- Saturday
- December 28th, 2024
வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தடையாக இருக்கின்றார் என்பதற்கு ஆதாரங்களுடன் உரிய விடயங்களை படிமுறையாக தந்தால், வடமாகாண ஆளுநருக்கு எதிராக வடமாகாண சபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்துக்கான...
வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இன்று ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போது முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறுகிறது....
பத்திரிகைகள் பக்கச் சார்பாக இயங்கி, பத்திரிகை பயங்கரவாதத்தை நடத்துகின்றன. உண்மையான செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு காசு கொடுக்க வேண்டுமா? என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, வடமாகாண சபை அமர்வில் தான் கூறிய கருத்தொன்றுக்கு...
வடமாகாண சபையின் அபிவிருத்தி மற்றும் கவனிப்புக்களில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளிலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கி வடமாகாண சபை செயற்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.தியாகராசா கோரிக்கை முன்வைத்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, மழை...
அரசியல் யாப்புக்கு முரணான விதத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணை போகும் வர்த்தமானி அறிவித்தலை (1882/6 இலக்கம் - 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி) ரத்து செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது,...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் உள்ளக வீதி திருத்தல் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதி திருத்தல், வர்ணம் பூசுதல் ஆகியவற்றுக்காக 8.87 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11)...
நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லையென்றால் அதற்காக போராடுவதற்கு தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வியாழக்கிழமை (11) தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, நெல்சிப் திட்டத்தில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில், அதற்கு...
சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது கடந்த அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கியெறிந்து சபையின்...
போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவையின் 21 ஆவது அமர்வு இன்று நடைபெற்று...
வடக்கு மாகாண முதலமைச்சரின் வசம் இருந்த சில அமைச்சின் கடமைகள், மேலதிக பொறுப்பக்கள் ஏனைய அமைச்சர்கள் மூவரிடம் மிக இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சுக்களின் பொறுப்புக்களை குறித்த மூன்று அமைச்சர்களும் பொறுப்போற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சரின் வசம் இருந்து, கூட்டுறவுதுறை, நீர் வழங்கல் -...
யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்து நீர் மாசடைதலை தடுக்க வேண்டும் என்ற...
தமிழர் வரலாறுகளுக்கு தற்போது பாடப்புத்தகங்களில் மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் சந்ததியினருக்கு எமது வரலாறுகள் அறிந்து கொள்வதற்கு தனிநூல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என உறுப்பினர் பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வடக்கு அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு அவையின் 20 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போதே உறுப்பினர் குறித்த பிரேணையினை முன்வைத்தார். மேலும் பிரேரணையில்...
சுன்னாகம் அனல் மின்நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கோ அல்லது வடக்கில் புதிதாக வேறு அனல் மின்நிலையங்களைத் தாபிப்பதற்கோ மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கக்கூடாது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (04.12.2014) வடக்கு மாகாணசபையின் 20ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை மண்டபத்தில்...
தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அறிவுரை வழங்கியுள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு தடை போடப்பட்டமை தொடர்பில் கடந்த அமர்வில் எதிர்க்கட்சித்தலைவர் கொண்டுவந்த கவனயீர்ப்புப் பிரேரணைக்கு சுகாதார அமைச்சரால் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டது....
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு மாகாண சபையிலும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இன்னும் அரை மணி நேரத்தில் கூடவுள்ள வடக்கு மாகாண சபை பெரும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நேற்றைய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத்...
மத்திய அரசாங்கத்தினால் மட்டுமல்ல வடக்கு மாகாண அரசாலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக உணர்வதாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயந்து அகதி முகாம்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர். நேற்று இப்பகுதி மக்கள் மழையால் எதிர்கொள்ளும் அவலங்களை பார்வையிட்ட செய்தியாளர்களிடம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் இருக்க இடம்கூட இன்றி அந்தரிக்கும் இந்த மக்கள்,...
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ், மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார்,...
கொஸ்லந்தை மீரியபெத்தயில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நேற்று மக்களிடம் கையிக்கப்பட்டுள்ளன. (more…)
யாழ். மாவட்டத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts