- Tuesday
- January 21st, 2025
சேவையாளர்களின் வரவு - செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர்...
"ராஜபக்ஷ படையணிதான் உலகிலேயே மிகப்பெரிய திருட்டுக் கும்பல். திருடப்பட்ட விதங்கள் இன்னும் மூன்று மாதங்களில் அம்பலப்படுத்தப்படும். சட்டத்தரணிகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்."- இவ்வாறு பிதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது....
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் இலங்கையில் அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், பெற்றோலிய வளத்துறை அமைச்சு பாரிய தொகை கடன் செலுத்த வேண்டியிருப்பதே என்று அமைச்சர் கூறியுள்ளார். பெற்றோல் விலையை குறைப்பதற்கு பதிலாக கடன் சுமையிலிருந்து பொதுமக்களுக்கு...
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி உறுதிப்படுத்தினார். மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான...
கடந்த காலங்களில், அனைத்துத் தரப்பினரும் எம்மை ஏமாற்றிவிட்டனர். அதனால், இனியும் எவரிடத்திலும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், எமது இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை' என்று கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடத்திவரும் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,...
இறுதிக்கட்டப் போர் முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே போர் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பை மஹிந்த ராஜபக்ஷ விடுத்தார் என்றும், 2009 மே 19ஆம் திகதிகூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்றும் இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். அத்துடன், இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது...
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்றி உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணமாக 14 கோடியே 20 இலட்சம்...
இறுதி யுத்தத்தின்போது 400 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் மீட்கப்பட்டதாக நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை தகவல் வெளியிட்ட பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, இவற்றுள் பெருந்தொகையான தங்கத்தை ராஜபக்ஷவினர் கொள்ளையடித்துவிட்டனர் என பகிரங்கமாக ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டினார். அத்துடன், தன்னால் கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் தங்கத்தின் உரிமையாளர்களின் பெயர், விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்று மேலும் தகவல் வெளியிட்ட...
இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வருடாந்தம்...
அரசியலமைப்பு பேரவை அமைப்பது சம்பந்தமான யோசனை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவை அமைப்பது சம்பந்தமான யோசனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அதன் மீதான விவதம் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று காலமானார். கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீழே விழுந்து சுகயீனமுற்று சுயநினைவு அற்றநிலையில் நேற்று மாலை அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர் என்றும், அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான தினேஷ் குணவர்தன எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன்,...
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்ஹூன் ஹூசைன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு சென்று திரும்புகையில் பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்தார் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இடம்பெறவிருக்கும் 'இருபதுக்கு 20' உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உடனிருந்தார். 'ஒரே அணி...
உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
வடமேல் மாகாணத்துக்குட்பட்ட குளியாபிட்டிய பிரதேசத்தில், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்ற வதந்தியால், பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்திருந்த 6 வயது சிறுவனை, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சிறுவனின் பாடசாலைக் கல்வி வாழ்க்கை முடிவுறும் வரையில், புலமைப் பரிசில் திட்டமொன்றை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை விவசாய அமைச்சரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதியாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. 'நச்சுத்தன்மையற்ற நாடு' வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
இவ்வருடத்தின் கடந்த இரு மாதகாலத்திற்குள் சுமார் 40 பேருக்கு எயிட்ஸ் தொற்று பரவியுள்ளது என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரசார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 25 - 49 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாகவுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி - நாச வேலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவின் உதவியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் காய்நகர்த்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் அரசாங்கத்தைப் புறம் தள்ளி இந்திய மத்திய அரசுடன் நேரடி உறவு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மாகாணசபை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு...
Loading posts...
All posts loaded
No more posts