- Saturday
- December 21st, 2024
தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம்...
கிளிநொச்சி டிப்போ சந்தியில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவது தொடர்ந்தால் மக்களே ஒருமித்த அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அவர்...
தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் விக்னேஸ்வரனின் 2ஆம் வாக்கு அளிப்பது பற்றிய கூற்று சந்கேத்தை ஏற்படுத்துவதோடு பொதுவேட்பாளர் விடயத்தினை மலினப்படுத்துவதாகவும் உள்ளதென்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...
முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் ஏ9 வீதியில் இடம்பெற்றிருந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே...
முல்லைத்தீவு - ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனொருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (01.04.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பாடசலையைச் சேர்ந்த நாகராசா ஜோன்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம்...
உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில் , யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார். காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டமானது டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு...
கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றின் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் வங்கியின் பெண் உத்தியோகத்தரும் அவரது கணவனும் இணைந்து முதியவர் ஒருவரிடம் மூன்று இலட்சத்து...
இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று (22) கையளித்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு கிளிநொச்சி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்ப்பரவலைத் தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழக்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்திருப்பதனால் நீர் தேங்கி நுளம்புக் குடம்பிகள் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச...
முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக நேற்று (31.12.2023)குறித்த பெண் நின்றுக்கொண்டிருந்ததாகவும், இதன்போதே கணவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படுகயாமடைந்த பெண் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே குளங்களின் கீழ் பகுதிகளில்...
கிளிநொச்சியில் அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தருமபுரம் பகுதியில் உள்ள பாடசாலை சிலவற்றுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை...
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
முல்லைத்தீவு - கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில்...
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள வீதி கடந்த 48 வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாதளவு சீரற்று காணப்படுகிறது. குறிப்பாக, மழைக் காலங்களில் முற்றும் முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் இந்த வீதி கால்வாய் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மேலும் கூறுவதாவது : நாளாந்த தேவைகளுக்காக...
Loading posts...
All posts loaded
No more posts