த.தே.கூ. வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான தம்பிராசாவின் வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களினால் நேற்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. (more…)

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் – அங்கஜன்

தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அபிவிருத்திகளை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)
Ad Widget

அமோக வெற்றி எமக்கே சவால் எதுவும் கிடையாது;- சம்பந்தன்

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி வாகை சூடும். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமேயில்லை. அரசு தற்போது வெளியிடும் பொய்யான கருத்துக்கணிப்பைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. (more…)

வேட்பாளரைத் தேடிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள்

இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொது மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார் என்று கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்படி நிகழ்வை முற்றுகையிட்டுள்ளனர். (more…)

வாக்களிப்பு முறை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவும் – சி.வி.கே.சிவஞானம்

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலின் போது வாக்களிக்கும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண தேர்தலை தொடர்ந்து அவதானிக்கிறோம்: இந்தியா

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம் என்று யாழ். இந்திய கவுன்சிலர் ஜெனரல் வே.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

2/3 பெரும்பான்மையைப் பெற்று தமிழரின் பலத்தை நிரூபிப்போம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் சூளுரை

வட மாகாணசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி சர்வதேச சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை நாம் எடுத்துக் கூற வேண்டும். இதுதான் எமது அடுத்த கட்ட நகர்வின் அடித்தளமாக இருக்கும். (more…)

அரசுக்கு பலம் தந்தால் வலி. வடக்கு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும் – சுசில் பிரேமஜயந்த

வடமாகாண சபை தேர்தலில் அரசுக்கு பலத்தினை தந்தால், வலி. வடக்கு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்படும்' என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை நன்கு தெரியும்: சுசில் பிறேமஜயந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை விட எனக்கு மாகாணசபை தொடர்பான தகவல்கள் நன்கு தெரியும்' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்தார். (more…)

த.தே.கூ. வட மாகாணத்தை ஆட்சி செய்யும்: த.சித்தார்த்தன்

எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்' என வடமாகாண சபை வேட்பாளரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். (more…)

ஆயுதக்குழுவின் அராஜகத்தை தீவகத்தில் தடுத்து நிறுத்துக; தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தீவகத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவின் அராஜகத்தை உடன் தடுத்து நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)

கூட்டமைப்பினர் மீது நெடுந்தீவில் தாக்குதல்; கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக நெடுந்தீவில் பிரசாரம் செய்தவர்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

பண்பாட்டை அழித்துவிட்டு தமிழருக்கு சேலை வழங்குவதற்கு இவர்கள் யார்? – வேட்பாளர் கஜதீபன்

எமது மக்களின் பண்பாடு, கலாசாரங்களை அழித்து சாம் பராக்கிய அரசுடன் இணைந்து ஆட்சிப்பீடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள் இன்று எமது மக்களுக்குச் சேலை வழங்குகின்றார்கள். யாருக்குத் தேவை இவர்களின் சேலைகள்? (more…)

வடக்கில் ஜனாதிபதி தலைமையிலேயே பிரசாரம்!

வட மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலேயே பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது (more…)

சலுகை அரசியலுக்கு முடிவு கட்டவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்

எங்களுடைய போராட்டங்கள் எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் சலுகை அடிபடியிலேயே தமிழ் மக்களை கவனித்து வந்திருகின்றது. சலுகை வளங்குகின்றவர்கள் அதை எந்த காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திவிடலாம். (more…)

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் 10 நாட்களுக்கு முன்னர் வரவழைக்கப்படுவர்

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் 10 நாட்களுக்கு முன்னர் வரவழைக்கப்படுவர் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

25 வருடமாக நாம் கூறி வருவதையே இன்று தூசி தட்டுகிறார் விக்னேஸ்வரன் – தவராசா

இருபத்தைந்து வருடங்களாக நாங்கள் கூறி வருவதை தூசி தட்டி எடுத்து புதிதாகக் கூறி வருகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் (more…)

மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் சி.வி.விக்கினேஸவரன்

'தமிழ் மக்களாகிய நாம், கடந்த 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக முறைப்படி எமது உரிமைகளுக்காக போராடி வந்தோம். அது தோற்றுப்போனதை அடுத்து ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் தோற்றுப்போன நிலையில், இப்போது எமது மூன்றாம் கட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்' (more…)

ஐ.ம.சு.கூ தேர்தல் பிரசாரம் யாழில் ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. (more…)

யாழில் ஆசிரியர்களை இலக்கு வைத்து கூட்டம் நடாத்த ஒரு அரசியல் கட்சி திட்டம்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 30 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தங்களிடம் பதிவாகியுள்ளதென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts