புதிய ஆண்டில் சமூகங்களிடையே நல்லுறவு உருவாக்கட்டும் – முதலமைச்சர்

புதிய ஆண்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களின் உற்சாகம் உருவாகவும், அனைத்து சமூகங்களிடையே பரஸ்பர நல்லுறவுகளும் சாந்தியும் சமாதானமும் நிலவவும் இறைவனிடம் வேண்டுவோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில், போரினால் இடம்பெயர்ந்த மற்றும் 2014 ஆம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்...

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி கடிதம்!

வடமாகாண சபை உறுப்பினர்கள், தமக்கு பாதுகாப்புத் தேவை என்று கோரும் பட்சத்தில் அவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் கோரியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று புதன்கிழமை (31) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் வடமாகாண சபை...
Ad Widget

வடமாகாண சபையின் வரவு – செலவு திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு அனைத்து துறைகளுக்கும் தேவையாக பாதீடுகள் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது....

வடக்கு மாகாணசபை வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றவில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் வழங்குவதாக வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்றவாறு வழங்கவில்லையென வவுனியா மாவட்ட பொதுமக்கள் அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். வடமாகாணசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் ஐவருக்கு...

இயக்குநர் பாரதிராஜா வடக்கு முதல்வர் சந்திப்பு

தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) மரியாதை நிமித்தமாக வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை அவரது வாசஸ்தலத்துக்குச் சென்று சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் வடக்கு முதல்வருடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டிருந்தார்.

வ.மா. முதலமைச்சரின் வங்கிக் கணக்கைத் திறக்க ஆளுநர் அனுமதி மறுப்பு

வடமாகாண முதலமைச்சரின் பேரில் ஒரு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழங்காவிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு...

தேர்தல் பணியில் ஈடுபட தவராசாவுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு தனக்கு இரண்டு பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண...

ஆளுநர், பிரதம செயலர் பதவிகள் சட்டவிரோதமானவை; வடக்கு முதல்வர்

கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை அமைக்க முன்னரே வடக்கில் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இருந்துள்ளனர். எனவே மாகாண சபை உருவாகிய பின்னர் அவர்களை மாற்றுமாறு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு...

அனந்தி, சிவாஜிலிங்கம் நடுநிலை:2015 வடமாகாணசபை ”பட்ஜெட்” நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான் வாக்கெடுப்பின் போது  தாங்கள் நடுநிலை வகிக்கப்போவதாக ஆளுங்கட்சி உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, மற்றைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு-செலவுத்திட்டம் நிறைவேறியது. வடமாகாண சபை வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை...

வடக்கு மாகாணசபை 2015 ஆம் ஆண்டுக்கான பாதீடு

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 19.12.2014 அன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ உறுப்பினர்களே, மதிப்புக்குரிய செயலாளர்களே, திணைக்கள அதிகாரிகளே, உங்கள்...

நியதிச் சட்டங்களை உருவாக்க தாமதம் ஏன்? வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

நிதி இல்லை, ஆளணிப் பற்றாக்குறை என்று காரணம் கூறாமல் அர்ப்பணிப்புடன் நியதிச் சட்டங்களை துரிதமாக உருவாக்க வேண்டுமென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். நேற்று கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடமாகாண சபைக்கான 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆம் நாள் அமர்வின்போது...

முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் – டெனீஸ்வரன்

எமது விடிவுக்காக போராடிய முன்னாள் போராளிகளுக்கும், உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் 2015ஆம் ஆண்டில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உதவிகள் செய்யப்படும் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம்...

கேட்டது 149.95 மில்லியன் கிடைத்தது 27.2 மில்லியன் – சி.வி.விக்னேஸ்வரன்

வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 27.2 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக அமையப்போகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு...

முதலமைச்சர் அதிகாரங்களை பயன்படுத்தாமல் இருக்கின்றார் – கஜதீபன்

'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களை பயன்படுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. உடனடியாக முதலமைச்சர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்' என ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதம், இரண்டாவது நாளாக கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று...

ஆளுனருக்காக பரிந்து பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம்!

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநர் செயலகத்திற்கான  நிதி ஒதுக்கீட்டை எதிர்ப்புக்கள் மத்தியில் அங்கீகரிக்க வைத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணைகள் இன்று காலை வடமாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மதிய...

நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணம் 6 ஆவது இடம்

மத்திய அரசால் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணம் ஆறாவது இடத்தில் இருப்பதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17) இடம்பெற்றது. இதன்போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

மோதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எம்.விமலசேன புதன்கிழமை (17) தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததுடன் சிலர்...

பேரவை செயலகத்துக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

வடமாகாண பேரவை செயலகத்துக்கு அதிகப்படியான வசதிகள் செய்யவேண்டியிருப்பதால் அதற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17)...

தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை முதலிடம்

தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான சட்ட அமுல்படுத்தலில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் வியாழக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஐரோப்பிய ஆசிய தொழில் கூட்டுறவு மாநாடு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 3 திகதி...

அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெறமாட்டோம் – முதலமைச்சர்

தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண பேரவைச் மண்டபத்தில் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான...
Loading posts...

All posts loaded

No more posts