Ad Widget

கைதடி மத்திய மருந்தகத்தை அகற்றி வடமாகாண சபைத் தலைமையகம் அமைக்கும் திட்டம்:

கைதடி மத்திய மருந்தகம் அமைந்துள்ள இடத்தில் வடமாகாண சபையின் தலைமையகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த பராமரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மையப்பகுதியில் இக்கைதடி ஆரம்ப மருத்துவ...

நல்லூரில் நல்ல வருமானம்!; மாநகர முதல்வர் மகிழ்ச்சி

கடந்த ஆண்டிலும் பார்க்க இந்த ஆண்டு நல்லூர் உற்சவ காலத்தில் யாழ். மாநகர சபைக்கு 20 லட்சம் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா. நல்லூர் உற்சவகால செயற்பாடுகள் இம்முறை முன்னைய காலங்களைவிட சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற்றி ருந்ததாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இருந்துகூட தமிழ் மக்கள் நல்லூர் திருவிழாவுக்கு...
Ad Widget

பனை ஆராய்ச்சி நிலையத்தை புனரமைப்பின் பின்னர் திறப்பு

வடக்கில் பனை வளம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தப் பனை ஆராய்ச்சி நிலையத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பனை அபிவிருத்திச் சபை மேற்கொண்டது.கைதடியில் மீளப் புனரமைக்கப்பட்டு வரும் பனை ஆராய்ச்சி நிலையத்தை இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் திறந்து வைக்கவுள்ளார்.இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையம் அடுத்த மாதம் 13...

காங்கேசன்துறை சீமெந்து ஆலை வருட இறுதியில் உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளது

1950 ஆம் ஆண்டில், முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ஜி.ஜி. பொன்னம்பலத்தினால் அமைக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, இந்த வருட இறுதியில் தமது உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளது.அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போர் காரணமாக பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை. தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. (more…)

பளை வரை வந்தது லக்ஸபான மின்சாரம்

20 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் லக்ஸபான மின்சாரம் நேற்று முதல் பளைப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக 91ம் ஆண்டுக்குப் பின்னர் லக்ஸபான மின்விநியோகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. (more…)

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு அடிக்கப் போகிறது அதிர்ஷ்டம்; அதி நவீன நகரத் திட்டத்துக்கு தெரிவு

இலங்கையில் பிரதேச அமைப்பியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள 15 நகரங்களை அதி நவீன வசதிகள் கொண்ட முன்மாதிரி நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களும் அதி நவீன மயப்படுத்தப்படவுள்ளன. (more…)

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் தடங்கல்!

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் கடந்த வாரத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு வகைகளில் ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றில் இந்தத்தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. கணக்குகளுக்கான கடவுச்சொல் பயனாளர் சொல் ஆகியவற்றினை பரிசோதிக்கும் சேவரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்தத்தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரெலிகொம் இன் தொழில்நுட்பப்பிரிவில்...

JUICE-2012 இற்காக யாழ் பல்கலைக்கழகத்தினால் ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளது

”போருக்கு பிந்தைய சூழலில் திறன் அபிவிருத்தி ” என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழகம் வரும் ஜூலை 20ம் திகதி நடாத்தவிருக்கும் மாநாட்டுக்காக ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டிருக்கிறது பட்டியலிடப்பட்ட துறைகளில் இதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக தகவல்களை http://www.jfn.ac.lk/juice2012/ இல் பார்வையிடலாம்.பல்கலைக்கழக மாணவர்கள் துறைசார் வல்லுனர்கள் கூட ஆய்வுகளை சமர்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது...

யாழ். குடாநாட்டுக்கான நேரடி மின்விநியோகம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கான நேரடி மின்விநியோகம் இன்று உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைப்பப்படவுள்ளது. இந்த நேரடி மின்விநியோகத்தை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள மின்சக்தி மின்வலு அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.தென்னிலங்கையிலிருந்து வரும் நீர் மின்வலு வழங்கலின் மூலமான 33,000 உயர் மின்அழுத்த இணைப்பு வடமாகாணத்துக்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் வடமாகாணத்துக்கான...

ஜனாதிபதி தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலளர் எஸ்.இளங்கோவன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இவ் அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் மற்றும் அரச திணைக்களங்கள், பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

யாழில் 14 மாடி கொண்ட உல்லாச விடுதி

ஹோட்டல்ஸ் பிறைவேட் லிமிட்டட் நிறுவனத்தால் யாழில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 மாடி கொண்ட “ஜெட்விங் யாழ்” உல்லாச விடுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா (03.02.2012) வெள்ளிக்கிழமை மதியம் 01.00மணிக்கு நடைபெற்றது.ராஜன் ஆசீர்வாதம் தலைமையில் நடைம்பெற்ற இலக்கம் 37 மகாத்மா காந்தி வீதியல் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், (more…)

யாழ்.ஆஸ்பத்திரிக்கு இதய இயக்கிகள் உட்பட ரூ.60 லட்சம் பெறுமதியான உபகரணங்கள்புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு அன்பளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர இருதய இயக்கி மற்றும் உபகரணங்கள் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். (more…)