- Tuesday
- January 21st, 2025
ரூபா மூன்றரைக்கோடி செலவில் யாழ் போதனா வைத்தியசாலை கருவளச்சிகிச்சை நிலையத்திற்கு இயந்திரம் அன்பளிப்பு
சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ,லண்டன் அபயம் அறக்கட்டளையூடாக இப்பெறுமதி மிக்க ஸ்கானர் இயந்திரம் பெறப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை கருவளச்சிகிச்சை நிலையத்தின் பயன்பாட்டுக்காக ,ரூபா மூன்றரைக்கோடி செலவில் இவ்வியந்திரத்தை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழையமாணவன் சதா.மங்களேஸ்வரன் குடும்பம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் இணைந்து உருவாக்கிய பெண்கள் சுகநல நிலையத்தில் யாழ் மருத்துவபீடத்திற்குரிய கருவள சிகிச்சையகமானது (24.04.2024 ) நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இவ்வளவு காலமும் யாழ்.போதனா வைத்தியசாலையிலே நடைபெற்றுக்கொண்டிருந்த கருவள சிகிச்சையகமானது நேற்று முதல் இல 61 முதலாம் ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்கள்...
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும்...
பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை...
நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை(வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்.மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்.மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
பருத்தித்துறையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தின் அபிருத்தித் திட்டத்தை பொறுப்பேற்று முன்னெடுப்பது தொடர்பில் இந்தியா - சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கொழும்பு துறைமுக திட்டத்துக்கு நிகராக வடக்கு...
யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது . யாழ் மாநகர முதல்வரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுள்ளன. அதாவது, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு...
யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (27) யாப்பாணம் கலாச்சார மண்டபத்திற்கு வருகை தந்து பேச்சு நடத்தினார். இதில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து யாழ்.மாநகர சபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்.. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்நேற்று (புதன்கிழமை)காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்து திறந்துவைத்தார் . இது குறித்து கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர்...
வரலாற்று பெருமை மிக்க யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நேற்று (23) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை - காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு...
மூடப்பட்டிருக்கும் உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமெந்து கூட்டுத்தாபனத்தை பார்வையிட சென்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை ஆராய்ந்தனர். தேசிய வருமானத்திற்கு பங்களிக்க கூடிய, தற்போது மூடப்பட்டுள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ´செழிப்பு பார்வை கொள்கை...
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம், நாட்டின் மின்...
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செயற்திறன்மிக்க தலைமையின் கீழ் கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டலின் மூலம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற விஷேட 1 லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமிய வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் சிறப்பு வாய்ந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும்...
“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் நேற்றையதினம் (06) காலை இடம்பெற்றது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான சதாசிவம் இராமநாதன் அவர்களால் வசந்தபுரம் நாவாந்துறை அண்ணா சனசமூக நிலையத்தில்...
யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை)சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தைக்...
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதார நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கயில், யாழ் மாவட்டத்தில் வறுமை...
எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் ரெயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரெயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதன் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரெயில் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து ரெயில்வே நிலையங்களுக்கு அருகிலும் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்காக ரெயில் - பஸ் கூட்டு சேவை...
யாழ் காக்கை தீவு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் மாநகர சபையால் ஆரம்பித்து வைக்கப்பப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மாநகர சபையின் எல்லைப் பரப்பில் உள்ள விடுதிகள் , உணவகங்களில் இருந்து அகற்றப்படும் கழுவு நீர் சுத்துகரிப்பில் நீண்டகாலமாக எதிர் நோக்கி வந்த பிரச்சணைக்கு தீர்வாக மாநகர...
யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசுடனான ஒப்பந்த்த்துற்கு நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலகயத்மினை இந்திய அரசு அபிவிருத்தி செய்து விமான சேவைகள. ஆரம்பிக்கவிருந்த சூழலில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தடைப்பட்டு பின்னர் இலங்கை அரசின் 2.26 பில்லியன் ரூபா நிதியில் முதல்கட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு 2019-10-17...
Loading posts...
All posts loaded
No more posts