- Sunday
- January 19th, 2025
யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. யுத்தத்தின் போது பாலியல் வன்கொடுமைகள் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி நியூயோர்க்கில் இந்த பிரகடனம் அறிமுகம் செயப்பட்டது, இதில் 122 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்த பிரகடனத்தில் நேற்று வரை...
ஆறு மாதமேயான சிசுவை, அச்சிசுவின் தந்தை, நிலத்தில் தலைகீழாக அடித்து கொலைச் செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ்பரி கீழ்ப்பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தாய்க்கும் -தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பச்சண்டையை அடுத்தே, பால்குடித்து கொண்டிருந்த பெண் சிசுவை, பறித்து நிலத்தில் அடித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
அனைவர் மத்தியிலும் விளையாட்டினை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அரசாங்கம் நாடு முழுவதிலும் விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு...
அனைத்து பேக்கரி தயாரிப்புக்களினதும் விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் காரணமாக அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி தயாரிப்புக்களினதும் விலையையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்ந்தன குறிப்பிட்டார். இதனடிப்படையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் பனிஸ் ஒன்றின்...
இலங்கைக்கு தற்போது எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இலங்கை தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ஜனாதிபதி இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், ஆசிரியரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரான அவர், குறித்த மாணவனிடம் முடி வெட்டும் படி தெரிவித்து விட்டு, வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்த வேளையே...
இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று சனிக்கிழமை சற்று முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை தனது டிபன்டர் ரக வாகனத்தில் கடத்தி, துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காகவே ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைதுசெய்யும்படி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று...
கடந்த ஒரு வருட காலத்தினுள் நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது குறித்து கேள்வியெழுப்ப வேண்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இக்கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஒருவருட காலத்தினுள் நாட்டுக்காகவும்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடனான போரில் வென்றிருக்கலாம் ஆனால் போரின்போது மேற்கொண்ட குற்றங்களை மறைக்க முடியாது. இந்த வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேநேரம் சமாதானப் பேச்சுக்களும் மெளனமாகி விட்டன.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி. மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓர் ஆண்டு பூர்த்தி விழா நேற்று கொழும்பில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நல்லாட்சி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. 'மக்கள் ஆணைக்கு மதிப்பளி' என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்பாட்டம் நேற்றுக் கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன மற்றும் பிரதான கட்சிகள் என்று இல்லாமல் அனைத்து கட்சிகளையும் எம்முடன் இனைத்துகொண்டு நல்லாட்சியை முன்னெடுப்போம். அனைத்து மக்களும் எம்மோடு இருப்பதால் நல்லாட்சியை ஒரு போதும் கைநழுவ விட மாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த ஆண்டில்...
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த தமிழினி பூந்தோட்டம்...
ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (07) இலங்கை வந்த நோர்வே வௌிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரன்டே (Borge Brende) நேற்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது எதிர்கட்சித் தலைவர் மேற்கொண்ட புதிய அணுகுமுறையை பாராட்டிய நோர்வே வௌிவிவகார அமைச்சர் இதனூடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை, தேவையை நிறைவேற்ற முடியும் என்று தான்...
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், நாடுபூராகவும் பல வேலைத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி காலை 07.00 மணியளவில் விஷேட சமய வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு வருடப் பூர்த்திக்கான பிரதான நிகழ்வு பிற்பகல் 02.00 மணிக்கு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...
நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பாதுகாப்புப் படைகள், எச்சரிக்கையுடன் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் மேஜர் ஜயனாத் ஜயவீரவே, இத்தகவலை வெளியிட்டுள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் காணப்படுவதாகவும் அக்குழுவோடு தொடர்புடைகளைக் கொண்டவர்கள் காணப்படுவதாகத்...
நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. இதனால் பலர்...
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை ஜனநாயகத் தேசியக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன்...
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு - கிழக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவு நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். தென்பகுதி ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியிலேயே...
Loading posts...
All posts loaded
No more posts