- Wednesday
- January 22nd, 2025
வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பு கோட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள். பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அரசாங்கம் தங்களுக்கு தருவதாகக் கூறிய வேலைவாய்ப்புக்களை இதுவரை வழங்கவில்லை எனவும், “தொழில் வழங்கப்படும்” என்ற உறுதிமொழி வாய் வார்த்தையில் மட்டுமே காணப்படுவதாகவும், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை...
சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்னமும் கொழும்புக்கு கொண்டுவரப்படவில்லையெனவும் அவர் வவுனியாவில் வைத்தே விசாரணை செய்யப்படுவதாகவும் சிறீலங்காக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைது தொடர்பாக கடந்த திங்கட் கிழமை தீவிர விசாரணைப் பிரிவின் ஆய்வாளர் இந்துனில் கொழும்பு நீதிமன்ற நீதவான் அருணி ஆட்டிக்கல முன்னிலையில்...
கடந்த நான்கைந்து ஆண்டுகளில் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக தானம் செய்திருப்பதாக நீதிமன்றம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் தரப்பு வழக்கறிஞர் லஷான் டயஸ் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட...
சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். சந்தேகநபர்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக சுகாதார...
பிரபல இசைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இலங்கை இசை நிகழ்ச்சியை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒஸ்கார் விருது நாயகன் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இம்மாதம் 23ம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தரப்பிடமிருந்து ஏற்பாடுகளை மற்றுமொரு தரப்பு பறித்துக்கொள்ள முயற்சித்துள்ளது. இந்த இரண்டு தரப்புமே நல்லாட்சி அரசாங்கத்தை வெற்றியீட்டச்...
படையினர் சோதனை நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொலஸஸார், முப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி மற்றும் மன்னாரில் ஆயுதங்கள், தற்கொலை குண்டு அங்கி போன்றன மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு பாதுகாப்பு படையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சந்தேகத்திற்கு இடமான நபர்களை கைது...
ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல எனவும், நாடாளுமன்றத்தின் பொறுப்பு எனவும் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தான் நாடாளுமன்றத்துக்குப் பூரண அனுமதியை வழங்கியிருப்பதாகவும்...
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொரள்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். பீரிஸிடம் சி.ஐ.டியினர் இரண்டரை மணிநேரம் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர். சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், மறுநாள் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அது பற்றி பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த...
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நேற்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் கூறினார். போதைப் பொருளை கடத்தி...
சிறீலங்காவுக்கு திடீர் பயணமொன்றினை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இதன்பின்னர் வெள்ளிக்கிழமை மாலை சிறீலங்காவுக்கான பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன ஹெற்றியாராச்சியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை...
கடந்த காலங்களில் காணாமல் போனதாக கருதப்பட்டு, காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் அல்லது மூவர் மாலைதீவில் உள்ள சிறைச்சாலையில் இருப்பதாகவும், காணமற்போனோர்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். பட்டியலில் உள்ள நால்வர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் குறித்த விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்....
ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட இருந்த பெறுமதி சேர் வரி (VAT) மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மறு அறிவித்தல் வரும் வரை முன்னர் இருந்தது போன்று...
மாகாண முதலமைச்சர்களிடம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழு தீர்மானித்துள்ளது. மக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக அந்த குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். 5000 இற்கும் அதிகமான யோசனைகளை பதிவுசெய்துள்ளதாக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் தலைவர்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வால்பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என அவர் ஆதரவு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்த யோசனையாக இருந்தாலும் அதனை நாடாளுமன்றில் முன்வையுங்கள். அதை நாம் கருத்திற்கொள்வோம் என்றும் தெரிவித்தார். சிறிகொத்தவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஆலோசனை கூறி, கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில்...
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்றுத் திறந்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த...
சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, 'பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்' என்றார்.
சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்றைய தினம், நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடப்போவதாகவும் குறிப்பிட்டார். நிதி அமைச்சுக்கான புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு...
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தில் இருந்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மயிலை ஒரு கையிலும் துப்பாக்கியை மறு கையிலும் பிடித்தவாறு வௌியான குறித்த புகைப்படத்தில் இருந்த நபர் வென்னப்புவ - பொரலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த டப்ளியூ.பிரியந்த பிரணாந்து எனத் தெரியவந்துள்ளது. இவர் தற்போது இத்தாலியில் பணிபுரிந்து வருகின்றார்....
எல்ல வெல்லவாய கரந்தகொல்ல பிரதேசத்திலுள்ள இராவண எல்ல கற்குகை ஒன்றினுள் சுயநினைவிழந்து காணப்படுவதாகக் கூறப்படும் இராவணனை நினைவு திரும்பச் செய்வதாகத் தெரிவித்து மொறட்டுவ பிரதேசத்திலுள்ள மந்திரவாதி பெண்ணொருவர் உட்பட 18 பேர் நேற்றுமுன்தினம் அக்குகையினுள் சென்றிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று இக்குகையினுள் வழமைக்கு மாறாக ஏதாவது ஒரு...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்களுடன் தொடர்புபட்ட தடயங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா...
Loading posts...
All posts loaded
No more posts