- Tuesday
- January 21st, 2025
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் முன்னரே தயாரிக்கப்பட்ட உருக்கு, பிளாஸ்டிக்...
சாவகச்சேரி பகுதியில் ஜெகட் இரண்டு, சீ நான்கு (பிளாஸ்டிக் வெடிபொருள்) பேக் மூன்று மற்றும் சிம் காட் ஐந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசாங்கம் முயற்சிப்பது உண்மையை மறைத்து இது குறித்து குறைந்த மதிப்பீடுகளை வழங்கவே எனவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் இது உண்மை...
சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவது இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கும் சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களுக்கும் நிறைய...
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள வரி அதிகரிப்பு,டொலரின் அதிகரிப்பு காரணமாக தமது தொழிற்துறை பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் முடிவுக்கு வந்தததாக இந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எனவே...
'வாழையிலையில் சுற்றிக்கொண்டுவந்த சாப்பாட்டைத்தான், அன்று நான் சாப்பிட்டேன். அதேபோலத்தான் இன்றும் சாப்பிடுகின்றேன்' என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'மன்னன் சாப்பிட்டது போல நான் சாப்பிடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கலின் பெறுபேறாகவே தான், ஜனாதிபதியானார் எனக் கூறிய ஜனாதிபதி, அதேபோல அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட அரச சேவையாளர்களுக்குத் தேவையான நிவாரணங்களை, வழங்குவதற்குக் குழுவொன்றை நியமிப்பேன்...
புத்தரின் போதனைக்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனக்கு ஞாபகமூட்டினார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார். புத்தரின் போதனைக்கு அமைய செயற்படாமல் விகாரைகளுக்குச் செல்வதிலும் பலனில்லை என்றும், விகாரைகளுக்கு செல்வதால் மட்டும் பௌத்தர் ஆகிவிட முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில்...
அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது. 16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நஷ்டப்படுத்தியது மாத்திரமன்றி பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த...
மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 'மின்சாரப் பரிசு' வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, 'கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்' என்று கூறினார். இந்தப் போட்டியில்...
ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான தரக்குறைவான மருந்துகள் கடந்த ஐந்து வருடங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுக்குழுவான “கோப்“ தெரிவித்துள்ளது. அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தற்போது கோப் குழுவின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்திணைக்களத்தை வந்தடையும் மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் காலாவதி திகதி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (28) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான புலு ரிட்ச் (Blue Ridge) கப்பலை பார்வையிட்டார். கப்பலுக்கு வருகை தந்த ஜனாதிபதி, அமெரிக்க கடற்படையினரால் இராணுவ மரியாதைகளுடன் கௌரவமாக வரவேற்கப்பட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கில் புலு ரிட்ச் கப்பல் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு...
வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக, எதிர்வரும் தினத்தில் ஏற்படக் கூடிய மின்சார பற்றாக்குறையை நிவர்த்திச் செய்யும் வகையில், நடைமுறையில் உள்ள நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.>புத்தாக்க சக்திவலு அதிகார சபையின் தலைவர் கீர்த்தி விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிக வெப்பம் காரணமாக மின்சார நுகர்வு...
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று யுத்த ரீதியில் எல்.ரீ.ரீ.ஈ, தோற்கடிக்கப்பட்டாலும், எமது பாதுகாப்புப் படைகளிடம் யுத்த ரீதியில் தோல்வி கண்டபோதும், யுத்தக் களத்திலிருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும் ஈழத்துக்கான கனவை காணும் புலிகளின் கொள்கை இன்னும் தோல்வியடைவில்லை.எல்.ரீ.ரீ.ஈ-இன் தனி ஈழத்துக்கான கருத்து என்பது, துப்பாக்கிகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத...
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 500 மெகாவோட்ஸ் அலகுகளை கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக, சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சம்பூரில் மின்சார நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்ற நிலையில் அதன் காரணமாக சுற்றாடல் பிரச்சினை...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அண்மைய வரைபடத்தில் இலங்கையும் ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் தளமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இன்றைய தேசிய சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நிலைமை, மோதல்கள் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனமான “சர்வதேச மோதல் நிலை தொடர்பான ஆய்வு நிலையம்” இறுதியாக மேற்கொண்ட ஆய்வில்...
அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக” (Standby Arrangement) கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. இது தொடர்பாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில் பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை,...
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்புகளுக்கு சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரித்து விட முடியாது என ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பியகம, கொட்டுகொட பிரதேசங்களின் மின்மாற்றிகள் அண்மையில் வெடித்தன. இதனால் நாடு முழுவதும் சில நாட்கள் நீண்ட நேர மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மின்மாற்றிகள் எப்படி வெடித்தன என்பது...
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவினால் ஆரம்பிக்கப்பட்ட 'கம் உதாவ' (கிராம எழுச்சி) நிகழ்ச்சித் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் சில தேர்தல் தொகுதிகளில் கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1980 களில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாட்டின் நாலாபுறமும் வாழும் மக்களை நெருங்கும் பொருட்டு கம் உதாவ நிகழ்ச்சித் திட்டத்தினை...
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கடந்த...
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ்...
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் எந்தவொரு மோசடியும் இடம்பெறவில்லை. இதன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றோம் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று சபையில் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை நிலையியற் கட்டளை 23/3 இன் கீழ் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுர திஸாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு...
Loading posts...
All posts loaded
No more posts