- Sunday
- November 24th, 2024
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலகுவாக புத்தகங்களை வாசிக்கக் கூடியதாக “I book” சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கக்...
யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளின் உற்பத்தியை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று வியாழக்கிழமை (30.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். வட்டு கிழக்கு சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு...
யாழ். மாவட்டத்திற்கு இம்முறை வாழ்வின் எழுச்சி முதலீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கென நாற்பது மில்லியன் ரூபாய் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள சகல பிரேதச செயலக பிரிவுகளினூடாகவும் மக்களினால் முன்மொழியப்பட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில்...
வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை...
யாழ் மாவட்டத்திலுள்ள 435 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 662 திட்டங்கள் அமுல்படுத்துவதற்கென வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 435 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் 15,000 கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் இத்திட்டமானது பயனாளிகளின் 25 விகித பங்களிப்புடன் சகல பிரதேசங்களிலும்...
கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு தேர்தல் தொகுதிக்கு தலா 300 இலட்சம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் தெரிவித்தார். தடைப்பட்டுள்ள அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாவட்ட செயலாளர்கள் அலரி...
வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக அதிக எண்ணிக்கையான இளைஞர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுமாறு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பணித்துள்ளார். வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் கூட்டுறவு அபிவிருத்தி...
மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தியுள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய தரப்புகளிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் கடற்கரைக்குச் சமீபமாக 25 ஹெக்டெயர் அரச காணியில்...
அச்சுவேலி வளலாய் அக்கரை கடற்கரையினை அழகுபடுத்துவதற்காக வலி.கிழக்கு பிரதேச சபை ஒரு மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இப்பிரதேச சபையின் நடவடிக்கையின் மூலம் இக்கடற்கரை பிரதேசம் உல்லாசக் கடற்கரை பிரதேசமாக அழகுபடுத்தப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதரண நிலை காரணமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரை கடற்கரைப் பகுதி கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச்...
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச 'வை - பை' (wi-fi)இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச வை...
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இம் மாகாணத்தில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழில் நேற்று நடைபெற்றது. இதன்போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சத்தியலிங்கம் இவ்வாறு...
கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவியில் சுமார் 3.3 பில்லியன் ரூபா செலவில் இந்த இரண்டு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி வள்ளி முனை,புலோப்பளை ஆகிய இடங்களிலேயே காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிடம் இன்று (23) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ் பழைய பூங்கா வீதியில் அமைக்கப்பட்டுள் இப் பயிற்சி நிலையத்தின் நிர்மானப்பணிகளுக்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 68 மில்லியன் ரூபா...
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த 2014ஆம் ஆண்டு 303 வீடுகள் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பரந்த அடிப்படையிலான கடன்திட்டம், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டம்,...
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலுள்ள கல்வியற்கல்லூரி உட்பட ஆறு பாடசாலைகளுக்கு ஆறரை இலட்சம் ரூபாயும் ஆறு முன்பள்ளிகளுக்கு 04 இலட்சம் ரூபாயும் மாகாண சபை நிதியிலிருந்து வழங்கியுள்ளார். மிருசுவில் விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்திற்கு கரவெட்டி கட்டவேலி அ.மி.த.க பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும்...
காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ சேவையினை அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ள அதேவேளை, உத்தியோகபூர்வ பயணத்திலும் பங்கேற்றிருந்தனர். 2011 ஆம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி ஓமந்தை வரையும்,...
வடமாகாணத்துக்கு வாழ்வாதார உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இதுதொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருப்பதாகவும் இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி வியாழக்கிழமை (01) தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தால் வடமாகாணத்தில் கடந்த வருடம் (2013) மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், உதவிகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு...
யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
யாழ்தேவி ரயில் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வரவுள்ள அன்றைய நாள் உத்தியோகபூர்வமாக புகையிரத சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்தநிலையில் புகையிரத புனரமைப்பு வேலைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காங்கேசன்துறைக்கான...
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு நேற்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து...
Loading posts...
All posts loaded
No more posts