- Wednesday
- January 15th, 2025
தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை அறவீடு செய்வதற்கு இரவு 12 மணி வரையும் வீடுகளில் காத்திருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, மல்லாவியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றும், சாவகச்சேரி பகுதியிலிருந்து கடன் வழங்கிய...
காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைப் பொலிஸார் வேலிகளை அமைத்து மக்கள் பாவனைக்கு அனுமதி மறுத்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "காணிகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த எம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் பணித்தனர். மீறி நின்றால் கைதுசெய்வோம் என்றும் எச்சரித்தனர்'' என்று மக்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வலி.வடக்கில் 201 ஏக்கர்...
யாழ்ப்பாணம், ஈவினை கிழக்கிலுள்ள கல்லுடைக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசுப் படலம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன. மேற்படி இடத்தில் இயங்கி வரும் கல்லுடைக்கும் தொழிற்சாலைக்குத் தேவையான கற்கள், அருகாமையிலுள்ள காணியில் குவிக்கப்பட்டு, பாரிய அரிதட்டுக்கள் மூலம் அரிக்கப்பட்டு, அதன் பின்னர் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நேரக்கட்டுப்பாடின்றி அரிதட்டில்...
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அரிசி, சீனி, மரக்கறிவகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரிதகதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ...
யாழ்.திருநெல்வேலி சந்தை இறைச்சிக்கடை தொகுதி பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் இயங்குவதாகவும், அதனால் அப்பகுதிக்கு செல்ல முடியாத தூர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது. திருநெல்வேலி சந்தையில் ஒரு பகுதி இறைச்சிக்கடை கட்டட தொகுதியாக காணப்படுகின்றது. அந்த கட்டட தொகுதியின் கீழ் பகுதியில் மீன் சந்தையும் மேல் மாடியில் இறைச்சிக் கடை தொகுதிகளும் காணப்படுகின்றது. குறித்த...
யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காங்சேசன்துறை பகுதி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் விடுவிக்காது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு...
மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள 201.3 ஏக்கர் காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கும் அக்காணிகளைத் துப்புரவு செய்வதற்கும் உதவுமாறு, மேற்படி காணிகளின் உரிமையாளர்கள், நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தனர். வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து, கடந்த சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர்,...
அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள காணிகளை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் பலவந்தமாகக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இம்முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்போது அம்மக்களுக்கு பணத்தாசை காட்டி காணியைக் கைப்பற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி, அண்மையில் மன்னார் – வங்காலைக் கிராமத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த 5...
கொஸ்கம சாலாவ பகுதியில் ஆயுதக் கிடங்கு வெடித்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிவழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம், 27 வருடங்களாக சொந்த இடத்தில் தங்களை மீள்குடியேற்றம் செய்யும் விடயத்தில் மாற்றான் மனப்பான்மையை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வலி வடக்கு பிரதேச மீள் குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி,...
சவூதி அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட பேரீத்தம் பழம் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு இன்னும் வழங்கப் படவில்லை என யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் அங்கம் வகிக்கும் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது . இவ் விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொகைதீன்...
ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண...
வீதியில் சென்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் அங்கசேஷ்ட்டைப் புரிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று யாழ்.நகர வீதியில் ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது. மேற்படி இருவரையும் இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்டப்போதிலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் பிரத்தியேக வகுப்புக்காக வந்த மாணவிகளே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்....
சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு...
யாழில் தொடர்சியாக அதிகரித்து வரும் பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியொன்று யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி...
சாவகச்சேரி பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்கள், தற்போது வசிக்கும் வீட்டின் முன்னால் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை வழங்குமாறு பிரதேச செயலகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,வீட்டுத்திட்டப் பணிகளுக்கான பணத்தை வைப்பிலிடுவதற்காக பயனாளிகளின் தேசிய சேமிப்பு வங்கி கணக்கு இலக்கம் போன்றனவற்றை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்....
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்த மழையால், ஜே - 80 கிராமஅலுவலர் பிரிவைச் சேர்ந்த மீனாட்சிபுரம் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்படும் போது நீர் பாய்ந்து செல்லக்கூடிய மதகு மற்றும் கால்வாய் என்பவற்றை மூடி யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளமையால், தங்கள் கிராமத்தில் தேங்கிய வெள்ளம் பாய்ந்தோட முடியாமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்....
கிளிநொச்சி-பூநகரிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த நிலையைப் போக்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பூநகரி கமக்கார அமைப்பின் தலைவரும் சமாதான நீதவானுமான செல்வராஜா முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட ஞானிமடம், நல்லூர், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி,...
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்கள் என்பன VAT வரியினை சாட்டிக் கொண்டு நோயாளிகளிடம் கூடுதலான பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு ஒன்று மக்களிடையே எழுந்துள்ளது. VAT வரி திருத்தத்திற்குள் மறைந்துகொண்டு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களில், நோயாளர்களிடம் அதிக பணம் அறவிடப்படுவதாக இலங்கை வைத்திய இரசாயனகூட ஆய்வுகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 15 வீதத்தால்...
தென்மராட்சியின் தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள சுமார் 20 குடும்பங்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். போர் காரணமாக தமது சொந்த இடங்களிலிருந்து பல இடங்களில் இடம்பெயர்ந்திருந்து, தற்போது தங்களுடைய சொந்த இடத்துக்கு மீளக்குடியேறியுள்ளனர். ஆனால், அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர். இக் கிராமத்துக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்தக்...
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 2015ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கில் 15 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மீளக்குடியேறியுள்ளனர். பலாலி வடக்கு அன்டனிபுரம் பகுதி, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 165 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்....
Loading posts...
All posts loaded
No more posts