- Monday
- January 20th, 2025
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் எம்.ஓ.எச்.டி. தார் சயிட் பாயிட் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட இருந்தனர்.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு, அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜோன் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார். இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய கொழும்பு நீதவானால் இன்று புதன்கிழமை (24) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மகஸின் சிறையில் 15 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்! அநுராதபுர சிறையில் இருவரின் போராட்டமும் தொடர்கிறது!!
கொழும்பு, மகஸின் சிறைச்சாலையின் 'ஜே' பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவிலுள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா. நீதிநாதன், க.வேதநாயகம்,...
இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் வேறு கைதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி,...
வவுனியாவில் கடந்த 16ஆம் திகதி வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி க.ஹரிஸ்ணவி (வயது 13) தொடர்பில் பொலிஸார் நான்கு குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை எவரும் கைதாகவில்லை என தெரியவருகிறது. சந்தேகத்தின் பெயரில் பலரிடமும் வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றுள்ள போதும் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆரம்பித்தில் இக்கொலை தொடர்பிலான...
ஏழு மாத குழந்தையின் தாயை மிகவும் கொடுமையாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கம்பளை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் கம்பளை சிங்கபிட்டி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரின்...
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், இந்த இருவர் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் சிறையிலுள்ள இந்த இருவரும் உண்ணாவிரத்ததை மேற்கொண்டுள்ளதை அவர்களின் உறவினர்களும், அரச அதிகாரிகளும்...
போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களிடம் இருந்தே தொலைபேசி மூலமாகவும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து நேரடியாகவும் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஐம்பது பேர் வரையான பெண்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து முறையிட்டுள்ளனர். கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும்...
அநுராதபுரம், மகஸின் சிறைகளில் 17 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் குதிப்பு!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொலை செய்யுமாறு படையினரிடம் முகநூல் ஊடாக கோரிக்கை விடுத்தவரை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகநூல் ஊடாக ஜனாதிபதியையும் பிரதமரையும் கொலை செய்யுமாறு காணொளி காட்சி ஒன்றை வெளியிட்ட குறித்த நபர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு...
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கம்பஹ, பூகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தை சில துரோகிகள் குழு சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டையில் வைத்து கூறினார். தனது தேவை நாட்டில் மூன்று வேளை சாப்பாட்டிற்கு வசதியற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழிலை உருவாக்குவது என்றும், அந்த வேலைத் திட்டத்தை சீர்குலைக்க...
சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக இன்று காலை சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.25 மணியளவில் விஷேட விமானம் ஒன்றில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 06 பேர் கூட சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன...
தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ராஜபக்சக்களினால் ஆபத்து இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுதந்திரக் கட்சியை விட்டு மஹிந்த ராஜபக்ச பல தடவை வெளியேறியிருந்தார்....
கூகுல் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் துளியளவு முதலீடு கூட இன்றி இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் முன்னெடுக்கிறது. கடந்த காலத்தில் பொது மக்களின்...
வெலிக்கடைச் சிறைச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள `ஜே’ விடுதிப் பகுதியில் கைத்தொலைபேசி நுண்அலைகளைத் தடுக்கும் கருவிகள் பொருத்தப்படவுள்ளன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சிறைக்கூடத்தில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், யோஷித ராஜபக்ஷ தடுத்துவைக்கப்பட்டுள்ள 'ஜே' விடுதி அருகில்...
இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள்...
குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன. பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள்...
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வௌிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதம...
Loading posts...
All posts loaded
No more posts