- Monday
- January 20th, 2025
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடி ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வாறே தற்காலிகமாக படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடிக்கு தண்ணீர் ஊற்றியது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும்...
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர். நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித்...
சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இதேவேளை இவருக்கு படையினர் நலன்புரிகள் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி...
பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் இருக்கும் யோஷித உட்பட ஐவருக்கும் எதிராக மேலும் ஐந்து பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சி.எஸ்.என். தொலைக்காட்சி நிர்வாகம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே தற்போது யோஷித ராஜபக்ஷ கைதாகி உள்ளார். இவருக்கு எதிராக போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல்...
வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டார். இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது இந்திய...
ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று ராஜபக்சேவின் மகன் யோசித ராஜபக்சேவைக் கைது செய்ததை விமர்சித்துள்ளார் கோத்தபயா ராஜபக்சே. ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்தபயாவை கலங்கடித்து வருகின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் பாரபட்சமே இல்லாமல் கோத்தபயாவை அவரது டிவிட்டுக்குப்...
புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவதைத் தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர்...
தேசிய வைபவம் காலிமுகத்திடல் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவ நிறைவின்போது, தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட்டது. வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார். தேசிய கீதம், தமிழ்மொழியில் பாடப்பட்டபோது அவரின், கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக, இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தலங்களில் வீடியோவை பதிவு செய்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா...
எமது அழகிய தாய் திருநாட்டினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(04) இலங்கைத் திரு நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். காலிமுகத்திடலில் நேற்று ஏற்பாடாகியிருந்த சுதந்திரதின வைபவத்திற்கு ஜனாதிபதி தம்...
யாழ் -கொழும்பு புகையிரத சேவை ........................... 1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி ........................... புறப்படல் காலை 6.10 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 1.05 மணி 2. யாழ்தேவி புகையிரதம் ................. புறப்படல் காலை 9.35 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 6.35 மணி 3. குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை .......................... புறப்படல் பிற்பகல்...
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சமூகவிரோத கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில், இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை...
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாடம் இன்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை காலிமுகத்திடலில்...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில் முக்கிய பங்காற்றிய மிக்27 விமானங்களோ, எம்.ஐ.24 தாக்குதல் உலங்கு வானூர்திகளோ சுதந்திர தின அணிவகுப்பில் இன்று பங்கேற்காது. இந்தத் தகவலை விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் உறுதிப்படுத்தினார். இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இன்று பிரமாண்டமான முறையில்...
எமது எல்லா மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சமூக, அரசியல் சூழலை உருவாக்கும் இப்பாதையில் தொடர்ந்தும் பயனிக்க நாம் உறுதியோடு உள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டே ஜனாதிபதி இவ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். மேலும் இவ்...
பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை, நிலையான, மிகவும் அர்த்த பூர்வமான சுதந்திரமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும் உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்...
Loading posts...
All posts loaded
No more posts