- Saturday
- December 21st, 2024
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக அதிவேகப் நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கண்டி - கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின்...
யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதகதியில் புனரமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள் அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இக்குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய முனையமொன்றை அமைக்கும்...
எதிர்வரும் வருடம் 08 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள குறித்த 08 புகையிரதங்களில் 04 புகையிரதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், டிக்கெட் வழங்குவதை...
யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கிறவல் கொண்டு செல்லும் டிப்பா் வாகனங்களால் சேதமாக்கப்பட்ட வீதியை இளைஞா்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து டிப்பா் வாகனங்களாலேயே புனரமைப்பு செய்துள்ளனா். கிளிநொச்சி - அழகாபுாி பகுதியின் ஊடாக செல்லும் பழைய கண்டி வீதியில் உள்ள கொக்காவில் சந்தியை அண்மித்த பகுதியில் தற்போது கிரவல் ஏற்ற அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியிடங்களிற்கு ஏற்றிச் செல்லப்படுகின்றது....
பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் கொழும்பு கட்டுநாயக்க, கொழும்பு இரத்மலானை, மட்டக்களப்பு மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்துடன் சேர்த்து தற்பொழுது நாட்டில் 5 சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய...
பாக்கு நீரிணையை கடந்து சாதனையை நிலை நாட்டிய அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் திறந்துவைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்....
வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள்...
“பனை மான்மியம்” எனும் தலைப்பிலான வடக்கு மாகாண பனை எழுச்சி வாரக் கண்காட்சி நேற்றுத் திங்கட்கிழமை(22) முற்பகல்-09.30 மணியளவில் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது. “பனை எங்கள் சூழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம்” எனும் தொனிப் பொருளில் இம்முறை பனை எழுச்சிவாரம் இடம்பெறுகிறது. வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் பொ....
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக...
வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எனினும் இவ்விடயங்களில் அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து செயற்படவில்லையென ஆதங்கம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண...
பலாலியில் இருந்து 72 ஆசனங்களையுடைய விமான சேவையை உடன் ஆரம்பிக்க முடியும் . இருப்பினும் அதற்கான அலுவலக வசதிகளை உடனடியாக ஏற்படுத்தியதும் விமான சேவையை ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் என இலங்கை சிவில் விமான சேவைப் பணிப்பாளர் தெரிவித்தார். வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியின் 6வது கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலமையில் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில்...
சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப் பலகை திரைநீக்கம்...
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நன்கொடையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு நவீன கட்டிடத்தை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஊடாக 740...
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் படகு இறங்குதுறை அகலிக்கப்பட்டு அமைக்கப்படுவதுடன் ஆலயத்துக்கு வீதியும் அகலிக்கப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் 19 ஆம் திகதி நடந்த வணிக மாநாடு தம்மிக பெரேரா என்ற வணிகர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதில்லை என்றும், இது புலம்பெயர் தமிழர்களின் முறைப்பாடு என்றும், கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில்...
6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார். இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கையளிக்கப்பட்டது....
யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் நேற்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் வைத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும்...
யாழ்ப்பாணம் வந்துள்ள மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார். அத்துடன் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தினையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ்...
Loading posts...
All posts loaded
No more posts