- Tuesday
- January 21st, 2025
மலேஷிய உட்பட வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறும் மோசடிக்கும்பள்களிடம் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு மலேஷியாவில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றிய இருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும்...
முகநூல் ஊடாக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலிப்பிராசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், இவ்வாறான 50 முகநூல் கணக்குகளின் தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்...
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று...
தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் கருகி இருப்பதாக...
நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், இது தொடர்பாக உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசில் பிரேம ஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க, பிரதி அமைச்சர்களான எரான் விக்கிரமரத்ன, அஜித் பி...
கொழும்பு - காலி வீதியில் கல்கிஸை மிஹிந்து மாவத்தையில் இலக்கம் 172/2 இல் அமைத்துள்ள இரு மாடிகள் கொண்ட வீட்டில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியுள்ளனர். வீட்டின் முன்புறத்தில் 'மெடம் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ' எனப் பெயர்பலகை இடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும்,...
பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கான விலையை ஏழு ரூபாவால் குறைக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேலும், நுகர்வோருக்கு ஒரு வார காலத்துக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்வரும் 20ம்...
சிறுமி சேயா சௌதமி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்புவை ஒப்படைப்பதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத் தாக்கியழித்த விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்பே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த அருளானந்தன் நிஸாந்தன்...
மின் வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தேசிய மின் கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மின் விநியோகிக்கும் சகல நிலையங்களுக்கும் இராணுவத்தினர் மூலம் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்றைய தினம் நாட்டின் சகல பகுதிகளுக்குமான மின் விநியோகம் தடைப்பட்டதோடு இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்றைய...
வற்வரி அதிகரிக்கப்பட்டதன்மூலம் சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும். இதனால் சாதாரண பொது மக்களே பாதிக்கப்போகின்றனர் என தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். வற் வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து தொடர்ந்து கூறுகையில், அரசாங்கம் அண்மையில் வரி...
சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு, தங்கொட்டுவ பகுதியில் எரியூட்டப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஐந்து சடலங்களில் நேவி கபில என்ற நபரின் சடலமும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவர் வாகனங்களின் குத்தகை அறவிடல், வட்டிக்கு பணம் வழங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,...
இலரங்கை முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்ததால், நாட்டின் சகல பகுதிகளும் இருளில் மூழ்கின. இதனையடுத்து இலங்கை மின்சாரசபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். ஆறு மாதகாலத்தினுள் மூன்று தடவைகள் நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு ஏற்பட்டமைக்கு பொறுப்பேற்று தனது பதவியை...
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? அவர் உயிருடன் பிடிபட்டாரா என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான...
உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். புதிய அரசாங்கத்தினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலவீனப்படுத்தும் எந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இளம் தொழில் முயற்சியாளர்கள் சங்கத்தின் 17வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் சரியான...
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரசேங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் நேற்று மினுவாங்கொடை நீதவான்...
மறைந்த அஸகிரிய பீடாதிபதி கலகம சிறி அத்தாதஸ்ஸி தேரரின் மறைவுக்கு தமிழ்த்தேசிய் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மறைந்த கலகம தேரருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நிர்மலமான வாழ்க்கையை வாழ்ந்த கலகம தேரர், நாட்டில் பௌத்த சாசனத்தை மிளிரச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். 1936ஆம் ஆண்டு துறவற...
முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டில் மீண்டுமொரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக முக்கியமான தகவல்களை அக்குவேறு ஆணி வேறாக தோலுரித்துக்காட்டி...
Loading posts...
All posts loaded
No more posts