- Sunday
- January 19th, 2025
வங்கித்துறையில ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பாதீட்டில் தீர்வு கிடைக்காமை மற்றும் வங்கித்துறைக்கு ஒவ்வாத அழுத்தங்கள் தொடர்பாகவும் இன்று நாடளாவிய ரீதியாக பணிநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. குறித்த பணிநிறுத்தப் போராட்டத்தில் 8 அரச வங்கிகள் மற்றும் 12 தனியார் வங்கிகளின் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்த போராட்டத்தில்...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு இலங்கை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கையின்...
அரசியல் கைதிகள் விடுதலை, சட்டமா அதிபர் திணைக்களத்தினாலேயே தாமதப்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதி மொழிகளை சரிவர நிறைவேற்ற தவறினால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச தனியார் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய எழுத்து மூல உறுதி மொழியையடுத்து இன்று மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். இதன் காரணமாக...
நாளை மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவுள்ளதாக, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் எதிர்ப்பை வௌியிடும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காமையால், அதன் பின்னர் இடம்பெற்ற...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 14ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதலும், நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்துள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து பஸ் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள், இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சங்க...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஒருபோதும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெரும் குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கோ அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கோ அரசாங்கம் இணங்கியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புலி சந்தேகநபர்களை விடுவிப்பதாக நாம் ஒருபோதும் உறுதிமொழி...
முப்பது வருடகால யுத்தக் காலத்திலும் வட பகுதியில் தடுப்பூசி ஏற்றுவதற்காக பிரபாகரன் இரண்டு தினங்கள் அனுமதி வழங்கியிருந்தார். இதனால் இன்று வடக்கில் தடுப்பூசி வழங்குவது நூற்றுக்கு நூறுவீதம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே தனியார் துறையினர் ஊடுருவ...
இலஞ்ச, ஊழலுக்கு எதிரான நிகழ்வுகளை கடந்த அரசு நடத்தத் தவறியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச இலஞ்ச, ஊழல் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு கொழுப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த அரசு (மஹிந்த அரசு) ஊழலுடன் செயற்பட்டமையினாலேயே இவ்வாறான நிகழ்வுகளை கடந்த காலங்களில் ஏற்பாடு செய்ய...
குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு நிர்க்கதியான சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 83 பேர் நேற்று காலை 06.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மட்டக்களப்பு, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும்...
மணற்காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய விவகாரத்தில் தொடர்புடைய தென்பகுதி நடிகை உள்ளிட்ட மூவரையும் உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களென சந்தேகிக்கும் சிங்கள நடிகையொருவர், சட்டத்தரணியொருவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகிய மூவரையுமே இவ்வாறு கைது செய்யுமாறு நீதிபதி மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். மனற்காட்டுப்பகுதியில் விடுதலைப்பபுலிகளால்...
பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலித்தீன் பாவனை தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே அதனை அமுலாக்க ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். பொலித்தீனால் ஏற்படும் சுற்றுச்...
திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சடலங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் 6 சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர். தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விடயம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இரண்டு கடற்படை படகுகள் தேடுதலுக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக 60,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 2,300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நேற்று (06) தெரிவித்தது.இதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் மற்றும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 2,023 வீடுகள் மற்றும் சுமார்...
புகழ்பெற்ற இசைக் கலைஞரான பண்டித் அமரதேவவின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் வகையில் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 'சரச வாசன துரு' இசை நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். உலகலாவிய ரீதியில் மிகவும் அறியப்பட்ட இலங்கையினுடைய புகழ்பெற்ற இசைக்கலைஞரான பண்டித் அமரதேவ இசையால் எல்லோரினதும் இதயங்களை தொட்டவராவார்....
சவூதியில் கல்லால் எறிந்து மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணுக்காக குரல்கொடுத்த சுமந்திரன் எம்.பிக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர், எம்.பிக்கள் கொதித்தெழுந்ததால் நேற்றுச் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். தனது...
"ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர். கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்...
"செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. எனவே, இது தற்கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, வடக்கில் இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். தடுப்பிலுள்ள கைதிகள் குறித்து...
12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா...
Loading posts...
All posts loaded
No more posts