- Sunday
- January 19th, 2025
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள், நாளை 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், மரணித்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எவராலும் தடுக்கமுடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி - அஞ்சலி...
கொழும்பு நகரிலும் அதற்கு அண்டிய பகுதிகளிலும் போக்குவரத்து விதிமுறைகள் இன்று (26) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வகையில் உரிய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்துகின்றவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி.றுவான் குணசேகர தெரிவித்தார். இதன் பிரகாரம் ஶ்ரீஜயவர்தனபுர வீதியின்...
2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மூலம் இறக்குமதி மதுபானம் மீது குறைக்கப்பட்ட வரியை மீண்டும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 5%க்கு குறைவான அற்ககோல் கலந்துள்ள இறக்குமதி மதுபானத்திற்கான வரி இம்முறை வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுபான இறக்குமதியின் போது நிலவிய வரி சமத்துவமின்மையை...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக...
சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை துரிப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவர்களது சஞ்சிகையான தாபிக்கின் 12ஆவது பதிப்பிலேயே, அபு ஷுராயா தொடர்பான...
தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,218 சிங்களவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இவர்களுக்கு பாகுபாடின்றி அரச சேவை வழங்கப்படுகின்றது என்றும் கூறிய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல...
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் தடைசெய்யப்பட்ட நபர்கள், அமைப்புகள் மீதான தடையை நீக்கியமை போன்ற காரணிகளால் வடக்கு கிழக்கில் புலிக்கொடி ஏற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹக்மன லொல்பே ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்- ‘தமிழீழ விடுதலைப்...
திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பாக 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அவர்களை புலனாய்வுப் பிரிவினர், குறித்த இரகசிய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின்...
புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை...
ராகம ரயில் நிலையத்தில் வைத்து ரயில் சாரதியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து 18 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. ராகம ரயில் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் காரணமாகவே இந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
"இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 10 மாதங்களுக்குள் புதிய அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு தெளிவானது." - இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் திருமதி சமந்தா பவர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளையும் பலப்படுத்த இம்முறை வரவுசெலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் சமூக நலன்புரியை இவ்வரவுசெலவில் மறக்கப்படவில்லையெனவும் போக்குவரத்துதுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். வரவுசெலவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வரவுசெலவு தொடர்பில் நாம் ஆராய வேண்டும். அதில்...
நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்பார்ப்புடன் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தொழிலுக்கேற்ப தொழிற் கல்வி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (23) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறையின் கீழ் முதற்கட்ட குழுவினர் தொடர்பாக சட்டமா அதிபர் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவினரில் உள்ளடங்குவோர் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு சிறிய தண்டனைக் காலம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தே புனர்வாழ்வுக்குச் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பல வழக்குகள் காணப்படுகின்றமையால்...
சந்திரனை சுற்றி பல வர்ணங்களுடன் வெளிச்சமான வளையங்கள் தோற்றுவதன் ஊடாக எதிர்வரும் நாட்களில் புயலுடன் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றும் என நட்சத்திர உயிரியல் விஞ்ஞான ஆய்வு நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன எதிர்வு கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வானவில்லைப் போன்று சந்திரனைச் சுற்றி தோன்றியிருந்த வளையங்களை கடந்த சில நாட்களாக இரவு வானில்...
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் பெயர்குறிக்கப்பட்டிருந்த அமைப்புகளில், எட்டு அமைப்புகள் மற்றும் 269 பேரை அப்பட்டியலிலிருந்து, பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது. இது குறித்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சினால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 296 பேரின் விவரம் பின்வருமாறு: 01.மேரி ஜோசப் வின்சிப் பெல்ஜியம் பளை 02.செல்லத்துரை சந்திரதாஸன்...
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட பல அமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்...
எதிர்வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ம் திகதி முதல் இலங்கையில் சிற்றுண்டிசாலைகளில் விற்பனை செய்யப்படும் அப்பம், பிளேன் ரீ,பால்ரீ உட்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சம்மேளன தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி பிளேன் ரீ விலை 5ரூபாவாலும், பால்ரீ 5...
Loading posts...
All posts loaded
No more posts