புலனாய்வுப்பிரிவினை மீண்டும் இயங்கச் செய்யுமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

பொலிஸ் நிலையங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இரகிசய தகவல்களை திரட்டும் புலனாய்வுப்பிரிவினை மீண்டும் இயங்கச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் போலியான வர்த்தக நடவடிக்கைகளை இரகசியமாக வேவு பார்ப்பதற்கு இந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த அரசாங்கத்தினால் இரகிசய பிரிவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட...

போர்க்கால நடவடிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டில் மீண்டும் தலைதூக்கி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாரஹேன்பிட்டிய அபேராமையில் அமைந்துள்ள சுசரித்த தம்மா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...
Ad Widget

இரத்திரிபுரி மாவட்டத்தில் நிலஅதிர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நேற்று விடியற்காலை 3.15மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மையத்தின் கட்டமைப்பில் சிறிய அளவிலான...

ஜனாதிபதி பிரதமரின் மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

நல்லிணக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டு மகா சிவராத்திரி! - ஜனாதிபதி மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள இலட்சக் கணக்கான இந்து பக்தர்கள்...

பட்டதாரி போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

வடமத்திய மாகாணப் பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் சங்கீதம் (கீழைத்தேய) நாட்டியம், சிற்பம், சித்திரம், தகவல் தொழில்நுட்பம், றோமன் கத்தோலிக்க ஆரம்ப மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு காணப்படும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வடமத்திய மாகாணத்தில் மூன்று வருடங்களுக்கு குறையாத நிரந்தர வதிவிடத்தையும், 18 வயதிற்கும் 35...

காதலர்களை விரட்டிய பாதுகாப்பு ஊழியர்கள் – நிறுவனத்துக்கு சிக்கல்

சுதந்திர சதுக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த, அரசசார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கலாச்சார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அண்மையில் சுதந்திர சதுக்கத்தில் காதலர்கள் இருவர் அமர்ந்திருந்தபோது, பாதுகாப்பு கடமைகளில் இருந்தவர்கள் அவர்களை வௌியேற்றியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவின. இதனையடுத்து, அமைதியான முறையில் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்தே...

தொடர்கின்றன துப்பாக்கிச்சூடுகள்! – வெலிக்கடை சிறை முன் கர்ப்பிணிப் பெண்ணும் இலக்கு!!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 03.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த பெண் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள பெண் தற்போது...

மகிந்த அணியினர் காளி கோயிலில் தேங்காய் உடைத்தனர்

அரசுக்கு எதிராக நேர்த்திக்கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது எதிர்க்கட்சியினர் நேற்று நான்காம் கட்ட தேங்காய் உடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கமைய கொழும்பு முகத்துவாரம் காளி அம்மன் கோயிலில் பந்துல குணவர்தன எம்.பி. தலைமையில் நேர்த்திக் கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டம் இடம்பெற்றது. ஒடுக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சுதந்திரத்தையும்...

இன்று முதல் கொழும்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்

அண்மைய நாட்களாக தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீ்ழ் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 102 தொலைபேசி வீதித் தடைகள் ஏற்படுத்தி...

14 அரசியல் கைதிகளினதும் உடல்நிலை கவலைக்கிடம்!

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்று அவர்களின் உறவுகள் தெரிவித்தனர். உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளபோதிலும் இது தொடர்பில் அரசு தரப்பு பாராமுகமாகவே இருக்கின்றமை தமக்கு...

ஆளில்லா விமானங்களை தயாரித்து மொரட்டுவ பல்கலை சாதனை!

இலகு ரக விமானங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு. இந்தக் குழுவினால் ஆளில்லா இலகு ரக விமானங்கள் நான்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களைப் பயன்படுத்தி நாட்டில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை கண்டறியவும், வானிலை பற்றிய தகவல்களை அறியவும் விவசாய பயிர்ச் செய்கைகளின் சேதம் குறித்த ஆய்வுளை செய்ய இந்த விமானங்களைப் பயன்படுத்த...

இலங்கையில் வருடமொன்றிற்கு 2500 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

இலங்கையில் வருடமொன்றிற்கு சுமார் 2,500 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிப்புக்குள்ளாவதாகவும் இதில் 500 இற்கும் அதிக பெண்கள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனை குணப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூதுார் சிறுவனின் கொலையில் திருப்பம்! கைதான சிறுவனின் புதிய வாக்குமூலம்

திருகோணமலை சம்பூரில் கல்லில் கட்டப்பட்ட நிலையில் சிறுவனொருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறுவன் தான் குற்றமிழைக்கவில்லை என நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இந்த கொலையுடன் ஏனைய இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களே குற்றத்தை ஒப்புக் கொள்ள கூறியதாகவும் சந்தேகபரான சிறுவன் நீதவானிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பான வழங்கு விசாரணை மூதூர்...

மஹிந்தவின் காலத்தில் இப்படியும் ஒரு மோசடி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் ஒருவருக்கு, விமானத்தில் பயணிப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்றிய, விமானப் பணிப் பெண் ஒருவர் ஜனாதிபதி காரியாலத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். இந்தப் விமானப் பணிப்பெண்ணுக்கு, விமானப் பயணங்களின் போது அதற்காக வழங்கப்படும் 15...

சிறுமிக்கு தவறான சிகிச்சை – சுகாதார அமைச்சு விஷேட விசாரணை

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் வலது காலில் செய்ய வேண்டிய சத்திரசிகிச்சையை இடது காலில் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபாலவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிலிமத்தலாவ பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி...

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் 1286 பேர் இணைப்பு!

அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு மேலும் 1286 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கான நியமனக்கடிதத்தினை பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வழங்கி வைத்தார். அரச முகாமைத்துவ சேவையில் அரச துறையின் ஏழு பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு அதிலுள்ள வெற்றிடங்களுக்கு மேற்படி 1286 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தோடு கடந்த ஒரு வருடத்தில் அரச சேவைக்கு...

செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்?

இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும் தராதரங்களுக்கும் உட்பட்டவகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ்...

குளியாப்பிட்டி சிறுவனுக்கு எச்.ஐ.வி. இல்லை: விசேட நிபுணர் தெரிவிப்பு

குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டியவிலுள்ள பாடசாலை ஒன்றில், முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பரவிய வதந்தியைடுத்து மூடப்பட்ட பாடசாலையை, நாளை நடைபெறவிருக்கும் உயரதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய போதிய அறிவு இலங்கை மக்களுக்கு...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை இனி ரூபவாஹிணியில் பார்க்கலாம்!

நடைபெறவுள்ள ரி-ருவென்டி உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை, தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹிணி தனதாக்கிக் கொண்டுள்ளது. மார்ச் மாதம் 8ஆம் திகதி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஐ.சி.சி. சம்பியன் கிண்ண போட்டிகள்,...

சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு கண்டுபிடிப்பு

சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. வனப் பகுதியின் வெத்தாகல மற்றும் பொதுபிடியவுக்கு இடையிலுள்ள பனபொல - கோஸ்குலன பிரதேசத்தில் இந்த விலங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் இன்றி மஞ்சள், கருப்பு மற்றும் பழுப்பு நிற ரோமங்களையுடைய இந்த விலங்கு, 3 கிலோ 300 கிராம் நிறையுடையது எனவும், 60 சென்றிமீற்றர் வரையான...
Loading posts...

All posts loaded

No more posts