பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வாய்ப்பு

நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தொழில்வாய்ப்பைக் கோரி விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் வயது எல்லை 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக இந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான அறிக்கையினை சமர்ப்பித்திருப்பதாகவும் பட்டதாரிகள்...

பொலிசாரையும் விட்டுவைக்காத Google Street View

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள வீதி பார்வை (Street View) இனைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கிய பொலிசாரை பொதுமக்கள் கண்டுபிடித்துள்ள சுவாரசியமொன்று நடைபெற்றுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இலங்கையில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Street View வசதியைப் பயன்படுத்தி பன்னல பிரதேச பொதுமக்கள் தங்கள் பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரிடம்...
Ad Widget

பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்தநாள்

லேக் நிறுவனத்தை ஸ்தாபித்து இலங்கையில் ஊடகத்துறைக்கு அடித்தளமிட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நாலனி விக்கிரமசிங்க ஆகியோருக்கு மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிறந்தார். ரோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார். பின்னர் சட்டக் கல்லூரி மூலம் சட்டத்தரணியாக...

மருந்து பொருட்களின் விபரப்பட்டியல் தமிழிலும் வேண்டும்

மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விபரபட்டியல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளுமே இலங்கையின் ஆட்சி மொழிகளாகவும், தேசிய மற்றும் நிர்வாக மொழிகளாகவும்...

தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம்-சரத் பொன்சேகா

என் வீட்டுப் பாதுகாப்பைக் கூட கவனத்திற்கொள்ளாது, முழு நாட்டின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டிருந்த போதே, என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், தற்கொலைக் குண்டுதாரி என காதலி என்று, எதிரணியினர் தற்போது கூறிவருகின்றனர்' என்று, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில்...

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய விமானப்படை, இராணுவம், சிவில் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வெளிவரும், உட்செல்லும் பயணிகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். பிரஸல்ஸ்...

வெப்பமான காலநிலை : குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பரவும் தோல் நோய் தொடர்பில், ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கம் அளித்துள்ளார். இந்த காலப்பகுதியில் குழந்தைகள் உடலில் வியர்கூறு ஏற்பட கூடிய ஒருவகை நோய் பரவி வருகிறது.இதற்கு கிரீம் போன்றவை பயன்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை.இவை இரண்டு அல்லது...

உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாமென எச்சரிக்கை!

தற்போது நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் எனவும் இக்காலநிலையானது இன்னு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் காலநிலை மத்திய ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் நீங்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என எண்ணினால் அதற்கு வெப்பதிலிருந்து பாதுகாப்புத் தேவை என மருத்துவ அதிகாரி லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வெப்பமானது குழந்தைகளின் இதயம்...

இலங்கையிலும் ஸிகா வைரஸ் பரிசோதனை!

நேற்று காலை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஸிகா வைரஸ் பரிசோதனை செய்யும் திட்டத்தினை சுகாதார அமைச்சர் வைத்தியர் பாலித மஹிபால அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஆரம்பித்துவைத்தார். குறிப்பாக தென் அமெரிக்காவில் ஸிகா வைரஸ் பரவிவருவதுடன் அங்கு பெரும் நெருக்கடிநிலை நிலவி வருகின்றது. இதனையடுத்து அங்கிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு...

பாண் விலையை அதிகரித்தமைக்கான உண்மைக் காரணம் தெரியுமா?

அரிசிக்கான நுகர்வை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் பாணுக்கான விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அமைச்சர் விஜயகலாவின் புதல்விகளின் நடன அரங்கேற்றத்தில் மைத்திரி, ரணில், சம்பந்தன் பங்கேற்பு!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,...

பிரதமருக்கு எதிராக முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த வாரம், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட நடைபவனிக்கு எதிராக, பொலிஸ் மா அதிபரிடம் 'சிங்கள ராவய' அமைப்பு முறைப்பாடொன்றைச் செய்துள்ளது. இந்த நடைபவனியால், குறித்த பிரதேசத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது என்று, மேற்படி அமைப்பின் பொதுச் செயலாளர் வண.மாகல்கந்த சுதந்த தேரரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திரிகாவின் மகளைக் கொல்ல மஹிந்த தீட்டிய திட்டம்!

தனது மகள் யசோதராவை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டம் தீட்டியிருந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. ஹூனுப்பிட்டியவில் நேற்று நடந்த சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கான தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியத போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'கடந்த 9 ஆண்டுகளாக தான் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கட்சியிலிருந்த...

புத்தாண்டுக் காலத்தில் வரப்போகும் புதுப் பிரச்சினை!

கடந்த சில வாரங்களாக மின்சாரத் தடைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மற்றொரு புதுப்பிரச்சினை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன. இதன் காரணமாக நகரப்...

நாமலுக்கு 45 கோடி ரூபாவை தரகாக வழங்கியது இந்திய நிறுவனம்!

கொழும்பில் அமைக்கப்படவிருந்த கிரிஷ் சதுக்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்காக 45 கோடி ரூபாவை தரகுப் பணமாக நாமல் ராஜபக்‌ஷ பெற்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை நிதி மோசடி தடுப்புப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கொண்ட கிரிஷ் சதுக்கம் ஒன்றை அமைக்க இந்திய...

திங்கட்கிழமை முதல் பாணின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து (21) பாணின் விலையை 3 அல்லது 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரிமா நிறுவனம் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 7 ரூபா 20 சதமாக அதிகரித்ததாலும் பின்னர் நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு மீண்டும் அது குறைக்கப்பட்டது. நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த கோதுமை மாவின் விலையை...

23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்

'2016ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் 23ஆம் திகதி நிகழவுள்ளது. பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, நேற்று தெரிவித்தார். இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.09 மணிமுதல் 7.24 மணிவரை நிகழும் என தெரிவிக்கப்படுகின்றது....

இலங்கையில் நடப்பது போன்று உலகில் எங்கும் இடம்பெறவில்லையாம்!

அண்மையில் பியகமவில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும், நேற்று ஜா எல கொட்டுகொடவில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியானவை. அத்துடன் இவை போன்று உலகில் எங்கும் மின்மாற்றி வெடிப்புகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே இவை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவங்கள்...

குடும்பத்தினர் அனைவரையும் சிறையில் போட்டாலும் அரசியலில் இருந்து விலகமாட்டேன்!- மஹிந்த

தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையில் போட்டாலும் தனது அரசியல் பயணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 'ஜன சட்டன' (மக்கள் போராட்டம் ) என்ற பெயரில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட...

இன்று மின் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பலாம்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது செயற்படுத்தப்படுவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று மாலையளவில் 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக, இலங்கை மின்சாரசபைத் தலைவர் அனுர விஜயபால தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யின், இன்று மாலை மின் வெட்டு இன்றி, முழுமையான மின்சாரத்தை...
Loading posts...

All posts loaded

No more posts