- Tuesday
- February 25th, 2025

யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பானிய நிதியம் என்பனவற்றின் நிதியுதவியுடன் நெடுந்தீவு மக்களின் குடிநீர் தேவையினை நிறைவு செய்யும் முகமாக கடல் (உவர்) நீரை நன்னீராக்கும் திட்டத்தின் பின்னோக்கிய பிரசாரணம் (Reverse Osmosis) முறையிலான இரண்டு பொறிகளை அமைத்து வெற்றி பெற்றுள்ளனர். நெடுந்தீவு பிரதேசம்...

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார வலயங்களையும் எதிர்பார்த்து இருக்கின்றோம். இவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது கிட்டியுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக...

கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு...

பாடசாலைகளில் உள்ள நெருக்கடிக்கு தீர்வாக 'அருகிலுள்ள பாடசாலை... சிறந்த பாடசாலை' என்ற தொனிப்பொருளில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பிரபல பாடசாலைகளுக்குள்ள பௌதீக மற்றும் ஆளணி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும நேற்று...

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதமாக வடமாகாண விவசாய அமைச்சால் ரூபா 5 மில்லியன் பெறுமதியான நவீன நெல்அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான குறைதீர் நடமாடும் சேவை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01.12.2015) நடைபெற்றது. இதன்போது, நெல்அறுவடை இயந்திரத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒட்டுசுட்டான் ஒருங்கிணைந்த...

2016ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டில் 3500 அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi வலயங்களை...

யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 செயற்றிட்டங்கள், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த, 64.51 மில்லியன் ரூபாயும் பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க...

வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தரிசனம் நிறுவனத்தின் 2..5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார். இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது....

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் சங்கத்தின் வன்னிப்பிராந்தியக்கிளை ஒன்று இன்று (14.10.2015) கல்லுாரியின் மூத்த பழைய மாணவரும் மகாதேவா ஆச்சிரமத்தின் இயக்குனரும் முன்னாள் அரசாங்க அதிபருமான தி.இராஜநாயகத்தின் தலைமையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் பழைமாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்சங்க தாய்ச்சங்க பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்....

இந்தியா - இலங்கைக்கு இடையே, சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான பேச்சு, அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கவுள்ளது. இந்திய மத்திய, சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் இது குறித்து கூறியதாவது, அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவதற்கு, போக்குவரத்து வசதி மிகவும் முக்கியம் என, மத்திய அரசு கருதுகிறது. பங்களாதேஷ், பூடான், நேபாளம் ஆகிய...

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு 11 மாவட்ட அமைச்சு பதவிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 08 பதவிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று பதவிகளும் கிடைக்கவுள்ளன. பதவிகளை பெற்றுகொள்ளும் மாவட்ட அமைச்சர்களின் பெயர் விபரங்கள்,...

வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த வியாழக்கிழமை (17.09.2015) திறந்துவைத்துள்ளார். பூநகரி பள்ளிக்குடாவில் கொடுவா மற்றும் பாலைமீன் வளர்ப்புத்திட்டம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையை அண்மித்ததான கடலில் பண்ணைகள் அமைத்து வளர்க்கப்படும் இம்மீன்களுக்குப் புரதத் தீவனத்தை வழங்குவதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடலில்...

வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமாகாணம் ஆகியவற்றின் குடி நீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் ஒன்றினை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்திற்கென உதவும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியை வழங்க முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, 90 பில்லியன் ரூபா (அறுநூற்று எழுபத்து...

நெடுந்தீவைச் சேர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாண கிளை மற்றும் UTE ஆகியன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்திகரிக்கும் (Reverse Osmosis) நிலையங்களை நிறுவ முன்வந்துள்ளன. நெடுந்தீவுப் பகுதியில் தூய்மையான குடிநீருக்காக காணப்படும் தேவையை நிவர்த்தி செய்யும்...

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகள் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களுக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை...

காரைநகரின் பிரசித்திபெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (31.08.2015) சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளார். காரைநகர் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடிநீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள்...

ஏ-9 வீதியின் ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைத்திரி பால சிறிசேன பதவியெற்ற பின்னர் பயணிகள் சோதனை தளர்த்தப்பட்டு...

கிளிநொச்சி இரணைமடுக்குள அணைக்கட்டுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திங்கட்கிழமை (24.08.2015) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு இணங்கினால் மாத்திரமே இரணைமடுக்குள அணைக்கட்டுத் திருத்த வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்ற நிபந்தனை முன்னர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இரணைமடுக்குளத்திலிருந்து நீரை யாழ்ப்பாணத்துக்கு...

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 23.35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் 1032 வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்முன்னெடுக்கப்படவுள்ளன.விவசாயம்,மீன்பிடி,கால்நடை, சந்தைப்படுத்தல் மற்றும் கைத்தொழில் ஆகிய பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 75,000ரூபா பெறுமதியான...

All posts loaded
No more posts