- Wednesday
- January 15th, 2025
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...
கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்....
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்...
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறீலங்காப் படையினர் அனுமதியளித்துள்ளனர். இடம்பெயர்ந்து மாவிட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள 130 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு, ஊறணிப் பகுதியில் இருந்து அத்தொழிலை...
பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும். தருமபுரம் விவசாயிகள்,...
சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சுன்னாகம் நிலத்தடி நீரினை அருந்தலாமா?...
ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில்...
வடக்கு மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு வசதியாக செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அடுத்த வருடம் முதல் செயல்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நேற்று தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு...
வலி. வடக்குப் பகுதியில் மீளக்குடியமரும் மக்களிற்கான வீட்டுத்திட்டத்திற்கான கட்டிட அனுமதியினை பிரதேச சபை வழங்க ஏற்படும் தாமதம் காரணமாக இறுதிக் கட்ட 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இது தொடர்பில் குறித்த பிரதேச சபைக்குட்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவிக்கையில், வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேறும்...
வெளிநாடுகளில் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள அதிநவீன சத்திரசிகிச்சை கூடத்திற்கு யாழ்ப்பாணத்திலுள்ள சில வைத்திய நிபுணர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கவுள்ள மிகச் சிறந்த வைத்திய கூடம் திரும்பிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமாக இருந்தால், தனியார் வைத்தியசாலைகளின் வருமானம் இழக்கப்படும் என்று கருதியே யாழ்ப்பாணத்தின்...
நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில் தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவிடத்தில் குப்பைகளும் சுவரொட்டிகளும் குவிந்து கிடப்பதாகவும், குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பெயர் குறிப்பிடப்பட்டு “புல்மோட்டையில் கனிய வளத்தையும், கடஹ கஷா நிலக்கரி சுரங்கத்தையும் விற்பதற்கு எதிராக...
வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களின் நிலக்கீழ் நீர் விரைவாக கல்சிய அதிகரிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் போரில் அழிந்தது போக மிகுதியாக ஊர் திரும்பியவர்களை சிறுநீரக நோய் அரிக்கின்றது. உதாரணத்திற்கு வவுனியா வடக்கில் இருக்கும் கற்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம். நெடுங்கேணி பிரதேச சபைக்கு கீழ் உள்ள கிராமங்களில் கற்குளம் கிராமமும் ஒன்றாகும். தனி கிராம சேவகர் பிரிவாக...
யாழ் மாவட்ட பொதுமக்கள் துணிந்து தமது குறைகளையும் பிரச்சினையும் வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகவோ, மேலதிக அரசாங்க அதிபரிடமோ, 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதமூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் தகவல் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை வழங்குபவர்கள் தொடர்பிலான விபரங்கள...
கிளிநொச்சி கணகாம்பிகை குளத்தில் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் சுடலை அமைத்துள்ளமையால் மழைக்காலங்களில் புதைக்கவும் முடியாது எரிக்கவும் முடியாத நிலையில் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது பாடசாலைக்கு அருகில் மக்களின் குடியிருப்புக்களுக்கு நெருக்கமாக புதிய சுடலை அமைக்கும் பணியை அரசியல் தரப்புக்கள் மேற்கொண்ட போது அதற்கு மக்கள்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் பிரதான வீதியில், கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள பாலம் நிர்மாணிக்கப்படாமையால், வெள்ள நீர் நிரம்பி பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் குறித்த வீதி, மழைக் காலங்களில் வீதி எங்குள்ளது, பள்ளங்கள் எங்குள்ளன என்பது தெரியாத அளவிற்கு காட்சியளிக்கின்றது. அண்மைய...
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான்,...
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11...
யாழ் மாநகர சபையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவரும் சுகாதார தொழிலாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி (07.11.2016) காலை முதல் யாழ் மாநகரசபைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் யாழ்.மாநகர பகுதி உட்பட மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல பொது இடங்களிலும் குப்பைகள் பாரியவில்...
அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்த சாமி விக்கிரகங்கள் சில நாட்களில் காணமற்போயுள்ளன. மேலும் சுவாமி வாகனங்கள் , மணிகள் பெறுமதியான பொழிகற்கள் என்பனவையும் ஆலயத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்...
வவுனியாவில் கொள்வனவு செய்யும் அரிசியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்வதனால் யாழ். மாவட்ட நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசிகளில்...
Loading posts...
All posts loaded
No more posts