ளிட்டவைகளை வடமாகாண முதலமைச்சர் நேற்று(வெள்ளிக்கழமை) திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டிவைக்கப்பட்டது. நீச்சல் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ள குறித்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லை நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வல்வை குமரன் ஆனந்தனின் உறவினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு கமநலசேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று கோடி 70 இலட்சம் ரூபா செலவில் பத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மத்திய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய குளங்கள் புனரமைப்பு, நீர் விநியோக வாய்க்கால்கள் புனரமைப்பு போன்ற பத்து வேலைத்திட்டங்கள்...

All posts loaded
No more posts