கூட்டமைப்பின் பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றினால் இணைவேன்

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் கூட்டமைப்பின் அரசியல் பரப்பில் நமது தமிழ் முற்போக்குக் கூட்டணியும், பொது நிலைப்பாட்டை முன்வைத்து இணைந்து செயற்படலாம்' என, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில், இது தொடர்பில் கருத்தொன்றை பதிவேற்றம் செய்துள்ள அவர், அதில்...

ஐ எஸ் அமைப்பில் பல இலங்கையர் இணைந்துள்ளனர்

இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள பலர், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்புடன் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் குறைந்தது 36 பேராவது சிரியா சென்றுள்ளது தமக்கு தெரியவந்துள்ளது என இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். இதில் ஆண், பெண் இருபாலாரும் அடங்குவர் எனவும...
Ad Widget

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56 வாக்குகளை எடுத்துள்ளார். இதன்படி 32 வாக்குகள் வித்தியாசத்தில் திலங்க சுமதிபால வெற்றியீட்டியுள்ளார். திலங்க சுமதிபால இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்...

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை அறிமுகம்!

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு...

அனைத்து சிறந்த நோக்கங்களும் வெற்றியடையக் கூடிய வருடமாக அமையட்டும்

பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான புதுவருடத்தினை அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்திரமான ஒரு சூழலில் புது வருடத்தை வரவேற்​போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட பிரதமர், 2016 புது வருடமானது மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச்...

சங்கா , மஹேலவின் நிறுவனத்திற்கு தடை!

அண்மையில் வௌிநாட்டுப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து, இசை நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கவுள்ளதாக, கொழும்பு மாநகரசபை மேயர், ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியை, லைவ் இவன்ஸ் (Live Events) எனும் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த...

5,000 பட்டதாரிகளுக்கு புதிய நியமனங்கள்

எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

புலிகளின் ‘பிஸ்டல் அணி’ துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் 'பிஸ்டல் அணியினர்' பயன்படுத்திய இரு கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பிரகாரமே இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிவந்து பின்னர் சட்டபூர்வமாக அதிலிருந்து விலகியவர் (வயது 45 ) என்று பொலிஸார்...

‘என்ரிக்’ இன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம்

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சிக்காக ரூபா 5,000 முதல் 50,000 வரை பெறுமதியான டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் ‘Live Events’...

இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது!

இலங்கை இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் இவ்வாறு இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. இணைய தளத்திற்குள் அத்து மீறி பிரவேசித்த ஒரு தரப்பு அரை மணித்தியாலம் இணைய தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இராணுவத்தின் உத்தியோகபூர்வ விபரங்களை மாற்றியதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின்...

மஹிந்த கூட்டணியை உடைக்க மைத்திரி புதிய ‘ஒப்பரேஷன்’!

பொது எதிரணி என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சூட்சுமமாக முன்னெடுத்து வருகிறார் என அறியமுடிகின்றது. இதன்படி, மஹிந்த அணியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரை அரசு பக்கம் வளைத்துப் போடுவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் முதற்கட்ட நகர்வாக ஆறு பேருக்கு குறிவைக்கப்பட்டுள்ளது....

பெண்களின் மார்புக் கச்சைகளை அகற்றும் இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் இடமில்லை

இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். சில மணி நேரங்களுக்கு மட்டும் இடம்பெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எமது இளம் யுவதிகள்...

அவதானம்..! 6000 பாலியல் தொழிலாளர்கள் மசாஜ் நிலையங்களில்

கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500 முதல் 6000 பேர் வரையிலான பாலியல் தொழில் சேவையில் ஈடுபடுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந் நிலையங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் எச்.ஐ.வி. தொற்று வெகுவாக பரவி வருகின்றடை...

வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வரவு செலவுத் திட்டம், இலங்கை - இந்திய இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் மாலபே தனியார் பல்கலைக்கழகம் போன்றன தொடர்பில், உரிய தீர்வு பெற்றுத் தர அரசாங்கத்திற்கு இரு வாரங்கள் வழங்குவதாகவும், அதற்குள் தீர்வு கிட்டாவிடில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுடன் கையெழுத்திடவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் திட்டமிடல்களைத்...

தலைகீழாகத் தொங்கிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த!!

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனநிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரம் கைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 70வது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற...

சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்?

வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி காரணமாக சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களும் வருடாந்தம் 60 ஆயிரம் ரூபாவை வரியா செலுத்த வேண்டும் என்று வரவு செலவுத்திட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி...

திணைக்களம் இடம்மாறுகிறது

கொழும்பு-10 இல் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு, அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று வியாழக்கிழமை(17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார். குடிவரவு...

மஹிந்த, கெஹலியவிடம் இன்று மீண்டும் விசாரணை!

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் தனது விசாரணைகளை இன்றும், நாளையும் மேற்கொள்ளவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட...

வித்தியா கொலை குறித்த விசேட நீதிமன்றத்தை நிறுவ முடியவில்லை! கைவிரித்தது அரசாங்கம்

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறுவ முடியாத நிலைமை காணப்படுவதாக மகளிர் – சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம்...

கொழும்பில் கடும் மழை : இன்று அதிகாலை மட்டும் 114.5 மில்லிமீற்றர் மழை

கொழும்பில் இன்று அதிகாலை ஒன்றரை மணிநேரத்தில் 114.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts