- Saturday
- January 4th, 2025
இந்திய அரசாங்கத்தினால் யாழில் 12 கோடி ரூபாவில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு விரைவில் இடம்பெறுமென்று யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். (more…)
போரினால் பாதிக்கப்பட்டும் இடம்பெயர்ந்துமுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களின் திருத்தப்பணிகளுக்கென நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் - பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி (more…)
வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் முதலீட்டாளர்களாக இணைய முடியும். சுற்றுலாத்துறை ஊடாக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுடைய முதலீட்டாளர்கள் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளலாம். (more…)
யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நிரந்தர மின்சார வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதென்பது பலமுக்கிய அரசாங்கங்களுக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் சாதனையைச் செய்திருப்பது உலகெங்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)
பட்டதாரிப் பயிலுநர்கள் 514பேர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(26.12.2012) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். (more…)
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வர்ணப்பூச்சு வேலைகளிற்காக வெளிநாட்டுப் பொது நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூபா 10 இலட்சம் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்று யாழ்.மாநகர சபைத் தலைவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். (more…)
2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இந்திய வீட்டுத்திட்டம் அடுத்த கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இவர்களில் புள்ளித்திட்ட அடிப்படையில் 10 இற்கு மேல் பெற்ற வறுமையானவர்களுக்கே வீட்டுத் திட்டப் பணம் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது. (more…)
சாவகச்சேரி நகரசபையின் அடுத்த வருடத்துக்கான உத்தேச வரவுசெலவுத் திட்டம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. நகரசபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போது: (more…)
வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கு தலா 100 கோடி ரூபா வீதம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தீவுப்பகுதியில் உள்ள மூன்று பிரதேச சபைகளினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கென 300 கோடி ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது. (more…)
யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவ்வைத்தியசாலை மண்டபத்தில் வைத்தியட்சகர் வைத்தியகலாநிதி எம்.உமாசங்கர் தலைமையிலேயே இக்கூட்டம் நடைபெற்றது. (more…)
வட மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாதுறை ஒன்றியத்தின் தலைவர் வை.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.வடமாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பில் சனிக்கிழமை யாழ். வர்த்தக சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் குறிப்பட்டுள்ளார். (more…)
யாழ். கல்வி வலயத்தின் மீள் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர் கோட்ட அலுவலகம், மற்றும் யாழ். கோட்ட கல்வி அலுவலகம் உட்பட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் என்பன நேற்றய தினம் திறந்துவைக்கப்பட்டன. (more…)
சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்து ஜனவரி மாதம் முதல் குடாநாட்டுக்குப் புதிதாக 24 மெகா வாற்ஸ் மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)
அங்காடி வியாபாரிகளுக்கான புதிய கடைகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.யாழ். மாநகர சபையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். (more…)
இந்துக் கோவில்களின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்துக் கோவில்களின் பிரதிநிதிகளிடம் நிதியை கையளித்தார். (more…)
வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த சேந்தாங்குளம் பகுதியில், ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பான ஐ.ஓ.எம். நிறுவனத்தால் அமைக்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள், அந்தப் பகுதி மக்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டன. (more…)
சாவகச்சேரி பிரதேச சபையால் அடுத்த வருடத்தில் பிரதேசத்தில் 310 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (more…)
பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட யாழ். கொட்டடிப் பகுதியில் சுற்றுலா விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.1983 மே தொடக்கம் இங்கு குடியிருந்த 28 குடும்பங்கள் வலுக் கட்டாமயமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.அந்த இடத்தில் இன்று 250 மில்லியன் ரூபாவில் சுற்றுலா விடுதி அமைப்தற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts