- Sunday
- January 19th, 2025
வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை...
தனது மனைவியின் இடது மார்பகத்தில் இருந்த பருவை சத்திரசிகிச்சையின் மூலமாக அகற்றாமல், வலது மார்பைச் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியருக்கு எதிராக, அப்பெண்ணின் கணவன், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். களுத்துறை அகலவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவரே, அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தன்னுடைய தவறை உணர்ந்த அந்த வைத்தியர், மீண்டுமொரு சத்திரசிகிச்சையை மேற்கொண்டு, தனது மனைவியின்...
"இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நட்புறவையும் கட்டியெழுப்புவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் அரசு அர்ப்பணிப்புடன் தெற்கையும் இன, மொழி,மதம் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதிக்குரிய முழு அதிகாரங்களையும் நாடாமன்றத்துக்கு வழங்கி சட்டவாக்கச் சபையைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சித்திரவதை முகாம் குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது. இராணுவத் தரப்பினர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி மாரதி இராணுவ முகாமில் சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்தது என சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார். 52ம் படையணிக்குச் சொந்தமாகவிருந்த இந்த முகாம்...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி சலுகைகள், 10 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் இது, அதிகபட்சம் இரண்டு வாகனங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை தகவல் அறியும் உரிமை சட்டமூலத்துக்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்....
தென்னிலங்கையின் காலி பகுதியில் தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவரது மகளே தனது பாட்டியை அடைத்து வைத்திருந்துள்ளதாகவும் மீட்டியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த...
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. மேலும் மக்கள் விடுதலை முன்னணி இதற்கு எதிராக வாக்களித்ததோடு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய...
அரசாங்க வைத்தியர்கள் நாளை காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளம் திருத்தம் செய்யப்படாமை, சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையுடனான வாகன அனுமதிப் பத்திர முறை இரத்துச் செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில்...
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று பெவிதி ஹன்ட என்ற சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முத்தெட்டுவே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து...
பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கென வங்கி உடன் உண்டியல் மற்றும் காசோலைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டே பண மீளெடுப்புக்களின் போது வரி விதிக்கும் யோசனை, முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு- செலவுத் திட்டத்தில் ஒரு மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரையான பண மீளெடுப்புக்களின் போது, 2 சதவீதமும், 10 மில்லியனுக்கு மேற்பட்ட பண...
தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித்...
தனியார் பஸ் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், தனியார் பஸ் கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக, தனியார் பஸ் சங்கங்கள் அறிவித்துள்ளன. பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு எழுத்தியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன....
சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரைக் கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண...
இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் உள்ள இந்த 9 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமான...
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், 11 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் வர்த்தமானி அறிவிப்பில், ஏழு பொருட்களின் பெயர் விவரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வரவு- செலவுத்திட்ட அறிக்கையின் பிரகாரம், பருப்பு, சமையல் எரிவாயு, நெத்தலி, கடலை, உருளைக்கிழங்கு, கட்டாக்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, சிறப்பு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மேல் நீதிமன்ற ஆணையாளராக முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 31 வருடங்கள் நீதிபதியாகச் சேவையாற்றிய ஐராங்கனி பெரேரா, இராணுவ வீராங்கனையான இனோகா...
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...
2016ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக மைத்திரிபால சிறிசேன பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்ததற்காகவே இந்த விருது கிடைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவையில்லை என பெற்றோலிய மற்றும் கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி...
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக பெறுமதி சேர் வரி (VAT) மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளமையால், பெரும்பாலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும், அதேபோல் நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படாது எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெறுமதி சேர் வரி இதுவரை 11% ஆக இருந்ததோடு,...
Loading posts...
All posts loaded
No more posts