வெளிநாட்டு பிரஜைகளுக்கு இலங்கையில் சிறுநீரக சத்திரசிகிச்சை செய்வதற்கு தற்காலிக தடை

இலங்கையில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை செய்வது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால கூறினார். சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக கடத்தல் சம்பந்தமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 06...

சமூக இணையத்தளங்களை பயன்படுத்தி ஆபாச காணொளிகளை பரிமாற்றிக் கொள்ளும் குழு ! – அரசு எச்சரிக்கை

சமூக இணையத்தளங்களை பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரிமாற்றிக் கொள்ளும் குழு செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்தி யுவதிகளாக முன்னிலையாகி இளைஞர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெற்று கொள்ளப்படுகின்றன. பின்னர் காணொளி மற்றும் புகைப்படங்களை பெற்று கொண்டவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று கொள்ளும்...
Ad Widget

தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! – ஜனாதிபதி

புலிப் பயங்கரவாதம் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்த ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்போது, நாட்டின்...

இரா. சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுதியுள்ள உறுக்கமான கடிதம்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் இயக்கம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்மானத்தினை முழுமையாக எடுப்பீர்கள் என்ற நம்பிகையில்...

அரச ஊழியர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்

அமெரிக்க டொலரின் ஒப்பீட்டளவிலான ரூபாயின் மதிப்பு தற்போது 146 ஆக காணப்படுவதாகவும், 1976ம் ஆண்டுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைவது, இதுவே முதல் முறை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் அரசியல்வாதிகள், விளையாட்டு துறையினர், கலைஞர்கள் போன்றோரை, எப்.சீ.ஐ.டிக்கு...

இலங்கையில் வருடமொன்றுக்கு 3,500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனை!

இலங்கையில் வருடமொன்றுக்கு 3ஆயிரத்து 500 மில்லியன் சிகரெட்டுகள் விற்பனையாகின்றன என்று போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் புபுது சுமனசேகர தெரிவித்தார். தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹரகமவிலுள்ள இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது. இதன்போதே போதைப்பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேற்படி...

பெட்ரோல் ஒரு லீற்றர் 90 ரூபாய்களுக்கு வழங்க முடியும்

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளதன் பயன் இந்நாட்டு மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதில் தொடர்ந்து சிக்கல் காண்படுகின்றது. தற்போதைய சர்வதேச விலைகளுக்கமைய பெட்ரோல் ஒரு லீற்றர் 90 ரூபாய்களுக்கும் டீசல் ஒரு லீற்றர் 70 ரூபாய்கள் வரையும் குறைக்கமுடியும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. பிரதானமாக கச்சா எண்ணையின் வழங்கல் அதிகரித்துள்ளமையினால்...

இசை நிகழ்ச்சியில் கச்சையை கழற்றி எறிந்த பெண் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

சர்ச்சைக்குரிய என்றிக் இலக்சீயஸின் இசை நிகழ்ச்சியின் போது மது அருந்தியிருந்த பெண் ஒருவர் தமது கச்சையை கழற்றி எறிந்த சம்பவம் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நிகழ்ச்சியின் போது மது விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் இந்த நடவடிக்கைகள் இலங்கையின் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

இறைச்சிக்காக மாடுகள் வெட்டுவதைத் தடை செய்ய நடவடிக்கை!

இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை முற்றாகத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாட்டிறைச்சி தேவைப்படுவோருக்காக வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்ய முடியும் என்றும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாட்டுப் பொங்கல் பண்டிகையில் முக்கியத்துவம் பெறும் ஒரு விலங்கு என்பதுடன் மத ரீதியிலும் மக்கள் வாழ்விலும் பெரும் மதிப்பைப்...

சகல சமயத் தலைவர்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை

நாட்டிலுள்ள அனைத்து மக்களின் அச்சம், சந்தேகங்களை நீக்கி சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத் திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முன்வருமாறு சகல சமயத் தலைவர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது, நீதி அல்லது புதிதாக நிறைவேற்றப்படும் சட்டமூலங்களால் மட்டுமே இயன்றதல்ல...

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!!

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிங்கள பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்.. நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கத்துடன்...

இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிக்க சர்வதேச மட்டத்தில் போட்டி நிலவுகிறது

புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின்...

புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மஹிந்தவின் அறிவுரை

புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் ஒன்றை கொண்டு வரும் செயற்பாட்டை தற்போதைய அரசாங்கம் நேர்மையாக முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் யோசனைகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு ஒன்று தொகுக்கப்படுவதாக இருந்தால் அது பல்வேறு...

தாதியர் பயிற்சிக்காக 1000 பேரை இணைத்துக்கொள்ள திட்டம்

மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்கி தரமான சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக சுகாதார சேவையின் மனித வளங்கள்...

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கோ பௌத்த மதத்திற்கோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை; நாட்டை பிரிப்பதற்கு இடமில்லை

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அலரி மாளிகையில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், புதிய...

இலங்கை அணியின் தலைவருக்கு அழைப்பாணை

இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸை நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை...

நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி மோசடி விசாரணைப் பிரிவு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட கூடும் என தெரியவருகிறது. நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கு தேவையான சாட்சியங்கள் தேவைக்கு மேலதிகமாக தயாராக இருப்பதாகவும் இதனை அரசியல் பிரச்சினையாக காட்டி அரசியல்...

மயில் மாளிகை தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கவிருந்த மயில் மாளிகையின் நீச்சல் தடாகம் மண் இட்டு மூடப்பட்ட போது, அதற்குள் தங்கங்களும் பணமும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து விசாரணைகளை நடத்துமாறு, அம்மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ்.பி.லியனகே, பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, தனது நற்பெயரைக் காக்குமாறு மயில்...

ஜனாதிபதியின் சிரேஷ்ட தலைமைத்துவ பண்புகளுக்கு இந்திய அரசு பாராட்டு!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டும் சிரேஷ்ட தலைமைப் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பாக இலங்கை மாத்திரமன்றி இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜயசங்கர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த...

VAT மற்றும் NBT தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ​2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts